Advertisment

இரு நிபந்தனைகள் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கலாம்: மத்திய அரசு பச்சைக் கொடி

ஏப்ரல் முதல் வாரத்தில் 10%க்கும் அதிகமான நேர்மறை விகிதங்களை வெறும் 200 மாவட்டங்களே கொண்டிருந்தன. ஏப்ரல் மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 600 மாவட்டங்களாக அதிகரித்தது.

author-image
WebDesk
New Update
Terms of unlock, coronavirus, second wave,

 Kaunain Sheriff M 

Advertisment

positivity below 5%, 70% of vulnerable groups vaccinated: சாத்தியமான மூன்றாம் அலை வராமல் இருப்பதற்காக வாரத்திற்கு 5%க்கும் குறைவான நேர்மறை விகிதம், பாதிக்கப்படக் கூடிய வயது கொண்ட மக்களில் 70% பேருக்கு தடுப்பூசி மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தை மற்றும் கவனிப்பின் சமூக உரிமைகள் என இவை மூன்றும் உறுதி செய்யப்படும் நிலையில் மாவட்டங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என்று மத்திய அரசு செவ்வாய்க் கிழமை அன்று கூறியுள்ளது.

செவ்வாயன்று, ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரலும் இந்தியாவின் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் பால்ராம் பார்கவா, படிப்படையாக ஊரடங்கு தளர்வுகளை பின்பற்றுவதால் கொரோனா தொற்றில் பெரிய எழுச்சி ஏற்படாது என்றும், மாவட்டங்கள் தடுப்பூசி அளிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூன்றாவது அலையைத் தடுப்பதைப் பொறுத்தவரை, 5 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை கொண்ட மாவட்டங்கள் சிறிய தளர்வுகளை அறிவிப்பது மிகவும் எளிதானது. பாதிக்கப்படக்கூடிய மக்கள் குறைந்தது 70 சதவீத தடுப்பூசியை அடைய வேண்டும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த இலக்கு எட்டப்படவில்லை என்றால் அவர்கள் தடுப்பூசிகள் இலக்கை எட்டிய பிறகு ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் பார்கவா கூறினார்.

மேலும் படிக்க : மத்திய, மேற்கு மாவட்டங்களில் கை கொடுக்காத ஊரடங்கு… மோசமான பாதிப்பை சந்திக்கும் கொங்கு மண்டலம்

இந்தியாவில் உள்ள மொத்த 718 மாவட்டங்களில் 344 மாவட்டங்களில் கொரோனா நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பார்கவாவின் கருத்து வெளியாகியுள்ளது. மே 7ம் தேதி அன்று 92 மாவட்டங்களில் மட்டுமே நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக இருந்தது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மே 13ம் தேதி அறிவிப்பின் படி 45 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 32% பேர் தங்களின் முதல் டோஸை பெற்றுக் கொண்டனர்.

நாம் கடுமையான இரண்டாம் தொற்றின் மத்தியில் இருக்கின்றோம். தற்போது அதன் வீரியம் குறைந்து வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் 10%க்கும் அதிகமான நேர்மறை விகிதங்களை வெறும் 200 மாவட்டங்களே கொண்டிருந்தன என்பதை தரவுகள் காட்டுகின்றன. ஏப்ரல் மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 600 மாவட்டங்களாக அதிகரித்தது. தற்போது 239 மாவட்டங்கள் 10%க்கும் அதிகமான கொரோனா நேர்மறை விகிதங்களைக் கொண்டுள்ளது. 145 மாவட்டங்களில் நேர்மறை தொற்று விகிதம் 5 முதல் 10%க்கு இடையே உள்ளது. மேலும் 350க்கும் மேற்பட்ட இந்திய மாவட்டங்களில் தற்போது நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது. எனவே நாம் தற்போது சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்று பார்கவா கூறினார்.

மாவட்ட அளவிலான கட்டுப்பாடுகள் நல்ல முடிவுகளை காட்டினாலும் இது நிலையான தீர்வு அல்ல. எனவே நாம் ஊரடங்கினை எளிமையாக்குவதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். படிப்படியாக, மெதுவாக அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மூன்று முக்கிய முடிவுகளின் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஒன்று, குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு வாரத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதிற்கு மேல், இணை நோய் கொண்டவர்களுக்கும் 70% வரை தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும். கோவிட்-பொருத்தமான நடத்தை மற்றும் கவனிப்புக்கான சமூக உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வருட இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க இருப்போம் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

ஊரடங்கிற்கு முற்றுபுள்ளி வைக்க மக்கள் ஆதரவு தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவ்வாயன்று, இந்தியாவின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி கே பால், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்கான இரண்டு டோஸ் அட்டவணையில் இந்தியா பின்பற்றும் என்று கூறினார். மேலும் கலப்பு தடுப்பூசிகள் இந்தியாவின் தடுப்பூசி திட்டங்களில் ஒரு பகுதி இல்லை என்பதையும் அவர் கூறினார்.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக வழங்கப்படும் அதில் எந்த மாற்றமும் இல்லை சந்தேகமும் இல்லை. இரண்டு டோஸ்களையும் நாம் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தடுப்பூசிகளை கலக்கும் போது, இரண்டாம் டோஸின் போது பாதகமான விளைவுகளை உடல் காட்ட வாய்ப்ப்புகள் உள்ளது. ஒரு தடுப்பூசி முற்றிலும் வேறான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் போது இது ஆராய்ச்சிப்பூர்வமான கருத்தாகும். அதே நேரத்தில் முதல் டோஸ் வேறோரு தடுப்பூசியிலும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பு மருந்தில் இருந்தும் பெறும் போதும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது. நேர்மறையான விளைவின் சாத்தியமும் நம்பத்தகுந்ததாகும்… மற்ற நாடுகளிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இது தீர்க்கப்படாத விஞ்ஞான கேள்வி… தடுப்பூசி மூலோபாயத்தில் எந்த மாற்றமும் இல்லை, தடுப்பூசிகளும் கலக்கப்படவில்லை ”என்று பால் கூறினார்.

நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி) கீழ் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவரான டாக்டர் என் கே அரோரா, முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இரண்டு கோவிட் தடுப்பூசிகளைக் கலக்கும் ஒரு சாத்தியத்தை சோதிக்கும் பணி விரைவில் தொடங்கப்படலாம் என்று கூறியிருந்தார். சிறந்த பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகளின் கலவையை நாங்கள் தேடுகிறோம். இந்த நேரத்தில், பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் அவை தொற்று மற்றும் வைரஸ் பரவுவதிலிருந்து நாங்கள் விரும்பிய அளவிற்கு பாதுகாப்பை வழங்கவில்லை, ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment