Advertisment

ஜோதிடர் மீது 8 கோடி மோசடி புகார் : முன்னாள் முதல்வரின் மனைவிக்கு தொடர்பா?

முன்னாள நீதிபதியிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி புகாரில் முன்னாள் முதல்வரின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
ஜோதிடர் மீது 8 கோடி மோசடி புகார் : முன்னாள் முதல்வரின் மனைவிக்கு தொடர்பா?

உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகலா பி எஸ்,( 68) என்பவரிடம் ரூ .8 கோடிக்கு மேல் மோசடி செய்த ஜோதிடர் யுவராஜ் ராமதாஸ் (52) என்பவர் பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2018 ஜூன் முதல், நவம்பர் 2019-வரை அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல பேரிடம் 8.27 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரில், யுவராஜ்,  2017-18 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற எஸ்.பி. ஒருவரால்  அறிமுகமானவர் என்றும், அவர் எதிர்காலத்தை சரியாக கணிப்பதாகவும், உங்களுக்கு ஒரு உயர் பதவிக்கு காத்திருப்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் "உங்களைப் போன்ற தகுதியான பெண்களை உயர் பதவிகளுக்கு மத்திய தலைவர்கள் தேடுகிறார்கள் என்று  கூறிய யுவராஜ் உயர் பதவி பெறுவதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி மேலுமு் கூறுகையில், எனக்கு சொந்தமான ஒரு வீடு மற்றும் ஒரு குடியிருப்பில் அடமானம் வைத்து ரூ .3.77 கோடி ஏற்பாடு செய்து, யுவராஜுக்கு கொடுத்தேன். அதுவும் போதாது என்பதால்,நண்பர்களிடம் ரூ .4.50 கோடி கடன் பெற்று அவரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட யுவராஜ் அதன்பிறகு நீதிபதியுடனான தகவல்தொடர்புகளை நிறுத்திவிட்டதாகவும், அவர் கூறியபடி எந்த பதவியையும் வாங்கித்தரவில்லை என்றும் அவர் கூறினார்.

இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜே.டி (எஸ்) தலைவருமான எச் டி குமாரசாமியின் மனைவியும் நடிகையுமான ராதிகா குமாரசாமியுடன், யுவராஜுக்கு சுமார் 1.24 கோடி ரூபாய் நிதி பரிவர்த்தனை இருந்தது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த நடிகை ராதிக குமாரசாமி, கடந்த வாரம் குற்றப்பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதை தொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, 17 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்தினருக்கு தெரிந்த யுவராஜிடமிருந்து ரூ .15 லட்சம் பெற்றதாகவும், ரூ .60 லட்சம் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகவும் கூறினார்

இந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து  ​​எச் டி குமாரசாமியிடம் கேட்டபோது,எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். "அது யார்?" என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். "அரசாங்கத்தில், முக்கியமான நபர்களிம் நெருங்கிய நட்புறவு இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் நிதி மோசடி செய்திருப்பதாகவும், அவர் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இணை காவல் ஆணையர் (குற்ற) சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட யுவராஜ் வீட்டில் சோதனை செய்தபோது, ரூ .26 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ .91 கோடி மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன, ”என்று பாட்டீல் கூறினார்.

மேலும் மும்பையில் தொழிலதிபரின் சொத்து மோதலைத் தீர்ப்பதற்காக கூறி ரூ .10 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் 2020  டிசம்பர் மாதம் முன் ஜாமீன் பெற்றார். இது குறித்து ஒரு விரிவான விசாரணை அதிகாரியால் செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியதன் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் ”என்று ஜே.சி.பி (குற்றம்) பாட்டீல் கூறினார்.

மேலும் தேசிய மற்றும் மாநில அளவில் பாஜக மற்றும் காங்கிரஸின் பல அரசியல் தலைவர்களின் நிறுவனத்தில் யுவராஜின் படங்கள் இருப்பதாகவும், கர்நாடக அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கும் பலரும் இதில் உள்ளடக்கம் என்றும் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment