Advertisment

அனைவருக்கும் நல்ல நண்பனாய் இருந்த வோரா; காங்கிரஸ் இழந்த மற்றொரு பொக்கிஷம்!

திங்கள் கிழமை அன்று, கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு பிறகு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மரணம்

author-image
WebDesk
New Update
The grand old man of Cong, Treasurer to Governor, friend to all

 Manoj C G 

Advertisment

”எனக்கு வாழ்க்கையில் நிறைய கிடைத்தது. வேலை செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. இன்றும் கூட வேலை செய்வதற்கு எனக்கு ஆர்வம் இருக்கிறது” மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்ற போது தன்னுடைய பிரியாவிடை உரையில் மோதிலால் பேசியது இது தான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நேரு - காந்தி குடும்பத்திற்கு சிறந்த விசுவாசியாக இருந்த அந்த கால அரசியல்வாதி. ஆனால் அவருடைய 50 ஆண்டு அரசியல் வாழ்க்கை கட்சிகளை தாண்டியும் இயல்பான நடைமுறை, அறிவு மற்றும் அடக்கத்தின் காரணமாக நல்ல நண்பர்களை பெற்றார்.

திங்கள் கிழமை அன்று, கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு பிறகு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் , தன்னுடைய 93வது பிறந்த நாளை கொண்டாடி முடித்த ஒரே நாளில் உயிரிழந்தார்.

அவருடைய நீண்ட அரசியல் பயணத்தில், 1980களில் இரண்டு முறை ஒருங்கிணைந்த மத்திய பிரதேசத்தின் முதல்வராக பணியாற்றியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் ஆளுநராக 1990களில் பணியாற்றினார். அப்போது இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முறை அரசுகள் பதவியேற்றன. 1998ல் இருந்து இந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றது வரை நாடாளுமன்ற உறுப்பினராகவே பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக 18 ஆண்டுகள், அகமது படேல் 2018ம் ஆண்டு அந்த பதவியை அடையும் வரை, பொறுப்பு வகித்தார். கொரோனா வைரஸால் அகமது படேல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரணம் அடைய, காங்கிரஸ் கட்சி மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு முக்கியமான தலைவரை இழந்துள்ளது.

ராம் மனொகர் லோஹியாவின் சம்யுக்தா சோசியலிச கட்சியின் சமூக செயல்பாட்டாளாராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினார். தேர்தல் வாழ்க்கை 1960களில் ராய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டதில் இருந்து துவங்குகிறது. 1972ம் ஆண்டு முதன்முறையாக எம்.எல்.ஏவாக பொறுப்பேற்கிறார். 1985ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ராஜீவ் காந்தி, பதட்டமான பஞ்சாப் மாநில ஆளுநராக அவரை நியமித்த போது, அர்ஜூன் சிங் வோராவை அடுத்து பதவிக்கு வர தேர்வு செய்தார். மாதவ்ராவ் சிந்தியா போன்ற போட்டியாளர்களுக்கு அந்த நாற்காலி கிடைத்துவிடக் குடுஆது என்பதை உறுதி செய்ய இம்முடிவு எட்டப்பட்டது.

மேலும் படிக்க : அதிருப்தி தெரிவித்த தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ப்ரியங்கா காந்தி

சிங் அரசாங்கத்தின் இணைப்புகளை துண்டிப்பார் என்று அறியப்பட்டாலும் வோரா நண்பர்களை உருவாக்கும் குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். அர்ஜூன் சிங் எவ்வாறு வோராவை எப்படி அதே வரிசையில் வைக்க விரும்பினார் என்பதை மூத்த தலைவர்கள் நினைவுகூறுகின்றனர். அப்போது பி.சி.சி. தலைவராக பணியாற்றிய திக்விஜய சிங், ஒவ்வொரு நாளும் சாத்தியமற்ற கோரிக்கைகளுடன் குழு ஒன்றை வோராவிடம் அனுப்புவார். ஆனால் வோரா தொந்தரவு செய்யப்படவில்லை. ஆனால் அனைத்தையும் ஒப்புக்கொள்ளவும் இல்லை, அவர் புத்திசாலி. மோதல்களுக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை.

பிப்ரவரி 1998ம் ஆண்டு அர்ஜூன் சிங் திரும்பி வந்த போது வோரா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் டெல்லியில் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார். ஏரியில் இருந்து கடலுக்கு என்று அதனை மேற்கோள்காட்டுவார். ஜபல்பூர் நீதிமன்றத்தின் சில கண்டிப்புகளை தொடர்ந்து சிங் பதவி விலக பின்பு மீண்டும் வோரா மத்திய பிரதேச முதல்வராக பொறுப்பேற்றார்.

1993ம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ் அரசு, வோராவை உ.பி.யின் ஆளுநராக நியமித்தார். அதுவும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே. பெரிய அரசியல் கலகத்தின் நடுவில் இருப்பதைபோல் உணர்ந்த அவர் சமாஜ்வாடி கட்சி மற்றும் பி.எஸ்.பி கட்சியினால் தூண்டப்பட்டார். 1995ம் ஆண்டு உ.பி. சட்டமன்றத்தை கலைக்க அவர் எடுத்த முடிவை முலாயம் சிங் யாதவ் மற்றும் பி.எஸ்.பி. தலைவர்கள் எதிர்த்தனர். மாயாவதி ஆட்சி சிறுபான்மை நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் முலாயம் சிங் மீண்டும் ஆட்சிக்கு வர நம்பிக் கொண்டிருந்தார்.

வோரா மீண்டும் அரசியலுக்கு வந்தார். ராஜ்நந்கவுன் தொகுதியில் நின்று 1998ம் ஆண்டு மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார். 2000ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியை 2018ம் ஆண்டு வரை வகித்தார் அவர்.

2002ம் ஆண்டில் இருந்து வோரா அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார், மேலும் யங் இந்தியன் நிறுவனத்தில் இயக்குநராகவும் இருந்தார். சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன், வோரா டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

வயதான நிலையிலும் கூட அவர் சுறுசுறுப்பாக இயங்கினார். 24, அக்பர் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை தினமும் காணலாம். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, 92 வயதிலும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் வோரா பங்கேற்பது குறித்தும், அவரது கருத்தை தயக்கமின்றி பதிவிட்டது குறித்தும் பேசினார்.

ராம்நாத் கோவிந்த், வெங்கைய நாயுடு, மோடி, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் வோராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பணிவு ஆளுமை கொண்டவர். தலைவர்கள் அரசியலை பிளவுபடாத நம்பிக்கையுடன் நடத்திய தலைமுறையை சேர்ந்தவர் என்று ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார். மாநிலங்களவை தலைவரான நாயுடு, வோரா ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறியுள்ளார். சத்தீஸ்கரில் வசிக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினை தடுக்க அவர் மேற்கொண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த முயற்சிகள் பலனை வழங்கி வருகின்றன என்றார்.

பரந்த நிர்வாகம் மற்றும் நிறுவன அனுபவம் குறித்து மோடி குறீப்பிட்டி பேசினார். வோராவின் மரணம், யாராலும் நிரப்பப்படாத ஒரு பெரிய வெற்றிடத்தை தந்துள்ளது என்று சோனியா காந்தி கூறினார். ராகுல் அவரை உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரர் என்றும் சிறந்த மனிதர் என்றும் நினைவு கூர்ந்தார். . ஸீரோ நேர அறிக்கைகள், சிறப்பு குறிப்புகள், பிரச்சனைகளை பற்றி பேசுவது என்று நாடாளுமன்றத்தில் சுறுசுறுப்பாக அவர் திகழ்ந்தார் என டி. ராஜா கூறியுள்ளார். ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு அடையாளம் என்ற் ஜனார்தன் திவேதி கூறினார். வோராக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவரது மகன்களில் ஒருவர் சத்தீஸ்கரின் துர்க் நகர் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment