Advertisment

சிபிஐ வழக்குகள்: காங்கிரஸ் (2004-2014) , பா.ஜ.க ( 2014 முதல்).. 200 முக்கிய தலைவர்கள் பெயர் அடங்கிய பட்டியல்

மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் சிபிஐ வழக்குப் பதிவு, கைது, ரெய்டு அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்ட 200 முக்கிய அரசியல் தலைவர்களில் 80% எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நீதிமன்ற பதிவுகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளிட்டவைகள் வைத்து ஆய்வு மேற்கொண்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிபிஐ வழக்குகள்: காங்கிரஸ் (2004-2014) , பா.ஜ.க ( 2014 முதல்).. 200 முக்கிய தலைவர்கள் பெயர் அடங்கிய பட்டியல்

மத்தியில் காங்கிரஸ் (UPA) (2004-2014) ஆட்சியில் இருந்த போது மற்றும் தற்போது பாஜக (NDA)

(2014 - தற்போது வரை) ஆட்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80% எதிர்க்கட்சியாக இருந்தபோது விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நீதிமன்ற பதிவுகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளிட்டவைகள் வைத்து ஆய்வு மேற்கொண்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.

Advertisment

காங்கிரஸ் (2004-2014)

பா.ஜ.க தலைவர்கள்

அமித் ஷா

சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் 2010இல் அப்போதைய குஜராத் அமைச்சர் அமித் ஷாவை சிபிஐ கைது செய்தது. 3 மாதங்கள் சிறையில் இருந்தார். பின் ஜாமீனில் வெளிவந்தார். ஷா மற்றும் பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஷாவை பிரதான குற்றவாளியாகக் குறிப்பிட்டது. டிசம்பர் 2014 இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மும்பை நீதிமன்றம் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை. இந்த வழக்கில் இருந்து கட்டாரியாவும் 2015இல் விடுவிக்கப்பட்டார்.

ராஜேந்திர ரத்தோர்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசில் அமைச்சராக இருந்த ராஜேந்திர ரத்தோர், கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல ரவுடி தாரா சிங்கின் போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு 2006இல் சிங்கை சுட்டுக் கொன்றது. ரத்தோர் கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பின் உள்ளூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் 2018இல் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

கலி ஜனார்த்தன ரெட்டி

கர்நாடகா பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், எடியூரப்பா அரசில் இருந்த அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டி 2011ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சிபிஐ பல குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் இருந்த ரெட்டி 2015இல் ஜாமீனில் வெளிவந்தார். 2021ஆம் ஆண்டில், பெல்லாரிக்கு செல்ல ரெட்டி வேண்டுகோள் வைத்து மனுத்தாக்கல் செய்தார். இதை சிபிஐ எதிர்த்தது, ஆனால் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

publive-image

இதே வழக்கில், ரெட்டியின் நெருங்கிய உதவியாளரும், பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலுவின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த வழக்கில் மேலும் 4 எம்எல்ஏக்களை கைது செய்தது. பாஜக எம்எல்ஏவும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சிங், ஸ்ரீராமுலுவின் மருமகனும் அவரது கட்சியான பிஎஸ்ஆர் காங்கிரஸின் எம்எல்ஏவுமான சுரேஷ் பாபு ( பாஜகவில் இருந்து விலகியவர்), சுயேச்சை எம்எல்ஏக்கள் பி நாகேந்திரா மற்றும் சதீஷ் சைல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பி.எஸ் எடியூரப்பா

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் சுரங்க உதவிகளில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா மீது சிபிஐ 2012இல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் எடியூரப்பா, அவரது மகன்கள் பி.ஒய் விஜயேந்திரா மற்றும் பி.ஒய் ராகவேந்திரா மற்றும் அவரது மருமகன் ஆர்.என் சோகன் குமார் ஆகியோர் மீது அதே ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீலின் துணை நிறுவனங்கள் பாஜக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்ப அறக்கட்டளையின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ.40 கோடி செலுத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிஐ கூறியது. 2016ஆம் ஆண்டில், இந்த வழக்கில் இருந்து ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்

ராஜ்குமார் ஜாடியா, ராம்விலாஸ் பஸ்வான் (எல்ஜேபி)

பாஜக தலைவர் சத்யநாராயண் ஜாடியாவின் மகன் ராஜ்குமார், பொகாரோ ஸ்டீல் ஆலையில் முறைகேடான பணி நியமனம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக 2014 ஜனவரி-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அவருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.ராசியின் மகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, ​​ராஜ்யசபா தேர்தலில் ஜாடியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எல்ஜேபி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் 2014 மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியபோது அவரும் பெயரும் அடிபட்டது.

அவரது உதவியார்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அவரை விசாரிக்கவில்லை. 2015ல் எஸ்.எம்.ராசி, ராஜ்குமார் மற்றும் பட்நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பிஎஸ்பி

பாபு சிங் குஷ்வாஹா, ராம் பிரசாத் ஜெய்ஸ்வால், மாயாவதி

மாயாவதி தலைமையிலான உ.பி. அரசில் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த பாபு சிங் குஷ்வாஹா, தேசிய ஊரக சுகாதார இயக்கம் (என்ஆர்எச்எம்) ஊழல் வழக்கில் 2012இல் சிபிஐயால் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு குஷ்வாஹா கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பிஎஸ்பி எம்எல்ஏ ராம் பிரசாத் ஜெய்ஸ்வாலையும் சிபிஜ கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 70க்கும் மேற்பட்ட எப்ஐஆர்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு மாயாவதியையும் சிபிஐ விசாரித்தது. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

சமாஜ்வாதி கட்சி

முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ்

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு எஸ்பியின் முதல் குடும்பத்திற்கு எதிராக சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கியது. தந்தை-மகன் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக

சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இருவரும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முயன்றனர்.

2008 இல், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிறகு சமாஜ்வாதி கட்சி மன்மோகன் சிங் அரசாங்கத்தைக் காப்பாற்றியது. இதையடுத்து, வழக்கு ஆகஸ்ட் 7, 2013 அன்று மூடப்பட்டதாக 2019இல் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஜெகன் மோகன் ரெட்டி

மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசு ஹிந்துஜா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு க்விட் ப்ரோ க்வாக்காக பெருமளவு மற்றும் சலுகைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை 2011ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி மீது பல வழக்குகளை பதிவு செய்தது. ஜெகன் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார்.

ஒய்.எஸ்.ஆர் விபத்தில் மரணம் அடைந்ததாலும், அதைத் தொடர்ந்து ஜெகன் முதல்வராக பதவியேற்காததால் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியாலும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் இரு நிறுவனங்களும் பல குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கில் சிபிஐ மெதுவாகச் சென்றதற்கான அறிகுறிகள் உள்ளன. மே 31, 2017 அன்று, அப்போதைய இடி இயக்குநர் கர்னால் சிங், அப்போதைய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எழுதிய கடிதத்தில், ஜெகன் தொடர்பான வழக்குகளில், எப்ஐஆரில் பட்டியலிடப்பட்ட 73 நிறுவனங்களுக்கு எதிராக 28 நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யவும், எப்.ஐ.ஆரில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவும் சிபிஐயிடம் கடிதம் கேட்டுக் கொண்டுள்ளது.

மார்ச் 2013 இல், இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், ஒய்எஸ்ஆரின் ஆலோசகருமான அப்போதைய ராஜ்யசபா எம்பியுமான கேவிபி ராமச்சந்திராவிடமும் சிபிஐ விசாரித்தது. ஜெகன் விசாரணையில் இருந்த எம்மார் வழக்கு தொடர்பாகவும் ராமச்சந்திராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

அதிமுக

அம்மாமுத்து பிள்ளை

ஜெயலலிதா அரசில் முன்னாள் அமைச்சராக இருந்த அம்மாமுத்துப்பிள்ளை மீது 2009ஆம் ஆண்டு வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2019ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

பா.ம.க

அன்புமணி ராமதாஸ்

UPA-1 அரசாங்கத்தில் இருந்த முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது 2012 இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகையில் இந்தூர் மருத்துவக் கல்லூரியில் போதுமான ஆசிரியர்கள், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்தாக குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி அளித்தாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு ஆகியவை எம்சிஐ விதிமுறைகளின்படி கல்லூரியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இல்லை என்று "மீண்டும் மீண்டும் பரிந்துரை" செய்த போதிலும் இது நடந்தது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

தி.மு.க

ஆ. ராஜா, கனிமொழி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திமுக தலைவர்கள் ஆ.ராஜா, கனிமொழி ஆகியோர் 2011ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். திமுக அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. ஊழல் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ. ராஜா பதவி வகித்தார். பணமோசடி செய்ததாக கனிமொழி, தயாளு அம்மாள், ராஜா ஆகியோரிடம் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 2017 டிசம்பரில் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் இடி ஆகிய இரண்டும் வழக்கு தொடர்ந்தன.

தயாநிதி மாறன், கலாநிதி மாறன்

2012ஆம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஊழல் நடந்த நேரத்தில் தயாநிதி தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது.

ஏர்செல் நிறுவனத்தை 100 சதவீத பங்குகளை மலேசிய நிறுவனமான மேக்சிஸுக்கு விற்க வற்புறுத்தியதாகவும், அவர்களின் சொந்த நிறுவனங்களில் க்விட் புரோகோவாக முதலீடுகளைப் பெற்றதாகவும் மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருவரும் பிப்ரவரி 2017 இல் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கில் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

2013ஆம் ஆண்டில், தயாநிதியின் சென்னை இல்லத்தில் 300 க்கும் மேற்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்புகள் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டார். 2004-2007இல் தயாநிதி தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ​​அவரது சகோதரர் கலாநிதியின் சன் டிவி சேனலை மேம்படுத்துவதற்காக இந்த வரிகள் நீட்டிக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சிபிஐ கடந்த 2016ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

மு.க ஸ்டாலின்

2013ஆம் ஆண்டு UPA கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, வரி செலுத்தாமல் சொகுசு கார்களை இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கில் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் சென்னை வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. ஸ்டாலினின் மகன் வாங்கியதாக கூறப்படும் ஹம்மர் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தியது. 33 கார்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான தகவல்களை வருவாய் புலனாய்வுத் துறை ஒரு மாதத்திற்கு முன்பே சிபிஐக்கு அளித்தது.

இந்தச் சோதனைகள் காங்கிரஸை சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறியது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “இந்த நிகழ்வுகளால் நாங்கள் அனைவரும் வருத்தமடைகிறோம். இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். விவரங்களை விரைவில் கண்டுபிடிப்போம். ” இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. என்று தெரிவித்தார்.

பாஐக (2014 முதல்)

காங்கிரஸ்

ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தங்களில் எஃப்டிஐ அனுமதிகளில் பங்களித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை (இடி) விசாரணைக்கு உட்படுத்தியது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு 2ஜி விசாரணையின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கு 2012 முதல் நடந்து வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு 2018இல் சிபிஐ மற்றும் இடி வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து சிதம்பரம் ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இரு நிறுவனங்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளன. விசாரணை தொடங்கவில்லை.

publive-image

டி.கே சிவகுமார்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமார் மீது இடி வழக்குப் பதிவு செய்தது. மேலும், அக்டோபர் 2020இல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தற்போது கர்நாடக காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் உள்ளார்.

இந்த வழக்கில் சிவகுமாருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. சிவகுமார் வருமானத்திற்கு அதிகமாக 75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது, இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment