Advertisment

பணக்காரர்களின் நாடான இந்தியா.. இனி ஏழை மக்களின் கதி என்ன? அறிக்கை கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்தியா " ஒரு வசதியான உயரடுக்குடன், ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடு என தனித்து நிற்கிறது.

author-image
WebDesk
New Update
பணக்காரர்களின் நாடான இந்தியா.. இனி ஏழை மக்களின் கதி என்ன? அறிக்கை கூறிய அதிர்ச்சி தகவல்!

சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 படி, இந்தியாவில் 2021ல் மொத்த தேசிய வருமானத்தில் 57 சதவீதத்தை முதல் 10 சதவீதத்தினர் வைத்துள்ளனர். அதே சமயம் கீழ் 50 சதவீதத்தினரின் பங்கு வெறும் 13 சதவீதமாக உள்ளது.

Advertisment

2020 ஆம் ஆண்டில் உலகளாவிய வருவாயில் வீழ்ச்சியையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதில், பணக்கார நாடுகளில் பாதி சரிவு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ளவை குறைந்த வருமானம் மற்றும் வளர்ந்து வரும் பிராந்தியங்களில் உள்ளன. இது முதன்மையாக "தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் இன்னும் துல்லியமாக" இந்தியாவின் தாக்கம் காரணமாக கூறப்படுகிறது.

"இந்தியாவை பகுப்பாய்விலிருந்து நீக்கும் போது, ​​2020 ஆம் ஆண்டில் உலகளாவிய 50 சதவீத வருமானப் பங்கு உண்மையில் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது." என உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் பொருளாதார நிபுணரும் இணை இயக்குநருமான லூகாஸ் சான்சல், பொருளாதார வல்லுநர்கள் தாமஸ் பிகெட்டி, இம்மானுவேல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜூக்மான் ஆகியோருடன் இணைந்து எழுதிய அறிக்கை கூறுகிறது.

"மொத்த தேசிய வருமானத்தில் 10-இல் முதல் 1 சதவீதம் பேர் முறையே 57 சதவீதத்தையும், மீதமுள்ள 9 சதவீதம் பேர் 22 சதவீதத்தையும் வைத்துள்ளனர். அதே நேரம் கீழே உள்ள 50 சதவீத பங்கு 13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியா ஒரு ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடாக, ஒரு செல்வந்த உயரடுக்குடன் தனித்து நிற்கிறது" என்று அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின்படி, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர், சராசரி செல்வந்தர்களை விட ஒப்பீட்டளவில் ஏழைகளாக உள்ளனர்.

65 சதவீதம் (ரூ. 63,54,070) மற்றும் 33 சதவீதம் (ரூ. 3,24,49,360) வைத்திருக்கும் முதல் 10 சதவீதம் மற்றும் 1 சதவீதத்துடனருடன் ஒப்பிடும்போது, நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7,23,930 அல்லது மொத்த தேசிய வருமானத்தில் 29.5 சதவீதம் மட்டுமே உள்ளது.

2021ல் இந்திய வயது வந்தோரின் சராசரி ஆண்டு தேசிய வருமானம் ரூ.2,04,200 ஆகும். கீழே உள்ள 50 சதவீதம் பேர் ரூ.53,610 சம்பாதித்துள்ளனர், அதே சமயம் முதல் 10 சதவீதம் பேர் 20 மடங்கு அதிகமாக (ரூ.11,66,520) சம்பாதித்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் சராசரி குடும்ப சொத்து மதிப்பு ரூ.9,83,010 ஆகும், கீழே உள்ள 50 சதவீதத்தினர் மொத்தத்தில் 66,280 ரூபாயில் சராசரி சொத்து மதிப்பு 6 சதவீதத்துடன், கிட்டத்தட்ட எதையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment