Advertisment

அனல் மின் உற்பத்தி: நிலக்கரி கையிருப்பு உள்ளது; மின் விநியோகம் தொடர்பான அச்சம் தவறானது - மத்திய அரசு

டெல்லியில் ஏற்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டோடு இந்த தட்டுப்பாட்டை ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தார் சிசோடியா. இந்த அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் போதும் இதையே செய்தனர். எப்போதும் பிரச்சனை ஒன்று இருப்பதையே மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது என்று சிசோடியா கூறினார்.

author-image
WebDesk
New Update
Thermal plant worries

Karunjit Singh 

Advertisment

ஞாயிறு அன்று, இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கான நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற அச்சம் முற்றிலும் தவறானது என்றும் மத்திய நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களில் சமீபத்திய காலங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவி வருகிறது. திடீரென அதிகரித்த மின்சார தேவை, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மழைப்பொழிவு காரணமாக தடையான பொருட்களின் வரத்து, ஏப்ரல்-ஜூன் மாதத்தில் கையிருப்பு குறைவாக இருந்தது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலையில் கூர்மையான அதிகரிப்பு போன்றவை இந்த பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்தது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய அரசு நிலக்கரி விவகாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறது என்ற குற்றசாட்டை வைத்த நிலையில் நிலக்கரி அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு சனிக்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதினார். அதில், மத்திய அரசு டெல்லியில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு வழங்கி வரும் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பொருட்களில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் சராசரியாக மற்ற மாநிலங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு இருந்தது. மூன்று மாநிலங்களில் ஒரே நாளுக்கான கையிருப்பு மட்டுமே இருந்தது. அதில் டெல்லியும் ஒன்று.

நிலக்கரி வளங்களை பெறும் இடத்தில் இருந்து அனல் மின் நிலையங்கள் வெகு தூரங்களில் அமைந்திருப்பதால், பொதுவாக 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பை கொண்டிருக்க வேண்டும்.

மின்சார விநியோகத்தில் எந்தவிதமான இடையூறும் இல்லை என்று அனைவருக்கும் உறுதி அளிக்கின்றோம். 43 மில்லியன் டன் நிலக்கரி கோல் இந்தியாவிடம் கையிருப்பில் உள்ளது. இது 24 நாட்களுக்கான நிலக்கரி தேவையை தீர்க்கும் என்று ஞாயிறு அன்று நிலக்கரித்துறை அமைச்சர் ப்ரல்ஹத் ஜோஷி அறிவித்தார்.

மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான நிலக்கரி உள்ளது. மின்சார விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் மிகவும் தவறானது என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. மேலும் 1.92 மில்லியன் டன் நிலக்கரி அக்டோபர் 9ம் தேதி அன்று அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது மொத்தமாக 1.87 மெட்ரிக் நுகர்வுடன் ஒப்பிடுகையில், படிப்படியாக பங்குகளை உருவாக்குவதற்கான சூழ்நிலையின் மாற்றத்தைக் குறிக்கிறது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது டெல்லியில் ஏற்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டோடு இந்த தட்டுப்பாட்டை ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தார் சிசோடியா. இந்த அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் போதும் இதையே செய்தனர். எப்போதும் பிரச்சனை ஒன்று இருப்பதையே மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது என்று சிசோடியா கூறினார்.

நிலக்கரி தட்டுப்பாடு மின் தட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும். நாடு முழுவதும் உள்ள மின்சார செயல்பாடுகளை இது மூடும். தொழிற்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் சிசோடியா.

ஜூலை இரண்டாம் வாரத்தில் இருந்து ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட 11.4 ஜிகாவாட் (GW) ஒருங்கிணைந்த திறன் கொண்ட, உபி, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது.

ஜூலை மாதத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1,750 மெகாவாட் உற்பத்தி திறன், ஃபோர்ஸ்ட் மெய்ன்டனஸ் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் கூடுதலாக 5985 மெகா வாட் உற்பத்தி தடையானது. அக்டோபர் மாதத்தில் முதல் 6 நாட்கள் மேலும் 3,695 மெகாவாட் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தியாவின் அனல் மின் நிலையங்களின் உற்பத்தியான 208.8 ஜிகாவாட் (54%) இந்தியாவின் 388 ஜிகாவாட் நிறுவப்பட்ட உற்பத்தி திறனில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவின் மின்சார தேவைக்கான உற்பத்தியில் இதன் பங்கு 2019ம் ஆண்டு 61.9% ஆக இருந்து தற்போது அது 66.4% ஆக அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மின் துண்டிப்பிற்கு வழி வகுக்கும் என்று பஞ்சாப் மாநிலமும் தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மாநில மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒரு மணி நேர மின்வெட்டை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அக்டோபர் 7ம் தேதி அன்று 1500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ராஜஸ்தானின் சுரத்கர் அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான அனல் மின் நிலையங்களான தல்வண்டி மற்றும் ராஜ்பூராவில் முறையே 2 மற்றும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளாது. டெல்லிக்கு மின்சாரம் விநியோகம் வழங்கும் மிக முக்கியமான, 1820 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தாத்ரி அனல் மின் நிலையத்தில் அக்டோபர் 6ம் தேதி அன்று ஒரு நாளைக்கான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருந்தது.

மின் பற்றாக்குறையால் அவதியுறும் மாநிலங்கள் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியதாக இருந்தது. இந்திய எரிசக்தி பரிவர்த்தனை (IEX) அக்டோபர் 10 அன்று மின்சக்திக்கான டே அஹெட் மார்க்கெட்டில் (DAM) யூனிட் ஒன்றுக்கு (கிலோவாட் மணிநேரம்) அதிகபட்ச மார்க்கெட் கிளியரிங் விலை ரூ. 20 என்று அறிவித்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு 291,629 மெகாவாட்டிலிருந்து அக்டோபர் 10 அன்று மின்சாரம் வாங்குவதற்கான ஏலம் 403,632 மெகாவாட் (மெகாவாட் மணிநேரம்) ஆக அதிகரித்தது. சராசரி மார்க்கெட் கிளியரிங் விலையும் ஒரு யூனிட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 4.08 லிருந்து ரூ .13.3 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு வழங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில் பங்கு நிலவரத்தை மின் துறை அமைச்சர் ஆர்.கே சிங் மற்றும் நிலக்கரி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் ஆய்வு செய்ததாக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்சக்தி ஜெனரேட்டர் என்டிபிசிக்கு டெல்லியில் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களில் (பிபிஏ) அறிவிக்கப்பட்ட முழுத் திறனையும் வழங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. விலை அமைப்பானது மாற்று மின்சக்தி ஆதாரங்கள் ஒப்பீட்டளவில் மலிவானதாக மாறியதால் டிஸ்காம்கள் சில சமயங்களில் குறிப்பிட்ட மரபு PPA களின் கீழ் தேவைப்படும் மின்சாரத்தின் அளவைக் குறைத்துள்ளன. இயற்கை எரிவாயு அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவை அனைத்து வகையிலும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கெயில் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment