Advertisment

உயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

தன் உயிரையே பணயம் வைத்து பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
உயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

தன் உயிரையே பணயம் வைத்து பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

பொது இடங்களில் யாருக்காவது ஆபத்து என்றால், கண்டும் காணாததும் போல் சென்றுவிடும் மனப்பான்மையை இந்த அவசர உலகம் நமக்கு தந்திருக்கும் சாபம். ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர் பாஷா (வயது 32) அப்படியில்லை. தன் கண் முன் பெண் ஒருவருக்கு ஆபத்து ஏற்படுவதை பார்த்துக்கொண்டு அவர் கடந்து போகவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை யஷ்வந்தபுரா ரயில் நிலையத்தில் அஸ்கர் பாஷா தன் ஆட்டோவுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 19 வயது இளம்பெண்ணை மதுபோதையில் இருந்த மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதைப் பார்த்துக்கொண்டு பாஷாவால் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அந்தப் பெண்ணை காப்பாற்ற முனைந்தார்.

அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக தன்னந்தனி ஆளாக விரைந்தார். வழியில், தன் மூன்று நண்பர்களை உதவிக்கு அழைத்தார். அவர்களுடன் பாஷா அந்தப் பெண்ணை தேடினர். மேலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் பெண் ஒருவர் ஆபத்தில் இருப்பதை தகவல் தெரிவித்தார். அதன்பின், பாஷாவும் அவரது நண்பர்களும் அந்தப் பெண் இருக்கும் இடத்தை தேடினர். அப்பெண் பயங்கர ஆபத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆனால், அவர்கள் அந்தப் பெண்ணை எங்கு கடத்திச் சென்றனர் என்பது தெரியவில்லை.

போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அளித்தவுடன், போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த இடத்திற்கு விரைந்தனர். இதன்பின், பாஷா காவல் துறையினர் உதவியுடன் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தள்ளியிருந்த குடோனில் அப்பெண்ணை அவர்கள் கடத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்பெண்ணை கடத்திய ஃபயஸ், சூபெர் கான், சுல்தான் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.

“அந்தப் பெண்ணை கடத்திய மூன்று பேரும் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். அவர்கள் செய்த இந்த காரியத்தால் நான் அவர்களை எனது நண்பர்கள் என சொல்லிக் கொள்ளவே வெட்கம் கொள்கிறேன். நான் எனது ஆட்டோவில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது, அந்தப் பெண்ணின் உறவினரை அந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாக்கினர். மீதம் ஒருவர் அந்தப் பெண்ணை கட்டாயமாக இழுத்தனர். அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்ற இந்த முயற்சியால் என் உயிருக்கே ஆபத்து என்பது எனக்கு தெரியும். ஏனென்றால், நான் எதிர்ப்பவர்கள் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். இருந்தாலும், நான் அமைதியாக இருக்கவில்லை.”, என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் பாஷா.

நம்மை ஆபத்திலிருந்து மீட்க திரைப்படங்களில் வருவதுபோல் சூப்பர் ஹீரோக்களெல்லாம் வர மாட்டார்கள். நம்மை சுற்றியிருக்கும் சாதாரண மனிதர்கள் தான் வருவார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே இப்படி, அப்படி என்று இருப்பார்கள் என்ற பொதுபுத்தியை உடைத்து, பெண்ணை காப்பாற்றிய பாஷாவை பாராட்டுவோம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment