பிச்சை எடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் ’பிச்சைக்காரர்’

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், அதன் மூலம் மாதந்தோறும் 30,000 ரூபாய் பணம் ஈட்டுகிறார். இதுதவிர, அவருக்கு சைடு பிசினஸும் உண்டு.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், அதன் மூலம் மாதந்தோறும் 30,000 ரூபாய் பணம் ஈட்டுகிறார். இதுதவிர, அவருக்கு சைடு பிசினஸும் உண்டு. இந்த பணத்தின் மூலம், தன்னுடைய 3 மனைவிகளையும் காப்பாற்றி வருகிறார். ஆமாம், ஒரு மனைவி அல்ல, மூன்று மனைவிகள்.

ஜார்க்கண்டை சேர்ந்த சோட்டு பாராய்க் தான் அந்த பிச்சைக்காரர். இவர் ஒரு மாற்றுத்திறனாளியும் கூட. இவர் சக்ரதர்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார். இதுதவிர, விநியோகஸ்தராக சைடு பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார்.

பாத்திர கடை ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். மொத்தமாக, ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் இவர் வருமானம் ஈட்டுகிறார். இந்த கடையை அவரது மனைவிகளில் ஒருவர் கவனித்து வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close