Advertisment

திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிப்பாளர்கள் உட்பட 140 பேருக்கு கொரோனா

பாதிக்கப்பட்ட 140 பேரில் 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirumala Tirupati Devasthanam covid- 119 cases

திருப்பதி கோயில்

திருமலையிலுள்ள வெங்கடாசலபதி கோயிலை நிர்வகிக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஊழியர்கள் 140 பேர், ஜூன் 11-ம் தேதி முதல் கொரோனாவுக்கு பாஸிட்டிவான சோதனையை செய்துள்ளனர்.

Advertisment

Tamil News Today Live: பெரியார் சிலை மீது காவி சாயம்… கோவையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் பூட்டுதலை தொடர்ந்து, அந்த நாளில் தான் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது என, திருப்பதி தேவஸ்தானத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, ”14 'அர்ச்சகர்கள்' (உதவி பூசாரிகள்), லட்டு தயாரிக்கும் சமையலறைகளில் இருக்கும் 16 தொழிலாளர்கள் மற்றும் 56 பாதுகாப்புப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 140 பேரில் 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் புதுச்சேரி போலீஸில் சரண்

”இருப்பினும், தினசரி 12,000-க்கும் குறைவான பக்தர்களை கோவிலுக்குள் நுழைய திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து அனுமதிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment