இந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…

இன்று மாலை 6.30 மணிக்கு கார்டன் ஆஃப் பைவ் சென்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது அந்த இசைக்கச்சேரி  

TM Krishna Concert in Delhi
Musician TM Krishna during Express Adda at Hotel Claridges, on Friday, January 12, 2018. Express photo by Abhinav Saha

TM Krishna Concert in Delhi : கர்நாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் என்ற பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் டி.எம். கிருஷ்ணா. கர்நாடக இசை என்பது அனைவருக்கும் உரிய இசை என்ற எண்ணத்தில் தீராத தீர்க்கமான பிடிப்பினை உடையவர் டி.எம். கிருஷ்ணா.

மகசேசே விருது பெற்ற இந்த இசைக் கலைஞரின் சமூக செயல்பாடுகள் தொடர்ந்து வலதுசாரி அமைப்புகளையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் சற்று அச்சத்திற்கு உள்ளாக்கியது என்று தான் கூற வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் கர்நாடக இசைக் கலைஞர் ஓ.எஸ். அருண் ஏசுவின் சங்கீத சங்கமம் என்ற இசை நிகழ்ச்சியில் கிருத்துவ பாடல்கள் பாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்துத்துவா அமைப்பினர் அருண் மீது முகநூலில் தாக்குதல்கள் நடத்தினர், பின்னர் அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.எம்.கிருஷ்ணா ஒவ்வொரு மாதமும் ஒரு இஸ்லாமிய, கிருத்துவ பாடல்களை பதிவு செய்து வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

TM Krishna Concert in Delhi – இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி

இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் ஸ்பீக் மெக்கே ( SPIC-MACAY ) நிறுவனங்கள் ஒன்றிணைந்து டெல்லி, சாணக்கியபுரி பகுதியில் இருக்கு நேரு பூங்காவில் “Dance and Music in the Park” என்ற இரண்டு நாள் இசைக் கச்சேரியை நடத்த திட்டமிட்டிருந்தது. அதில் டி.எம். கிருஷ்ணா பாட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் டி.எம். கிருஷ்ணா. இந்திய விமான நிலையம் போன்ற ஒரு அரசாங்க அமைப்பு ஏன் ஆண்ட்டி நேசனல் பாடகரை பாட வைக்கிறது போன்ற எதிர்ப்பு அலைகள் கிளம்பின.

இதனைத் தொடர்ந்த இன்று மற்றும் நாளை (17 & 18 நவம்பர்). ஆனால் இந்த இரண்டு நாள் நிகழ்வுகள் தள்ளி வைப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் செவ்வாய் கிழமை இரவு அறிவித்தது.

TM Krishna Concert in Delhi – ஆம் ஆத்மி அரசின் அழைப்பு

இந்நிலையில் ஒரு கலைஞனுக்கான மதிப்பினையும் மரியாதையையும் நாம் நிச்சயம் தர வேண்டும். டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் சார்பில் நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சியில் டி.எம்.கிருஷ்ணன் பாட வேண்டும் என அழைப்பு விடுத்தார் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.

அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட டி.எம். கிருஷ்ணா, ஆர்.கே. ஸ்ரீராம் குமார், ப்ரவீன் மற்றும் அனிருத் அத்ரேயா ஆகியோருடன் இணைந்து டெல்லியில், இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டிருந்த அதே தேதியில் (இன்று)  இசைக் கச்சேரி நடத்த உள்ளார் டி.எம். கிருஷ்ணன். அந்நிகழ்வு சரியாக 6.30 மணிக்கு கார்டன் ஆஃப் பைவ் சென்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்று ட்வீட் செய்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி அரசிற்கு பல்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tm krishna concert in delhi delhi govt offers to host t m krishna show after airports authority backs out

Next Story
ஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடைசிபிஐக்குத் தடை, மேற்கு வங்கம், ஆந்திரா, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜீ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express