Advertisment

மேகதாது திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.. கர்நாடக முதல்வர்!

மேகதாது திட்டம் தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன் இருப்பதாகவும், விரிவான திட்ட அறிக்கையை விரைவாக அனுமதிக்குமாறு அரசு கோரும் என்றும் பொம்மை கூறினார்.

author-image
WebDesk
New Update
Basavaraj-Bommai

To speed up necessary clearances for the Mekedatu projects: Karnataka urges centre

மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்னை குறித்து விவாதிக்க, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மேகதாது மற்றும் கலசா-பந்தூரி திட்டங்களுக்கு, மத்திய அரசின் தேவையான அனுமதிகளை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisment

இரண்டு திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க, நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் அடுத்த வாரம் டெல்லி செல்வார் என்று பொம்மை கூறினார்.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு, தானும் டெல்லி செல்வதாக முதல்வர் தெரிவித்தார்.“தேவைப்பட்டால் மேலும் அழுத்தம் கொடுக்க அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அழைத்துச் செல்வேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேகதாது திட்டம் தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன் இருப்பதாகவும், விரிவான திட்ட அறிக்கையை விரைவாக அனுமதிக்குமாறு அரசு கோரும் என்றும் பொம்மை கூறினார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில்’ மேகதாது திட்டம் குறித்து ஆலோசித்து, அடுத்த கூட்டத்தில் அனுமதி பெற முயற்சிப்போம்.

மகதாயியைப் பொறுத்த வரையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டதால், மாநில அரசு செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மட்டுமே அவசியம். "விரைவில் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவோம் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை என்றும், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது என்றும் பொம்மை கூறினார். "இரண்டு நீதிபதிகள் பதவி விலகியதால் விசாரணை தாமதமானது. புதிய நீதிபதிகளை நியமித்து, விசாரணையை விரைவில் முடிக்குமாறு நாங்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோருவோம்," என்று அவர் கூறினார்.

கோதாவரி-கிருஷ்ணா-காவிரி-பென்னாறு நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து, மாநிலத்தின் பங்கை இறுதி செய்யாத வரையில், மத்திய அரசு அதைச் செயல்படுத்தக் கூடாது என்று மாநிலம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.

இதுகுறித்து கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில்;

மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் தமிழகத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், இது குறித்து மத்திய அரசை மாநில அரசு நம்ப வைக்க வேண்டும். “மாநிலத்துக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்று தெரியாததால் நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்க்கும்படி அரசிடம் கூறினோம்.

இந்த திட்டத்தால் மாநிலத்திற்கு அநீதி ஏற்படும் என்று அரசை நம்ப வைக்க முயற்சி செய்தோம். மேகதாது பாதயாத்திரையின் போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், எம்பி பாட்டீல், ஜேடிஎஸ் எம்எல்ஏ பந்தெப்பா காஷம்பூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Basavaraj Bommai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment