Top leadership missing from Action in China says Hyderabad MP Owaisi : சமீபத்தில் பிரதமர் மயில்களுடன் அமர்ந்திருப்பதும், நடைபயிற்சி மேற்கொள்வதும் என்றும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஹிட்டானது. கொரோனா ஊரடங்கு, அதன் பின்னால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, சீனாவின் எல்லை தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் பிரதமரின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு காத்திருந்த பலரையும் ஏமாற்றும் விதமாக அமைந்திருந்தது இந்த புகைப்படங்கள். இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் மற்றும் ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஓவைஸி பிரதமர் செயல்கள் குறித்து கடுமையான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
Our armed forces are doing their best to tackle the PLA at the border. But the crisis is no longer about the military. It is about our top political leadership which is missing from action. Why has @PMOIndia not spoken on the issue for weeks? [1/2]
— Asaduddin Owaisi (@asadowaisi) September 10, 2020
மேலும் படிக்க : அப்போது மயில்…. தற்போது மழை… சில்லென இருக்கும் மோடியின் ட்விட்டர் பக்கம்!
இந்திய சீனா விவகாரத்தில் சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். ஆனால் தலைமை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். எல்லை விவகாரம் என்பது ராணுவம் தொடர்பானது அல்ல. அரசியல் சார்ந்தது. தலைமை தான் தீர்வு காண வேண்டும். ஆனால் பிரதமர் எங்கே போய்விட்டார். பிரதமர் அலுவலகம் வாரக்கணக்கில் இது தொடர்பாக ஒன்றுமே பேசவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் அவர்.
ஒருவேளை மயில்களுக்கு உணவளிக்கும் நேரம் போக மிச்ச நேரம் இருந்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு இது குறித்து கூறியிருப்பார் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் இருந்தால் தான் சீனாவின் பெயரை உச்சரிக்க அவருக்கு தைரியம் வந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil