பாகிஸ்தான் அத்துமீறல்; 2 இந்திய வீரர்கள் வீர மரணம்!

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், அமர்நாத் யாத்திரை சென்று விட்டு ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த குஜராத் மாநில யாத்ரீகர்களின் பேருந்து மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள் ஆறு பேர் உள்பட மொத்தம் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பத்கமில் நேற்று இரவு விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில், 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close