Advertisment

மியான்மர் எல்லைக்குள் நுழைந்த 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: போராளிக் குழு அட்டூழியம்

The bodies of two Tamil men from a Manipur town were found Tuesday with bullet wounds in neighbouring Myanmar Tamil News: மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்த இரண்டு தமிழர்களின் உடல்கள் நேற்று அண்டை நாடான மியான்மரில் துப்பாக்கி காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Two Tamil men from Manipur found dead in Myanmar Tamil News

P Mohan and M Iyarnar

Two Tamils from Manipur’s Moreh shot in Myanmar Tamil News: மணிப்பூரில் வசிக்கும் இரண்டு தமிழர்களின் உடல்கள் நேற்று அண்டை நாடான மியான்மரில் துப்பாக்கி காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. கொலைக்குப் பின்னணியில் இராணுவ ஆட்சிக்கு ஆதரவான போராளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர்கள் பி மோகன், 27, மற்றும் எம் ஐயனார், 28. இவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க் கிழமை காலை மியான்மரின் தமு பகுதியில் உள்ள அவர்களது தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். பிறகு, தமு நகரின் வார்டு எண். 10 (தமு சா ப்வா என்றும் அழைக்கப்படுகிறது, பள்ளிக்கு அருகில்) நேற்று மதியம் 1 மணியளவில் அவர்கள் இருவரது உடல்களும் துப்பாக்கிக் குண்டடிப்பட்ட காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன அவர்களை மோரே வியாபாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

எல்லையின் இருபுறமும் பேஸ்புக்கில் பரப்பப்பட்ட புகைப்படங்களிலிருந்து, இருவரும் மிக அருகில் இருந்து தலையில் சுடப்பட்டதாகத் தெரிகிறது. ஒருவருக்கு நெற்றியில் துப்பாக்கிக் குண்டடிபட்ட காயம் இருந்தது; மற்றொவருக்கு தலையின் பக்கவாட்டில் உள்ளது. தற்போது அவர்களின் உடல்களை மீட்க மோரேயில் உள்ள இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

“இருவரையும் ஏன், யார் கொன்றார்கள் என்பது பற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் உடல்களை மீட்க உயர்மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்று மோரே காவல்துறையின் பொறுப்பாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

இந்த இரு தமிழர்களும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ள மோரே மக்கள் நேற்றும் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மோரே நகரம் மெய்டீஸ், குக்கிகள், தமிழர்கள், பஞ்சாபிகள் மற்றும் பிறர் கலந்து கொள்ளும் இடமாகும். இங்கு கணிசமான அளவில் தமிழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

தமிழ்ச் சங்கச் செயலாளர் கேபிஎம் மணியம் அவர்கள் இருவரையும் இராணுவ ஆட்சிக்கு ஆதரவான போராளிகளான பியூ ஷா ஹ்டீ சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். தமுகவுக்காக காலையில் புறப்பட்ட இருவரும் இரண்டு மணி நேரம் மொபைல் இன்டர்நெட் வரம்பிற்கு வெளியே இருந்ததாகவும், மோரேயில் ஆட்டோ டிரைவர்களான அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் குறுக்கே சென்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

"பியூ ஷா ஹ்டீயால் இருவரையும் தடுத்து நிறுத்தி சுட்டுக் கொன்றதாக எல்லைக்கு அப்பால் உள்ள மக்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்" என்று மணியம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-மியான்மர் எல்லையில் ஒரு இலவச இயக்கம் உள்ளது. இது எல்லையில் வசிக்கும் மக்கள் விசா கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லையின் இருபுறமும் 16 கிமீ பயணிக்க அனுமதிக்கிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, மியான்மரில் இராணுவ சதியை தொடர்ந்து, மக்கள் மற்றும் பொருட்களின் எல்லை தாண்டிய ஓட்டம் ஒரே மாதிரியாக இல்லை.

மியான்மரின் நாடுகடத்தப்பட்ட அரசாங்கம் என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஜுண்டா எதிர்ப்பு தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்த மக்கள் பாதுகாப்புப் படையின் உள்ளூர் அத்தியாயத்திற்கும் இராணுவத்திற்கும் அதன் போராளிகளுக்கும் இடையே கடுமையான மோதல்களை தாமு கண்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் இந்திய எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இத்தகைய கொடிய மோதல் ஒன்று நடந்தது.

மற்றொரு மோரே தமிழ் சங்க உறுப்பினரான காஜா மொய்தீன், கொலையை நேரில் பார்த்தவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மோரேயில் உள்ள வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமவாசிகள் பல வாரங்களுக்கு முன்பு சண்டையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் கூட ஊழியர்கள் இல்லை. "அவர்கள் முகத்தை சுத்தம் செய்ய ஒரு செவிலியரை அழைத்து வரச் சொன்னார்கள்" என்று மொய்தீன் கூறினார்.

மோகனுக்கு இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. ஐயனாருக்கு திருமணமாகி ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.

மோரே நகரத்தின் சமூகத் தலைவர்கள் மாவட்ட அதிகாரிகள் மூலம் முதலமைச்சரிடம் ஒரு குறிப்பாணையை இன்று சமர்ப்பித்துள்ளனர். உடல்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மோரேவில் வசிக்கும் அனைத்து இனக்குழுக்களின் தலைவர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

மோரேவில் உள்ள தமிழ் சமூகம் இரண்டு அலைகளில் அங்கு குடியேறினர். 1940 களில் முதல் முறையாக, இரண்டாம் உலகப் போரின் போது, ​​பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், பர்மா மீது ஜப்பானிய படையெடுப்புக்கு பயந்து, இந்தியாவுக்குள் நுழைந்தனர். இரண்டாவது அலை என்பது 1960 களில் பர்மாவில் நடந்த இனக் கலவரம். ஆங்கிலேயர்கள் காலனித்துவ நிர்வாகத்தில் பணிபுரிய பர்மா சென்ற தமிழர்கள் இந்த இனக்கலவரத்தின் போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் சிலர் மீண்டும் பர்மாவுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று நம்பி மோரேவில் குடியேறினர்.

வைகோ கண்டனம்

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கடுமையான கட்டணம் தெரிவித்துள்ளார். அதோடு, படுகொலை செய்யப்பட்ட இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய - மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநரான பி.மோகன், வியாபாரியான எம்.அய்யனார் ஆகியோர் தங்கள் நண்பரைப் பார்ப்பதற்காக தாமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆர். என்ற பகுதியில் பர்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.

இதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டன. எந்தவித வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு குலைந்து கிடக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதுடன், கொலைகாரர்களை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்றும், படுகொலைக்கு ஆளான இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu India Manipur Myanmar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment