Advertisment

உபேர் ஃபைல்ஸ்: சட்டத்தின் ஓட்டைகள் வழியே சவாரி செய்தவர்கள் யார்?

“நாம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறோம்” என்று டெல்லி பாலியல் வன்புணர்வு சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு உபேர் உயர் அதிகாரி மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
uber files, uber crisis, cab laws, ICIJ, transport laws, உபேர் ஃபைல்ஸ், உபேர், உபேர் ஃபைல்ஸ் லீக்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், International Consortium of Investigative Journalists, uber investigations, indian express

வெளிநாட்டு வரி ஏய்ப்புகளில் பணக்காரர்களின் பணப் பரிவர்த்தனையைக் கண்காணித்த பிறகு, அது இப்போது ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தைப் பற்றியதாக மாறி உள்ளது. அது வணிக நடவடிக்கை உடன் வாடிக்கையாளர் வசதி ஆகியவற்றை இணைத்து, உலகம் முழுவதும் உள்ள கால் டாக்ஸி நிறுவனமான உபேர் மறுவடிவமைப்பு செய்துள்ளது.

Advertisment

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) உடனான தனது எட்டாவது கூட்டு நடவடிக்கையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நான்கு மாதங்கள் உபேர் (Uber) நிறுவனத்தின் கோப்புகளை ஆய்வு செய்தது. மேலும், உபேர் நிறுவனத்தில் இருந்து 1,24,000 உள் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்துள்ளது.

தி கார்டியன் ஊடகத்தால் பெறப்பட்டு, ஐ.சி.ஐ.ஜே, தி வாஷிங்டன் போஸ்ட், பிபிசி உட்பட 30 நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்களின் உலகளாவிய கூட்டமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்த ஆவணங்கள் ஒரு வலுவில்லாத சிலிக்கான் பள்ளத்தாக்கு ஸ்டார்ட்-அப் நிறுவனம் எப்படி 43 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனமாக மாறியது என்பதை கூறுகிறது. இன்று 72 நாடுகளில் அதற்கு மேலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கட்டுப்பாட்டாளர்களைத் தவிர்ப்பதற்கு திருட்டுத்தனமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பரந்த வலையமைப்பில் பயன் அடைந்துள்ளது. அதை சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளில் உள்ள ஓட்டைகள் மூலம் மூர்க்கமாக எளிதாக செய்துள்ளது.

இந்த ஆவணங்கள் 2013-2017 ஆண்டுகளை உள்ளடக்கியது, இந்த நிறுவனம், அதன் சுறுசுறுப்பான மற்றும் துணிச்சலான இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக் தலைமையில், உலக சந்தையில் இருந்து மற்றொரு சந்தைக்கு அதன் கால் டாக்ஸி சேவையை பெரும் பலத்துடன் பெருக்கி வியக்க வைத்துள்ளது.

ஐ.சி.ஐ.ஜே ஆவணங்களை அம்பலப்படுத்தியதற்கு, கலானிக் தனது செய்தித் தொடர்பாளர் டெவோன் ஸ்பர்ஜன் மூலம் கையொப்ப மிட்ட அறிக்கையில் பதிலளித்துள்ளார்: “கலானிக் 2009 இல் உபேர் (Uber) நிறுவனத்துடன் இணைந்து நிறுவியபோது, ​​அவரும் மற்ற குழுவும் ஒரு தொழில்துறையில் முன்னோடியாக இருந்தனர். அது இப்போது பெரியதாக மாறியுள்ளது. இதைச் செய்ய, தற்போதைய நிலையில் மாற்றம் தேவை. ஏனெனில், வணிக போட்டி வரலாற்றில், சட்ட விரோதமான ஒரு துறையில் உபேர் ஒரு தீவிர போட்டியாளராக மாறியது.

2013 இல் சேவைகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து, உபேர் நிறுவனம் இந்தியாவை மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகக் கண்டறிந்துள்ளது - இன்று 100 நகரங்களில் சுமார் 8 லட்சம் ஓட்டுநர்கள் நகர்ப்புற பணியாளர்களைக் கொண்டு சவாரி செய்கிறார்கள். மேலும், பொதுப் போக்குவரத்து காணப்படுகிற மற்றும் டாக்ஸி சேவைகள் தடைசெய்யப்பட்ட நகரங்களிலும் பயணிக்கின்றனர்.

உபேர் நிறுவனத்தின் உத்தி ஒரு மின்னஞ்சலில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. உபேரின் அப்போதைய ஆசிய தலைவரான ஆலன் பென், ஆகஸ்ட் 2014 இல் இந்திய அணிக்கு எழுதுகையில், “இந்தியாவில் நம்முடைய முதல் ஆண்டில் நாம் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்… நமக்கு உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சனைகள் இருக்கலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும்… அதுதான் உபேரில் வணிகம் நடத்துவதுதான் வாழ்க்கை” என்று அவர் எழுதினார்.

ஜிஎஸ்டி, வருமான வரித் துறைகள் மற்றும் நுகர்வோர் மன்றங்கள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சேவை வரித் துறை உள்ளிட்ட இந்திய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உபேர் நிறுவனம் எண்ணற்ற முறை உடன்படாமல் பிரச்னை செய்துள்ளதை ஆவணங்கள் விவரிக்கின்றன.

உண்மையில், செப்டம்பர் 2014 இல், உபேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சேவை வரி சிக்கல்களைக் கையாள்வதற்கான ஒரு ஆய்வாக இந்தியாவைப் பயன்படுத்தி ஒரு விளக்கக்காட்சியைத் தயாரித்தது.

“அதிகாரிகள் உபேர் வெளிப்படையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நாங்கள் மோசடியை எளிதாக்குகிறோம்” என்று கூறியதாக ஒரு பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி கூறுகிறது. இது இப்போது அம்பலப்படுத்தப்பட்ட ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது.

சிறிது காலத்திற்குப் பிறகு, டிசம்பர் 2014 இல், புது டெல்லியில் 25 வயது பயணி ஒருவர் உபேர் காரில் டிரைவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது.

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையின் மீது அதிருபதிகள் எழுப்பட்டாலும் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரின் குற்றவியல் பின்னணி, அதில் இருந்து நழுவுவதற்கு இந்தியாவில் உள்ள குறைபாடுள்ள உரிம அமைப்புகளை உயர்மட்ட நிர்வாகிகள் திட்டவட்டமாக குற்றம் சாட்டினர் என்பதை டஜன் கணக்கான உள் மின்னஞ்சல்கள் காட்டுகிறது.

உபேர் பீதியில் இருந்தது, சில வெறித்தனமான சேதக் கட்டுப்பாட்டிற்கு இடையில், உபேரின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவரான நைரி ஹூர்டாஜியன், பாலியல் வன்புணர்வு நடந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 14 ஆம் தேதி தனது சக ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலில் எழுதினார்: “நாம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில், புது டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்குப் பிறகு உபேர் பெருமையாகக் கூறிய புதிய பாதுகாப்பு அம்சங்களின் முக்கியமான கூறுகள் இன்னும் நடைமுறையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. உதாரணம்: ஒவ்வொரு உபேர் வண்டியிலும் பொருத்தப்பட வேண்டிய “அபாய பட்டன்”. அது பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகும் டெல்லி காவல்துறை மற்றும் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைப்புகளுடன் இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை.

கலானிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றத் தொழில்நுட்பம் உபேர் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது. உபேர் கோப்புகள் அதன் பயன்பாட்டின் நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வியத்தகு முறையில் விரிவடைகிறது: உபேர் சவாரிகளைத் தக்கவைக்கவும் போலிஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து விலகி இருப்பதற்கு கிரேபால் மற்றும் ஜியோஃபென்சிங் போன்ற கருவிகளை அந்த நிறுவனம் எவ்வாறு பயன்படுத்தியது என்பது பற்றிய விவரங்கள் உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பல நாடுகளில் அவசர காலங்களில் கணினியை அணைக்கிற ‘கில் சுவிட்ச்’ பயன்படுத்தப்படுவதைப் பற்றி கோப்புகளில் 13 நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன - எந்தவொரு விசாரணையில் இருந்தும் அவற்றைப் பாதுகாப்பதற்கு உள் சிஸ்டத்தை மூடும் செயல்முறைக்கான லேபிள் உள்ளது. உண்மையில், ஆறு நிகழ்வுகளில் உபேர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டாளர்களின் சோதனைகள் நடந்து கொண்டிருந்தபோது, 'கில் சுவிட்ச்' பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.

பிப்ரவரி 2015 இல் உபேர் உயர்மட்ட நிர்வாகியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் (பெல்ஜியத்தில் எதிர்பார்க்கப்பட்ட வரிச் சோதனைகளின் பின்னணியில்) இந்தியாவிற்கு உபேர் பயன்படுத்திய செயல் முறைகளை விவரிக்கிறது: உள்ளூர் குழு இந்திய அதிகாரிகளுக்கு முன்பாக எப்படி ஒத்துழைத்தது என்று தெரிகிறது. ஆனால், உண்மையில் உபேர் தலைமையகத்தால் இந்த சிஸ்டம்கள் மூடப்பட்டது.

உபேர் இந்த சர்ச்சைகளில் பலவற்றை விட்டுவிட முயற்சிக்கிறது. உபேர் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பிரப்ஜீத் சிங்குக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதன் செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார். அதில், “கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உபேர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அந்த நேரத்தில் போக்குவரத்து என எந்த ரைட்ஷேரிங் விதிமுறைகளும் இல்லை. செயலி அடிப்படையிலான சவாரி பகிர்வை ஒரு விருப்பமாக சட்டங்கள் கருதவில்லை. மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் நகரங்கள் மற்றும் நம் வாடிக்கையாளர்கள் - சவாரி செய்பவர்கள் மற்றும் ஓட்டுநர்களின் ஆர்வத்தை பிரதிபலிக்கும் நீண்ட கால விதிகள் மற்றும் விதிமுறைகளை நாங்கள் பெற்றுள்ளோம். ஒரு வகை மாதிரியை வரையறுக்கும் நிறுவனமாக, சவாரி செய்பவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நகரங்களுக்கு ஏற்ற முற்போக்கான ஒழுங்குமுறை மாற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம் மற்றும் ஆதரிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும், உபேர் கோப்புகள், உபேர் பல ஆண்டுகளாக, உயர்ந்த இடங்களில் நண்பர்களை உருவாக்கி கிட்டத்தட்ட இராணுவ துல்லியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிறுவனம், ஒரு ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளில் இருந்து 1,850 க்கும் மேற்பட்ட பங்குதாரர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. அவர்களில் அதன் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்புகளை நாடலாம். பங்குதாரர்கள் ஒரு கலவையான குழுவாக இருந்தனர்: அதில் பொது அதிகாரிகள், அதிகாரிகள், சிந்தனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து நிபுணர்கள் இருந்தனர்.

உபேரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் அமைச்சராக இருந்தபோது, அவர் ​​உபேர் கூட்டாளியாக தெளிவாக அடையாளம் காணப்பட்டார் என்று ஆவணங்கள் காட்டுகிறது. மேக்ரானுக்கும் கலானிக் உட்பட முக்கிய உபேர் நிர்வாகிகளுக்கும் இடையே பல பரிமாற்றங்கள் உள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அருகாமையில் இருந்த குழுக்களையும் இந்த நிறுவனம் நட்பு கொண்டுள்ளது. தரவுகளில் உள்ள சில குழுக்கள் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு அனுமதிக்கப்பட்டுள்ளன.

உபேர் 2014 இல் அந்த நிறுவனத்தின் உலகளாவிய பிராண்டிங் தலைவராக அமேரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் உதவியாளர் டேவிட் ப்ளோஃப்-ஐ (அவர் பிப்ரவரி 2016 இல் இந்தியாவுக்குச் சென்று மூன்று முதல்வர்களைச் சந்தித்தார்) பணியமர்த்தியது. அவர் 2017 வரை அந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.

இரண்டு முறை ரெய்டுகளின் போது அவசர காலத்தில் கணினியை மூடுகிற "கில் சுவிட்சை" பயன்படுத்துவதற்காக உள் மின்னஞ்சல் விவாதங்களில் ப்ளோஃப் பங்கேற்றதாக ஆவணங்கள் காட்டுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Uber
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment