Advertisment

உபேர் அபாய பொத்தான்: காரில் காட்சிப் பொருள்; காகிதத்தில் மட்டுமே இருக்கும் பாதுகாப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பயனம் செய்த 50 சவாரிகளில் 48 சவாரிகளில் வாகனங்களில் ‘அபாய பொத்தான்’ இல்லை அல்லது வேலை செய்யவில்லை.

author-image
WebDesk
New Update
Uber Files, Express Exclusive Uber files, Taxi panic button, Panic button in cabs, Uber India, 2014 Delhi Uber rape case, Delhi, Express Exclusive, The Indian Express

பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்களில், சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட ‘அபாய பொத்தான்’ ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சம். புது டெல்லியில் உபேர் ஓட்டுநரால் ஒரு பயணி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு அறிவிப்பின் மூலம் ‘அபாய பொத்தான்’ வைக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த பொத்தான், அனைத்து வாடகை பயணிகள் வாகனங்களிலும் - டாக்சிகள் மற்றும் பேருந்துகளில் நிறுவப்பட வேண்டும் - பயணிகளால் அவற்றை எளிதில் அணுகவோ அல்லது இயக்கவோ முடியாதபோதும் காவல்துறைக்கு எச்சரிக்கையை அளிக்க வேண்டும். ஸ்மார்ட்ஃபோன்கள் அவசர அழைப்புகளைச் செய்ய அல்லது செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துகின்றன.

ஒழுங்குமுறை விதிகளுக்கும் அவை நடைமுறையில் செயல்படுத்தப்படுவதற்கும் இடையே உள்ள இடைவெளியை உபேரின் உள்கட்டமைப்பு விளக்குகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு மாதத்தில் டெல்லியில் 50 உபேர் வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டது. அவற்றில் 48 சவாரிகளில் வாகனங்களில் ‘அபாய பொத்தான்’ இல்லை.

அதற்குப் பதிலாக, குளறுபடிகளால் தடுமாறுகிற ஒரு கண்காணிப்பு அமைப்பைக் கண்டறிந்துள்ளது - தீர்க்கப்படாத மென்பொருள் ஒருங்கிணைப்புச் சிக்கல் வாகனத்தில் இருந்து எச்சரிக்கை பெறும் நோடல் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி அவற்றை உடனடியாக டெல்லி காவல்துறைக்கு அனுப்புவதைத் தடுக்கிறது.

  • 50 உபேர் வண்டிகளில், 7 வாகனங்களில் மட்டுமே ‘அபாய பொத்தான்’ செயல்படும் நிலையில் உள்ளன. இந்த 7 வாகனங்களிலும் 5 வாகனங்களில் பொத்தானை அழுத்தினால், 20 நிமிடங்கள் காத்திருந்தும் டெல்லி காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • 43 வாகனங்களில் 29 வாகனங்களில் ‘அபாய பொத்தான்’ இல்லை. 29 கார்களில் 15 கார்களில் இருந்த ஓட்டுநர்கள், 2016 ஆம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அபாய பொத்தானைப் பயன்படுத்தியதாக அறிவித்த போதிலும், வரி சான்றிதழ்களுடன் வாகனங்களை ஹரியானா மற்றும் உ.பி.யில் இருந்து வாங்கியதாகக் கூறினர். மற்ற 14 பேர் தங்கள் கார்களின் ஓட்டுநர்கள், இந்த ‘அபாய பொத்தான்’ கட்டாயமாக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கு முன்பு வாங்கியதாகக் கூறினர்.
  • 43 பேர் கார் ஓட்டுநர்களில் மீதமுள்ள, 4 ஓட்டுநர்கள் தங்கள் கார்களில் உள்ள அபாய பொத்தான்கள் தங்கள் குழந்தைகளால் உடைக்கப்பட்டதாகக் கூறினர்; ஆர்வத்துடன் பயணிகள் அதைத் தள்ளுவதைத் தடுக்க பொத்தானை முடக்கியதாக 3 பேர் கூறினார்கள். மேலும், 7 ஓட்டுநர்கள், பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்ட பிறகு அபாய பொத்தான்கள் வேலை செய்யாமல் போய்விட்டது என்று கூறினார்கள்.

நவம்பர் 28, 2016 அன்று, உபெர் பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் டெல்லி அரசாங்கத்தால் உபேர் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத காலத் தடையை அடுத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இரு சக்கர வாகனங்கள் தவிர அனைத்து பொது சேவை வாகனங்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மூன்று சக்கர வாகனங்கள், மற்றும் இ-ரிக்ஷாக்களில் வாகனம் எங்கே செல்கிறது என்று கண்காணிக்கும் (VLTD) கருவி மற்றும் அபாய பொத்தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

publive-image

ஏப்ரல் 18, 2018 அன்று, அமைச்சகம் ஒரு தேதியைக் குறிப்பிட்டு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. ஜனவரி 1, 2019 அன்றும் அதற்குப் பிறகும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் இந்த பாதுகாப்பு அம்சத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியது.

அபாய பொத்தானை அழுத்தியதும், போக்குவரத்துத் துறையின் நோடல் ஏஜென்சியான டெல்லி ஒருங்கிணைந்த மல்டி மாடல் டிரான்சிட் சிஸ்டம் (DIMTS) மூலம் கண்காணிக்கப்படும் சேவையகங்களுக்கு ஒவ்வொரு ஐந்து வினாடிக்கும் ஒரு எச்சரிக்கை அனுப்பப்படும். இது உடனடியாக டெல்லி காவல்துறையின் அவசரகால பதில் உதவி அமைப்புக்கு ( ERSS) 112 எண்ணுக்கு அனுப்பப்படும் . ஆனால், அதிகாரிகள் கூறுகையில், “இரண்டு அமைப்புகளுக்கு இடையே மென்பொருள் ஒருங்கிணைப்பு இல்லாததால் இதுவரை காவல்துறையை எச்சரிப்பது அதிக நேரம் எடுக்கும் செயலாக உள்ளது. என்று தெரிவித்தனர்.

“தற்போது, ஒரு வாகனத்தில் இருந்து அபாய பொத்தான் எச்சரிக்கையைப் பெறும்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை நாங்கள் அழைக்கிறோம். அது விவரங்களை பி.சி.ஆர். வேனுக்குத் தெரிவிக்கிறது. சரியான காவல் எல்லையைக் கண்டுபிடிப்பதில் நிறைய நேரம் வீணடிக்கப்படுகிறது” என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லி புள்ளியியல் கையேடு 2021 இல் குறிப்பிட்டுள்ளபடி, தலைநகர் டெல்லியில் 1,12,401 தனியார் வாடகை டாக்சி வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்து ஆணையர் ஆஷிஷ் குந்த்ரா கூறுகையில், 2019 க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட 11,832 வாடகை டாக்சிகளில் தலைநகரில் வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் (VLTD) கருவி மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன - மேலும் எச்சரிக்கைகளை அனுப்ப இணைய அடிப்படையிலான செயலி மூலம் அணுகலாம் என்று கூறினார்.

"இருப்பினும், பி.சி.ஆர் 112 தொடர்பு அமைப்புடன் அபாய எச்சரிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, ஏ.பி.ஐ (Application Programming Interface) ஆவணம் மற்றும் நற்சான்றிதழ்கள் துணை போலீஸ் கமிஷனரிடமிருந்து (செயல்பாடுகள் மற்றும் தொடர்பு) போக்குவரத்து துறையால் பெறப்படுகிறது. ஒருங்கிணைப்பு ஒரு மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. இது ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று குந்த்ரா கூறினார். ஏ.பி.ஐ என்பது இரண்டு செயலிகள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு மென்பொருளாகும்.

டெல்லியில் உள்ள வாடகை டாக்சிகளில் இருந்து தினமும் சராசரியாக 50 அபாய பொத்தான் எச்சரிக்கை அழைப்புகள் பெறப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலானவை பணம் செலுத்தும் பிரச்சனையில் ஓட்டுனருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்படும் சண்டைகள் காரணமாக வருகிறது என்று குறுகிறார்கள்.

இதுகுறித்து டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா கூறியதாவது: உபேர் அல்லது ஓலா போன்ற வாடகை டாக்சிகளில் இருந்து இதுவரை எந்த அபாய பொத்தான் எச்சரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பின்படி இதை போக்குவரத்து துறை மேற்கொள்ள வேண்டும். இதை எதிர்கொள்ள, ஹிம்மத் ப்ளஸ் போன்ற எங்களின் சொந்த செயலிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மேலும், எங்களின் பி.சி.ஆர் வேன்களை அதிநவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தியுள்ளோம். இது அவசர அபாய அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும்.

போக்குவரத்துத் துறையின் கண்காணிப்பு நிறுவனத்துடன் காவல்துறை தங்கள் மென்பொருளை ஒருங்கிணைக்க சுமார் 20 நாட்கள் ஆகும் என்றும், இந்த முயற்சியில் ஈடுபட்டு வரும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் (CDAC) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நல்வா கூறினார்.

இந்த தாமதம் குறித்து கேட்டதற்கு, போக்குவரத்து ஆணையர் குந்த்ரா கூறியதாவது: “இந்த ஒருங்கிணைப்பு முறைகள் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அமலாக்க முகமையால் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்படுகின்றன.” என்று கூறினார்.

பேருந்துகளுக்கான மென்பொருள் ஒருங்கிணைப்பு (டெல்லி போக்குவரத்துக் நிறுவனம் மற்றும் கிளஸ்டர் சேவைகள்) நிறைவடைந்துள்ளதாக குந்த்ரா மற்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நல்வா ஆகியோர் தெரிவித்தனர்.

டெல்லி ஒருங்கிணைந்த மல்டி-மாடல் டிரான்சிட் சிஸ்டத்தில் இருந்து வரும் ஒவ்வொரு அழைப்புக்கும் 15-20 நிமிடங்களுக்குள் பதிலளிப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அழைப்பவரின் இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்க முடியும் என்பதால் சவாரி செய்பவர்கள் நேரடியாக 112 எண்ணிற்கு அழைப்பது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், 112 அவசர எண்ணுக்கு அழைக்கும் அமைப்பிலும் சில தவறுகள் உள்ளன. உதாரணமாக, வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ்-ஜியோ நெட்வொர்க்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் அழைப்பாளரின் தொடர்ச்சியான இருப்பிடத்தைக் காட்டவில்லை. இது சரியான நேரத்தில் தொடர்பு கொள்வது முக்கியமானது என்று ஒரு அதிகாரி கூறினார்.

“அது இடத்தை விட்டுவிட்டு காட்டுகிறது. ஆனால், தொடர்ச்சியாக காட்டுவதில்லை. எங்களிடம் கணினியில் சில தவறுகள் உள்ளன. மேலும், இந்த நெட்வொர்க்குகளுக்கான இருப்பிட அடிப்படையிலான சேவைகளை மேம்படுத்த சிறப்பு கணினி மேம்பாட்டு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் நல்வா கூறினார்.

உபெர் அதற்கேன தனியாக சொந்தப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் செயலியில் உள்ள அவசர உதவி அழைப்பு காவல்துறையினருக்கு எச்சரிககி வழங்குதல், நம்பகமான தொடர்புகளுடன் சவாரி நிலையைப் பகிர்தல் மற்றும் 24×7 பாதுகாப்புக் குழு ஆகியவை அடங்கும். ஆனால், முக்கியமாக, அபாய பொத்தானைப் போலல்லாமல், இந்த அம்சங்கள் அனைத்தும் சவாரி செய்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும்.

சவாரி செய்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த, உபேர் நிறுவனத்தின் சவாரி-பகிர்வு செயலியானது, அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு விற்பனையாளரால், உபெரில் முதல் பயணத்தை மேற்கொள்வதற்கு முன், அனைத்து ஓட்டுனர்களுக்கும் கட்டாய பின்னணிச் சரிபார்ப்பை இயக்குகிறது என்று உபேர் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குந்த்ராவின் கருத்துப்படி, வழக்கமான கண்காணிப்பைத் தவிர, வருடாந்திர சான்றிதழ்களை வழங்கும் நேரத்தில் இந்த சாதனங்களின் கட்டாய சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அபாய பொத்தான்கள் அல்லது வாகனங்களின் இருப்பிடத்தை கண்காணிக்கும் கருவியை சேதப்படுத்தும் ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்துத் துறை வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதித்து ரசீதுகளை வழங்கும். மேலும், இணங்காத சந்தர்ப்பங்களில், வாகனம் வாகன் மென்பொருள் மூலம் தானாகவே தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

தவிர, ஜூலை 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டெல்லி மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு திட்டத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்று, போக்குவரத்துத் துறையின் இணைய அடிப்படையிலான இணைய தளங்களை அணுகுவதாகும். அதில் செயலிகள் தங்கள் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களின் விவரங்களைப் அப்டேட் செய்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டிய உபேர் வாகனங்களின் ஓட்டுநர்கள் இதில் உள்ள மற்ற ஓட்டைகளை சுட்டிக்காட்டினர். டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள புராரி சோதனை மையத்தில், அபாய பொத்தான்கள் செயல்படாமல் தங்கள் வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்றிதழ்களைப் பெற்றதாக அவர்களில் பலர் தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள இந்த இரண்டு மையங்களில் ஒரு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த மையத்திற்கு தினமும் சுமார் 800 வாகனங்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு வாகனமும் இயங்கும் அபாய பொத்தானைச் சரிபார்ப்பது கடினம். ஆவணங்கள் இடத்தில் உள்ளதா மற்றும் வாகனம் சேதமடைந்த நிலையில் இல்லையா என்பதையே நாங்கள் முக்கியமாக பார்க்கிறோம்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள டிரக்குகளுக்கு அனுமதி அளிக்கும் மற்ற சோதனை வசதிகளைப் போல, புராரியில் உள்ள தானியங்கி சோதனை நிலையத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக போக்குவரத்து ஆணையர் குந்த்ரா கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Delhi Uber
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment