Advertisment

உத்தவ் தாக்கரே அவர் தந்தையைப் போன்ற போர்க்குணம் கொண்டவர் இல்லை!

2012 இல் பால் தாக்கரே இறந்ததிலிருந்து, எதிரிகளும் கூட்டணி கட்சிகள் என்று கூறப்படுபவர்களாலும், அவரது அரசியல் வாரிசான மகன் உத்தவ் தாக்கரேவை ஏளனம் செய்ததை சிரமத்துடன் மறைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live - Shiv Sena About jharkhand Election

Tamil Nadu news today live - Shiv Sena About jharkhand Election

விஷ்வாஸ் வாக்மோடே, கட்டுரையாளர்

Advertisment

2012 இல் பால் தாக்கரே இறந்ததிலிருந்து, எதிரிகளும் கூட்டணி கட்சிகள் என்று கூறப்படுபவர்களாலும், அவரது அரசியல் வாரிசான மகன் உத்தவ் தாக்கரேவை ஏளனம் செய்ததை சிரமத்துடன் மறைத்தனர். அவர் சிவசேனா போன்ற ஒரு தீவிரமான தொண்டர்கள்களை அடிப்படையாகக் கொண்ட கட்சியை வழிநடத்த போதாதவராகவும், மிகவும் கவனமானவராகவும் மென்மையானவராகவும் காணப்பட்டார்.

பாஜகவில், அவரது போர்க்குணமிக்க தந்தையைப் போலல்லாமல், உத்தவ் தாக்கரேவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பப்பட்டது. இருப்பினும், பாஜகவும் அவரது எதிர்ப்பாளர்களும் 59 வயதான உத்தவ் தாக்கரேவை தவறாகப் புரிந்துகொண்டனர் என்பது வெள்ளிக்கிழமை தெளிவாகத் தெரிந்தது.

சிவசேனாவின் அரசியல் பாதையில் ஒரு கட்டமைப்பு மாற்றத்தைத் ஏற்படுத்திய உத்தவ் தாக்கரேவின் யுக்தியை அவரது தந்தை கூட அவரது வாழ்நாளில் கற்பனை செய்திருக்க முடியாது.

பால் தாக்கரேயின் மூன்று குழந்தைகளில் இளையவரான உத்தவ் தாக்கரே சிவசேனாவை வழிநடத்த வாய்ப்பில்லை. கேமராக்கள் மற்றும் தற்கால தொழில்நுட்ப விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவராதலால் அவர் நிர்வாகத்துக்கு ரகசியமாக உதவக் கூடியவராகவே கருதப்பட்டார். அவர் தனது தந்தையால் மாநில அரசியலின் கடினமான மற்றும் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டார். பின்னர், அவர் தான் மட்டுமே தனது அரசியல் பாரம்பரியத்தை முன்னெடுக்க முடியும் என்று நம்பினார்.

உத்தவ் தாக்கரே தனது ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) தலைவரோடு ஒப்பிடும்போது கட்சியில் அவரது பயணத்தை தாமதமாகவே தொடங்கினார். அப்போது அவர் பாலாசாகேப்பின் ஆர்வமுள்ள வாரிசாகக் காணப்பட்டார். 2002 மும்பை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரு திருப்புமுனையாக இருந்தன என்று சேனா வட்டாரங்கள் கூறுகிறது. அந்தத் தேர்தல்களில் சேனாவின் வெற்றியில் உத்தவ் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தார். மேலும் 2003 ஜனவரியில், அவர் கட்சியில் கட்சியில் செயல் தலைவராக நுழைந்தார்.

தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?

அவரது தலைமையை அவரது உறவினர் ராஜ் மற்றும் முன்னாள் சிவசேனா முதல்வர் நாராயண் ரானே ஆகியோர் எதிர்த்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. நாராயண் ரானே 2005 இல் கட்சியை விட்டு வெளியேறி ஒரு டஜன் எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். அதே நேரத்தில் ராஜ் தனது சொந்த கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவை 2006 இல் உருவாக்கினார் என்பது ஆச்சரியமல்ல. அவரது ஆரம்ப காலகட்டத்தில் முட்டாள்தனமான தலைமை மற்றும் மூர்க்கமான தலைவர்களின் வெளியேற்றம் காரணமாக, சேனா ஒரு சதியைத் தூண்டிவிடும் அல்லது எதிர்கொள்ளும் என்று பலரும் நம்பினர்.

உத்தவ் தாக்கரே கட்சிக்குள் தனது நிலையை படிப்படியாக பலப்படுத்திக் கொண்டு, உள்ளூர் தொண்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி, கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றார்.

சிவசேனா பார்வையாளர்கள் கூறுகையில், அவரது நடத்தை ஒரு தீவிரமான சிவசேனாக்காரரைவிட வங்கி அதிகாரியைப் போல இருந்தது என்றாலும், அவரது தொண்டர்களுக்கு செவிசாய்க்கும் விருப்பமும், அவரது முடிவுகளில் உறுதியாக இருப்பதும் அவரது உறுதியும் அவரை கட்சி தொண்டர்களை நேசிக்கச் செய்தது.

மகாராஷ்டிராவில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜகவுடனான 30 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவில் கடந்த மாதம் அவர் தீர்மானித்ததாக கட்சிப் பணியாளரக்ள் கூறுகிறார்கள்.

புகைப்படம் எடுப்பதை நேசிக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது தந்தை அல்லது உறவினருடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல பேச்சாளர் அல்ல. ஆனால், அவரது மென்மையான வெளித்தோற்றத்துக்குப் பின்னால், ஒரு கடினமான பேச்சுவார்த்தையாளரும் தொழில்நுட்ப ஆர்வலரும் நிர்வாகியும் உள்ளனர்.

முதல்வர் பதவியை ஏற்க முடிவு செய்ததன் மூலம், அவர் பாலாசாகேப் மற்றும் பாஜகவின் நிழலிலிருந்து வெளியே வர முடிந்தது. மேலும், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்காத பால் தாக்கரேவின் குடும்ப பாரம்பரியம் என்பதையும் உடைத்துள்ளார்.

உத்தவ் தாக்கரே 2012 இல் இதய வால்வு அடைப்புகளை அகற்ற ஆஞ்ஜியோபிளாஸ்திரி சிகிச்சை செய்துகொண்டார். அந்த ஆண்டு நவம்பரில் அவரது தந்தை இறந்தது ஆகியவை மேலும் அவரை மெதுவாக்கியது. 2014 சட்டமன்றத் தேர்தல்கள் அவருக்கு ஒரு சவாலாக இருந்தது. அவரது தந்தை இல்லை. ஒரு புதிய, ஆக்ரோஷமான பாஜக சமன்பாட்டை மாற்றுவதால், அவர் போராட நிறைய இருந்தது. கடைசி நிமிடத்தில் சேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள பாஜக எடுத்த முடிவுதான் அவருக்கு ஆரம்ப அதிர்ச்சியாக இருந்தது.

உத்தவ் தாக்கரே மோடி அலை மற்றும் பாஜகவின் வலிமைக்கு எதிராக இன்னும் போராடி கட்சிக்கு 63 இடங்களை வெற்றி பெற்றுத் தர முடிந்தது.

தேர்தல்களில் சுதந்திரமாக எதிர்த்துப் போட்டியிட்ட பிறகு எல்லா நேரத்திலும் அதிக இடங்களைப் பெற்றார். 2014 முதல், உத்தவ் பாஜகவின் புதிய ஆக்கிரமிப்பு மற்றும் கூட்டணியில், மாநில அரசாங்கத்திலும், மத்தியிலும் பெரிய அண்ணன் பாத்திரத்தில் இருந்து தன்னை தளர்த்திக்கொண்டார். ஆனால், அவர் கட்சிப் பத்திரிகையான சாம்னாவைப் பயன்படுத்தினார். அதன் தீவிர ஆசிரியர் சஞ்சய் ரவுத்துக்கு பாஜகவைத் தாக்க முழு சுதந்திரம் அளித்தார். இது பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி. அமல்படுத்துதல் உள்ளிட்ட கொள்கை பிரச்னைகளில் அவருக்கு தேவைப்படுகிறது.

Maharashtra Shiv Sena Uddhav Thackeray
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment