Advertisment

இங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்

இங்கிலாந்தில் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு காலவரையற்ற விடுமுறை (ஐ.எல்.ஆர்) மறுக்கப்பட்டதை அடுத்து 250-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திற்கு ஒரு திறந்த கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dr asiya islam, cambridge research fellow asked to return to india, uk visa, uk home department, டாக்டர் ஆசியா இஸ்லாம், இங்கிலாந்து கல்வியாளர்கள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், UK academics, Home Department of England, academics asks researcher to stay in England, India, Tamil indian express

dr asiya islam, cambridge research fellow asked to return to india, uk visa, uk home department, டாக்டர் ஆசியா இஸ்லாம், இங்கிலாந்து கல்வியாளர்கள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், UK academics, Home Department of England, academics asks researcher to stay in England, India, Tamil indian express

இங்கிலாந்தில் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு காலவரையற்ற விடுமுறை (ஐ.எல்.ஆர்) மறுக்கப்பட்டதை அடுத்து 250-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திற்கு ஒரு திறந்த கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisment

டாக்டர் ஆசியா இஸ்லாம் (31 வயது) கேம்பிரிட்ஜ் சமூகவியல் துறையில் ஜூனியர் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் இங்கிலாந்துக்கு வெளியே அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் செலவிட்டார் என்ற அடிப்படையில் இங்கிலாந்தில் தங்குவதற்கான அவரது கோரிக்கை கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், எவ்வாறாயினும், ‘நகர்ப்புற இந்தியாவின் புதிய பொருளாதாரத்தில் பாலினம், வர்க்கம் மற்றும் உழைப்பு’ குறித்த தனது பிஎச்.டி ஆய்வுக்காக இந்தியாவில் களப்பணிகளைச் செய்ய நேரம் செலவிடப்பட்டதாக டாக்டர் ஆசியா இஸ்லாம் கூறியுள்ளார்.

“களப்பணி எனது பணியின் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் நாட்டை விட்டு வெளியேறிய எனது நாட்களை கணக்கிடக்கூடாது என்ற வழக்கை முன்வைக்க நான் பல கடிதங்களை வழங்கினேன். ஆனால், நான் வெளிப்படையாக உங்கள் நேரத்திற்குப் புறம்பான ஆதாரங்களை வழங்குவதற்காக விதிவிலக்கான காரணங்களை வழங்கத் தவறிவிட்டேன்” என்று ஆசிய இஸ்லாம் டுவிட் செய்துள்ளார்.

அவருக்கு ஆதரவாக பேசுபவர்கள் அவர் மிகவும் மரியாதைக்குரிய கல்வியாளர் என்று கூறுகின்றனர். மேலும், உள்துறை அலுவலகத்தின் முடிவால் அவரது பணி தடைபட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை இங்கிலாந்திலிருந்து வெளியே செல்ல வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

“டாக்டர் ஆசியா இஸ்லாம் நியூன்ஹாம் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி சமூகத்தின் மிகவும் மதிப்புமிக்க உறுப்பினர். டாக்ட ஆசியா இஸ்லாமின் கல்வி சாதனைகள்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கேட்ஸ் ஸ்காலராக இருந்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சிறந்த பட்டப்படிப்பு செயல்திறனாளர் விருது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கல்வித் திறனுக்காக டாக்டர் ஜாகிர் உசேன் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர் என்று நியூன்ஹாம் கல்லூரி செய்திதொடர்பாளர் கூறியதாக பிடிஐ செய்தி சிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், டாக்டர் ஆசியா இஸ்லாம்க்கு ஆதரவாக எழுதப்பட்ட திறந்த கடிதத்தில் உள்துறை அலுவலகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் பிரிதி படேலை அவருடைய விண்ணப்பத்தை தீர்மானிப்பதில் உரிய முடிவெடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

“அவரது வழக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் 2 அடுக்கு ஆராய்ச்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கை மாற்றங்கள் இருந்தபோதிலும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் திறமையான பிஎச்.டி ஆராய்ச்சியாளர்களை பல ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபடுத்தி இருப்பதை இழந்துவிடும் என்பதற்கான ஒரு முன்னறிவிப்பு எச்சரிக்கையை இது அனுப்புகிறது” என்று அந்த கடிதம் கூறுகிறது.

உள்துறை அலுவலகம் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது, அவருக்கு 31 வயதாக இருந்ததால், அவர் இந்தியாவில் வாழ்க்கையிலும் சமூகத்திலும் மீண்டும் ஒன்றிணைய முடியும் என்றும், வாழ்க்கையை மீண்டும் ஸ்தாபித்து புதிய நட்பை உருவாக்க முடியும் என்றும் கூறிய்யுள்ளது.

ஆசியா இஸ்லாம் இப்போது உள்துறை அலுவலகத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு நபர் 10 ஆண்டுகளில் 540 நாட்களுக்கு மேல் இங்கிலாந்திலிருந்து வெளியே வந்திருந்தால் 4 அடுக்கு மாணவர் விசா பிரிவின் கீழ் அவருடைய ஐ.எல்.ஆர் விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படுகிறது.

India England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment