Advertisment

இனி இது ”ஃபேர்” கிடையாது - நிறபாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க யுனிலீவர் முடிவு

லைட் ஸ்கின் டோன் தான் தன்னம்பிக்கை, அழகு, மற்றும் திருமண வாய்ப்பிற்கான தகுதி போன்று ஒப்பீடு செய்து விமர்சனங்களை பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Unfair & Lovely, Unilever admits, will change cream name

Unfair & Lovely, Unilever admits, will change cream name

Surbhi Gupta

Advertisment

50 ஆண்டுகளுக்கு பிறகு ஃபேர் அண்ட் லவ்லியின் பெயரை மற்ற முடிவு செய்துள்ளது ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம். இந்த க்ரீமின் பெயரில் இருந்து ஃபேரை நீக்குவதின் மூலம் அழகு குறித்த பார்வையை மாற்றியுள்ளது. மேலும் இந்த விளம்பரத்தில் வரும் ஃபேர்/ஃபேர்னஸ், வொய்ட்/வொய்ட்னிங், லைட் / லைட்னிங் போன்ற அனைத்து வார்த்தைகளையும் நீக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

அனைத்து நிறங்களுக்கும் ஏற்ற அக்கறை செலுத்துவதையும், அழகின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கும் ஏற்ற வகையில் தோல் பராமரிப்பு பிராண்டுகளின் உலகளாவிய போர்ட்போலியோவை உருவாக்க முடிவு மேற்கொண்டுள்ளோம். ஃபேர், ஒயிட், மற்றும் லைட் போன்ற வார்த்தைகளின் பயன்பாடு அழகுக்கான ஒரு தனித்துவமான இலட்சியத்தை பரிந்துரைக்கிறது என்பதை உணர்கிறோம் ஆனால் அது சரியானது என்று நாங்கள் நினைக்கவில்லை என்று யுனிலிவரின் பியூட்டி & பெர்சனல் கேர் தலைவர் சன்னி ஜெய்ன் அறிவித்துள்ளார்.

தெற்காசியாவில் விளம்பரம், தகவல் தொடர்பு மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றை மாற்றிய பிறகு பிராண்டின் பெயரை மாற்றுவதற்கான அடுத்த கட்டத்தை நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறினார் ஜெய்ன். ஜூன் 17ம் தேதி அன்று காப்புரிமை வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரையின் கட்டுப்பாட்டு ஜெனரலை அணுகி க்ளோ & லவ்லி என்ற பெயரை பதிவு செய்துள்ளது அந்நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

To read this article in English

இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானம் ஈட்டுகிறது. இந்நிறுவனம் வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஆசியர்கள் வாழும் மேற்கு நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்று கறுப்பினரின் மரணத்தின் பின்னாள் ஏற்பட்ட ”ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்” என்ற இயக்கம் உலகளவில் நிறுவனங்களை இனவெறி, நிறவாதம் மற்றும் பாகுபாட்டினை பயன்படுத்தி தங்கள் வணிகங்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளையும் மறு மதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளன.

இது போன்ற நிறவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்நிறுவனங்களின் ப்ராண்ட்கள் பெயருக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மனுக்கள் ஆன்லைனில் அதிகரிக்க துவங்கியது. ஆசியாவில், L’Oréal, Shiseido மற்றும் Procter & Gamble உள்ளிட்ட பல அழகு சாதன நிறுவனங்கள் தங்கள் வணிகங்களில் பெரும் பகுதியை இது போன்ற கிரீம்களுக்காக பயன்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர்களான ப்ரியங்கா சோப்ரா, கட்ரீனா கைஃப், தீபிகா படுகோனே, சோனம் கபூர், யாமி கௌதம், ஷாருக் கான் போன்றோர்கள் தங்களின் கரியரில் இது போன்ற க்ரீம்களை விளம்பரப்படுத்தியுள்ளனர். சில ஆண்டுகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஃபேர் அண்ட் லவ்லி க்ரீம் தற்போது லைட் ஸ்கின் டோன் தான் தன்னம்பிக்கை, அழகு, மற்றும் திருமண வாய்ப்பிற்கான தகுதி போன்று ஒப்பீடு செய்து விமர்சனங்களை பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியாவில் நிறவாதத்திற்கு முடிவு கொண்டுவரும் எங்கள் பயணத்தின் ஒரு மைல்கல் இது. ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், அது எங்களுக்கு 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. நாங்கள் பல நிறுவனங்களுக்கு இது தொடர்பாக எழுதினோம், ஆனால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், ”என்று 2009-ஆம் ஆண்டில் நிறவாதத்திற்கு எதிராக டார்க் இஸ் பியூட்டிஃபுல் என்ற காம்பெய்னை துவங்கிய கவிதா இம்மானுவேல் நம்மிடம் கூறினார். இது போன்ற தயாரிப்புகளை கைவிடுவதும், பெயர் மாற்றம் செய்வதும் நிற பேதத்தினை முடிவுக்கு கொண்டு வரும் என்று வுமென் ஆஃப் வொர்த் நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான நியூட்ரோஜீனா ஃபைன் ஃபேர்னஸ் க்ரீம் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் கூறியிருந்தது. ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே இந்த க்ரீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று க்ளீன் அண்ட் க்ளியர் ஃபேர்னஸ் கிரீம் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த ஃபேஸ்வாஷ் க்ரீம் விற்பனையையும் நிறுத்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் மேட்ரிமோனியல் சைட்டான shaadi.com-ல் நிறத்தேர்வுக்கான ஃப்ள்ட்டரை தூக்கிவிட முடிவு செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் சுகாதரத்துறை நிறுவனம் ஃபேர்னஸ் க்ரீம்களை ப்ரொமோட் செய்யும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என்றும் மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ”சே”-வின் வீடு விற்பனைக்கு! கலாச்சார மையமாக மாறுமா? மக்கள் எதிர்பார்ப்பு

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அயர்லாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ஆராய்ச்சி மற்றும் சந்தை நிறுவனம் “இந்தியா ஃபேர்னெஸ் கிரீம் & ப்ளீச் சந்தை கண்ணோட்டம் என்ற தலைப்பின் கீழ் நடத்திய ஆய்வில் பெண்களின் ஃபேர்னெஸ் கிரீம் 2023-ஆம் ஆண்டில் ரூ .5,000 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தது.  இது மிகவும் தைரியமான, வரவேற்க தகுந்த முடிவாகும் என்று மும்பையை சேர்ந்த தாப்ரூட் டெண்ட்ஸு என்ற நிறுவனத்தின் தலைவர் பல்லவி சக்ரவர்த்தி கூறியுள்ளார். இது நிறுவனத்தின் பெயரை மறுபரீசிலனை செய்வதால் மட்டும் சாத்தியமடைவதில்லை. அவர்கள் எப்படி விளம்பர யுக்திகளை கையாளுகின்றார்கள் எனப்திலும் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment