Advertisment

Budget 2020 Updates : மிடில் கிளாஸ் மக்கள் இனி எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

Union Budget 2020 Coverage : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Budget 2020 Updates

Budget 2020 Updates

Budget 2020 : 2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

Advertisment

Budget 2020 updates

Union Budget India 2020-21 Latest Updates:..

 

2019-20ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், அப்போதைய இடைக்கால நிதி அமைச்சர் பியுஸ் கோயல், 5 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவித்தார். இதே போன்ற அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டிலும் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், வேலையில்லா இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தை பலப்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான அறிவிப்புகளும் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஹெல்மெட் எதற்காக அணிகிறோம்?’ – வைரலாகும் காவலர் வீடியோ

Live Blog

Budget 2020 Updates, Union Budget 2020 Latest Updates in tamil



























Highlights

    16:08 (IST)01 Feb 2020

    மக்களுக்கு அல்வா

    கமல்ஹாசன் தனது ட்விட்டரில்,

    என்று பதிவிட்டுள்ளார்.

    15:03 (IST)01 Feb 2020

    ஜி.எஸ்.டி மொத்த வசூல் 1,10,828 கோடி

    2020 ஜனவரியில் 1,10,828 கோடி ஜிஎஸ்டி மொத்த வருவாய் வசூலிக்கப்பட்டதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த மாதாந்திர வசூல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    14:36 (IST)01 Feb 2020

    வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கலாம்....

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர் திடீரென முடித்தார்.  நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”இது வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கலாம், ஆனால் அதில் ஒன்றும் இல்லை, வெற்றுத்தனமாக இருந்தது " என்றார். 

    14:21 (IST)01 Feb 2020

    இன்றைய பட்ஜெட் இது தான்

    13:53 (IST)01 Feb 2020

    100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்

    2024ஆம் ஆண்டுக்குள் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். தேஜஸ் போன்ற ரயில்கள் மேலும் அறிமுகப்படுத்தப்படும். ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் ரயில்பாதைக்கு அருகே மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தித் திறன் நிறுவப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. 

    13:51 (IST)01 Feb 2020

    மகளிர் நலத் திட்டங்களுக்கு 28,600 கோடி ஒதுக்கீடு

    மகளிர் நலத்திட்டங்களுக்கென 28,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையத்தின் விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படும், வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய எளிமைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலாக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:33 (IST)01 Feb 2020

    டிவிடெண்ட் விநியோக வரி ரத்து செய்யப்பட்டது.

    பொதுவாக ஒரு நிறுவனத்தின் லாபங்களை அந்நிறுவனத்தின் நிறுவனர்கள்,  சிறு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என அவர்கள் வைத்திருக்கும் பங்குகள் அடிப்படையில் டிவிடெண்ட் வழங்கப்படுவது வழக்கம்.  இதற்கு தற்போது 15 சதவீதம் வரை வரிவிதிக்கப்படுகிறது. இந்த  டிவிடெண்ட் விநியோக வரியை( ஈவுத்தொகை விநியோக வரி) தற்போது மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.   

    13:20 (IST)01 Feb 2020

    மத்திய பட்ஜெட் 2020 : தனிநபர் வருமான வரியில் சலுகை அறிவிப்பு -

    தனிநபர் வருமான வரியில் புது சலுகையை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    இதன் கீழ்,

    ரூ. 5 முதல் 7.5 லட்சம் வருமானம் கொண்ட மக்கள்,  10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும் ( இது முந்தைய 20 சதவீதமாக இருந்தது) 

    ரூ.7.5 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வருமானம் கொண்ட மக்கள்,  15 சதவீதம் வருமான வரி  செலுத்த வேண்டும்.  

    12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானம் கொண்ட மக்கள் 25%  வருமான வரி செலுத்த வேண்டும் 

    15 லட்சத்துக்கு மேல் வருமானம் கொண்ட மக்கள் 30% வருமான வரி செலுத்த வேண்டும் 

    ரூ .5 லட்சம் வரை சம்பாதிக்கும் மக்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    13:09 (IST)01 Feb 2020

    எல்.ஐ.சி பங்குகளில் ஒரு பகுதியை விற்க அரசு முடிவு

    எல்.ஐ.சி-யில் தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்க அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

    கார்ப்பரேட் பத்திரங்களில் அன்னிய நேரடி முதலீடு வரம்பு  15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது (தற்போது இந்த வரம்பு 9%). 

    13:01 (IST)01 Feb 2020

    ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.30,757 கோடி  ஒதுக்கீடு

    புதிதாக உருவாக்கபப்ட்ட ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.30,757 கோடி  ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    12:47 (IST)01 Feb 2020

    வங்கிகளில் வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்

    வங்கிகளில், முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவத்தார். 

    இதுநாள் வரையில்,  ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு வைப்புதாரரின் வைப்புகளில் அதிகபட்சமாக ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) வரை காப்பீடு செய்யப்படுகிறது 

    12:45 (IST)01 Feb 2020

    மத்திய பட்ஜெட் 2020 : விவசாயிகள் ரயில் இயக்கப்படும்

    அழுகும் பொருட்களை உடனடியாக சந்தைக்கு எடுத்து செல்ல விவசாயிகள் ரயிலை இந்திய ரயில்வே இயக்கும் என்று நிர்மலா சீதாராமன். இந்த திட்டம்  அரசு-தனியார் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.   

    12:39 (IST)01 Feb 2020

    பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலனுக்கு 53,700 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.  

    12:36 (IST)01 Feb 2020

    சுற்றுலாத் துறைக்கு 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு முன்னுரிமை, 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  

    12:34 (IST)01 Feb 2020

    வள்ளுவர் குறளை எடுத்துரைத்த நிர்மலா சீதாராமன்

    பிணியின்மை  செல்வம் விளைவின்பம் ஏமம் 

    அணியென்ப நாட்டிவ் வைந்து 

    என்ற திருக்குறளை எடுத்துரைத்த நிர்மலா சீதாராமன் , வள்ளுவரின் குறளை இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைபடுத்தி வருகிறார் என்றும் கூறினார். 

    நாட்டிற்கு தேவையான ஐந்து முக்கிய அம்சங்கள் - 

    நோயின்மை 

    வளமை

    விளச்சல்

    இன்பம்

    பாதுகாப்பு 

    12:24 (IST)01 Feb 2020

    மத்திய பட்ஜெட் 2020 : 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கபடும்

    உடான் திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் .  

    12:20 (IST)01 Feb 2020

    மத்திய பட்ஜெட் 2020 : தரிசு நிலங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்

    தரிசு நிலம் வைத்துள்ள விவசாயிகள் சூரியசக்தி மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்கவும், உபரி மின்சாரத்தை சூரியசக்தி மின் தொகுப்புக்கு விற்பனை செய்யவும் உதவி செய்யப்படுவதுடன், தரிசு நிலமே இல்லாத வகையில் அவர்களது வாழ்க்கை மேம்படுத்தப்படும் 

    12:17 (IST)01 Feb 2020

    மத்திய பட்ஜெட் 2020 : மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்
    1. முன்மாதிரி விவசாயநிலா குத்தகைச் சட்டம் 2016
    2. முன்மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைச் சந்தை சட்டம் 2017
    3. முன்மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் மேம்பாடு மற்றும் வசதி சடட்ம் 2018 

    போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்று நிதி அமைச்சார் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   

    12:13 (IST)01 Feb 2020

    தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும்

    தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.  

    12:06 (IST)01 Feb 2020

    2020-21 ஆம் ஆண்டு கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    2020-21 ஆம் ஆண்டு கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு துறைக்கு  3,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    நாட்டின் சிறந்த 100 நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பை ஆன்லைன் மூலம் வளங்கும் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தும் என்றார் நிதி அமைச்சர்.  

    11:58 (IST)01 Feb 2020

    இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் வரை இன்டர்ன்ஷிப் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் வரை இன்டர்ன்ஷிப் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

    11:48 (IST)01 Feb 2020

    தான்ய லக்ஷ்மி திட்டம் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புது திட்டம்

    பெண்கள் சுய உதவிக்குழுக்காக  தான்ய லக்ஷ்மி திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். நபார்ட் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் இவர்களுக்கு தேவையான உதவி வழங்கப்பட்டும்.   

    11:42 (IST)01 Feb 2020

    வறுமையில் இருந்து 1 மில்லியன் பேர் மீட்கப்பட்டுள்ளனர் : நிர்மலா சீதாராமன்

    " போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் ஜிஎஸ்டி செயல்திறன் லாபம் ஏற்படுத்தியுள்ளது.  இன்ஸ்பெக்டர் ராஜ் ஒழிக்கப்பட்டுள்ளதால் ,  மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) பயனடைந்து வருகின்றனர். ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது.

    இப்போது ஒரு சராசரி குடும்பம் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் காரணமாக அதன் மாதாந்திர செலவினங்களில் சுமார் 4% மிச்சப்படுத்துகிறது.

    வறுமையில் இருந்து  1 மில்லியன் பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் "என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

    11:38 (IST)01 Feb 2020

    பசல் பீமா யோஜனா திட்டத்தின்  கீழ் 6.11 கோடி விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர் - நிர்மலா  சீதாராமன்

    ஃபசல் பீமாவின் கீழ் மொத்தம் 6.11 கோடி விவசாயிகள் காப்பீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். மாநில அரசு ஒத்துழைப்புடன் விவசாய மேலாண்மை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    பிரதான் மந்திரி குசும் திட்டத்த்தால் விவசாயிகள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் சார்ந்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு,  20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள்  அமைக்க வழிவகுக்க செய்யப்படும் 

    11:32 (IST)01 Feb 2020

    ஆத்திச்சூடி வரியை எடுத்துக் கூறிய நிதி அமைச்சர்

    இந்தியா விவசாயத் துறையைக் குறித்து பேசிய நிதி அமைச்சர், "பூமி திருத்தி உண்" என்ற  ஔவையாரின் கருத்தை முதன்மை படுத்தினார்.    தற்காலிக இந்தியா விவசாயத்திற்கு தேவை ஔவையாரின் இந்த வார்த்தைகள் என்றும் கூறினார்.  

    11:27 (IST)01 Feb 2020

    நிர்மலா சீதாராமன்: யூனியன் பட்ஜெட் 2020 வருமானத்தை உயர்த்தும்

    இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதாகக் கூறி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையைத்  தொடங்குகிறார். யூனியன் பட்ஜெட் 2020  வருமானத்தையும், மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிப்பதற்காக என்றார். 

    11:22 (IST)01 Feb 2020

    அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

    அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் (சப்கா சாத்சப்கா விகாஸ்)  என்ற குறிக்ளோடுடன் இந்திய அரசு உழைத்து வருகிறது. 

    மொத்தம் 60 லட்சம் பேர்கள்  புதிய வரி செலுத்துவோர் பட்டியலுக்குள் வந்திருக்கின்றனர். 105 கோடி ஜிஎஸ்டி   இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.  

    11:14 (IST)01 Feb 2020

    இந்திய மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரவை வழங்கியுள்ளனர்

    நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இந்திய மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். மக்கள் எங்கள் பொருளாதாரக் கொள்கைகளில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்த பட்ஜெட் மக்களின் நோக்கங்கள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று சீதாராமன் கூறினார். மேலும், இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவானதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.    

    10:57 (IST)01 Feb 2020

    பட்ஜெட் பத்திரிகை நூலகத்தில் உள்ள பழமையான புத்தகம்

    பட்ஜெட் பத்திரிகை நூலகத்தில் உள்ள பழமையான புத்தகங்களில் ஒன்று...

    10:45 (IST)01 Feb 2020

    பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தை அடைந்தார்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தை அடைந்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும்.

    10:22 (IST)01 Feb 2020

    நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதி அமைச்சர்- 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    நிதி அமைச்சார் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் அனுராக் தாகூர் தற்போது நாடாளுமன்றம் வந்தடைந்துள்ளனர்.  இன்னும் சற்று நேரத்தில் மத்திய அமைச்சகத்தின் பட்ஜெட் கூட்டம் நடக்க இருக்கின்றது.  

    10:18 (IST)01 Feb 2020

    பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றம் வந்தடைந்தது:

    #WATCH Delhi: Copies of #Budget2020 have been brought to the Parliament. Finance Minister Nirmala Sitharaman will present the Budget in Lok Sabha at 11 AM today. pic.twitter.com/z3gD0IkLO4— ANI (@ANI) February 1, 2020இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2020 நகல்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.publive-imagepublive-image

    10:12 (IST)01 Feb 2020

    கிராமப்புறங்களில் அதிக முதலீடுகளை எதிர்பார்கின்றோம் - காங்கிரஸ்

    இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் மாத சம்பளம் வாங்கும்  சாமனிய மக்களின் துயரங்களை துடைக்கும் வகையில்   வருமான வரி  தனிநபர் வருமான வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்படும் என்ப்று எதிர்பார்ப்பத்காக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பணமதிபீட்டு கொள்கையால் நொடிந்து போன  கிராமப்புறங்களுக்காக  அதிக முதலீடுகள் இந்த நிதியாண்டில் அறிவிக்கப்படும்  என்று நம்புவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது . 

    09:59 (IST)01 Feb 2020

    நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

    இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.  இந்த ஜனாதிபதி சந்திப்பு  பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    09:52 (IST)01 Feb 2020

    மத்திய பட்ஜெட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

    இந்தியாவின் நிதி மேலாண்மையில்  தமிழகர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம் என கூறலாம் . இந்திய பாராளுமன்றத்தில் இதுவரை 73 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதி 21 பட்ஜெட்டுகளை தமிழகத்தை சேர்ந்த 6 நிதி மந்திரிகள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே சன்முகள் செட்டியார் டி.டி. கிருஷ்ணமாச்சாரி சி.சுப்பிரமணியம் ஆர்.வெங்கடராமன் ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமன்  

    09:36 (IST)01 Feb 2020

    கடந்த காலங்களில் கல்விக்கு எவ்வளவு ஒதுக்கீடு ?

    இன்றிய மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு எவ்வளவு ஒதுக்கப்படும் என்று ஒட்டமொத்த இந்தியாவும் காத்துக்கிடக்கின்றது என்றால் அது மிகையாகாது.   மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது முதல் பதவிக்காலத்தில் கல்விக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்தது என்ற தகவலை இங்கே காண்போம்.  

    2014-15 வரவுசெலவுத் பட்ஜெட்டில்,  கல்வித் துறைக்கு 82,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.  இருப்பினும் பின்னர் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இந்த தொகை ரூ. 69,000 கோடி குறைக்கப்பட்டது.  

    அடுத்தடுத்த , பட்ஜெட்டுகளில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு சீராக உயர்த்தப்பட்டது.    2016-17 நிதியாண்டில் சுமார் 72,000 கோடி ரூபாய்,   பின்னர் 2017-18 நிதியாண்டில் ரூ .79,000 கோடிக்கு . நரேந்திர மோடியின் முதல் கால அரசாங்கத்தின் இறுதி ஆண்டில், கல்விக்கான ஒதுக்கீடு ரூ .85,000 கோடியாக இருந்தது. 

    09:24 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    பெருநிறுவன வரி : இது, பெரு நிறுவனங்கள் அல்லது கம்பெனிகள் அவை ஈட்டும் வருவாயை மீது செலுத்தும் வரியாகும்.

    குறைந்தபட்ச மாற்று வரி (MAT) : குறைந்தபட்ச மாற்று வரி (MAT) என்பது பூஜ்ஜிய வரி வரம்புக்குட்பட்டாலும் நிறுவனங்கள் செலுத்தும் குறைந்தபட்ச வரி ஆகும்.

    முதலீடுகளைத் திரும்ப பெறுதல்  : முதலீடுகளை திரும்ப பெறுதல் என்பது அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது என அர்த்தப்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் அரசாங்க நிறுவனங்களின் பங்குகளையே சொத்துக்களாக மாற்றி அவற்றை அரசாங்கம் விற்பனை செய்யும். இந்த பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தையும், அதன் மூலம் வாங்கப்படும் சொத்துக்களை பணமாக மாற்றுவதும் முதலீடுகளை திரும்பப் பெறுதல் என்று பொருள்படும்.

    09:23 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி : அரசாங்கத்தால் பெறப்பட்ட அனைத்து வருவாய்கள், வாங்கப்பட்ட கடன், அரசாங்கம் வழங்கிய கடன்கள் மூலம் பெறப்பட்ட வருவாய் ஆகியவை இந்திய ஒருங்கிணைந்த நிதியாகும் . அவசரகால நிதி மற்றும் பொது கணக்கு ஆகியவற்றிலிருந்து செய்யப்படும் சில விதிவிலக்கான செலவினம் தவிர இதர அனைத்து அரசு செலவும் இந்த கணக்கிலிருந்து செய்யப்படுகின்றன. சட்டத்தின்படி தவிர வேறு வகையில் பணத்தை இந்த நிதியத்திலிருந்து எடுக்க முடியாது.

    பொது கணக்கு : இந்திய அரசியலமைப்பு பிரிவு 266 (1)ன் கீழ், அரசு ஒரு வங்கியாக செயல்பட்டு பொது கணக்கு மூலம் நிதி பரவலாக பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. பொதுக் கணக்கு எடுத்துக்காட்டாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் சிறு சேமிப்புக்கள் ஆகியவற்றை கூறலாம். இந்த பணம் அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. வைப்புத்தொகையாளர்களிடம் திரும்பித்தர வேண்டும். இந்த நிதியிலிருந்து செலவினத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமில்லை.

    09:22 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    வெட்டுத் தீர்மானம் : பல்வேறு மானியக் கோரிக்கைகளை குறைப்பதற்கான தீர்மானம் இது. கொள்கை அடிப்படையிலும், புகார்கள் அடிப்படையிலும், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் அரசு நிர்ணயித்த மானியத்தை குறைக்க கோருவது வெட்டுத் தீர்மானமாகும்.

    கில்லட்டின் : துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சகத்தின் செலவினங்களையும் ஆராய்ந்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் இருப்பதில்லை. எனவே ஒவ்வொரு அமைச்சகத்தின் கோரிக்கைகள் மற்றும் மானியங்களையும் நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் முடிந்தவுடன், மக்களவை சபாநாயகர் அனைத்து அமைச்சகத்தின் செலவினங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை முடிவு செய்யாமல் மானியக் கோரிக்கைகளை ஓட்டெடுப்பிற்கு விட்டுவிடுகிறார். இத்தகைய நடவடிக்கையை ‘கில்லட்டின்’ என கூறுவதுண்டு.

    09:22 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    திருத்தப்பட்ட மதிப்பீடுகள் : திருத்தப்பட்ட மதிப்பீடுகள் என்பது அரையாண்டின் போது, மீதமுள்ள செலவினங்கள், புதிய சேவைகள் மற்றும் புதிய திட்டங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு போதுமான செலவுத்தொகை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தாகும். திருத்தப்பட்ட மதீப்பீட்டுக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் அனுமதி வழங்கப்படுவதில்லை. எனவே, தானாக செலவிற்கான எந்தவொரு அதிகாரத்தையும் அது வழங்கவில்லை. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் எந்த கூடுதலான திட்டங்களும் சேர்க்கப்பட்டால், அதற்கான செலவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ அல்லது மறு நிதி ஒதுக்கீடு ஆணையையோ பெற வேண்டும்.

    இந்திய அவசரகால நிதி : அவசரமாக எதிர்பாராத செலவினங்களுக்காகவும் அரசுக்கோ / நிர்வாகத்துக்கோ வழங்குவதற்காக ஜனாதிபதியிடம் வைக்கப்பட்டிருக்கும் நிதி இது.

    09:21 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    கணக்கு மீது வாக்களித்தல் : மானியக் கோரிக்கை மற்றும் முழுமையான ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்யும் வரை புதிய நிதியாண்டுக்கான ஒரு பகுதிக்குரிய, மதிப்பிடப்பட்ட செலவினங்களின் அடிப்படையில், செலவினத்தை மேற்கொள்ள, நாடாளுமன்றம் முன்கூட்டியே அனுமதி வழங்கும் வகையில் அளிக்கப்படும் அனுமதி வாக்கு.

    அதிகப்படி மானியங்கள் : மானியம் மற்றும் துணை மானியத்திற்கான மொத்த செலவுத்தொகை நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக சென்று விட்டால், அந்த கூடுதல் நிதியை அதிகமான மானியமாக கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 115ன்கீழ் நாடாளுமன்றத்திடமிருந்து பெற வேண்டும். இதற்கு வருடாந்திர வரவுசெலவுத்திட்டத்தின் போது, அதாவது மானியங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தல் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதல் போன்ற முழு செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பட்ஜெட் மதிப்பீடுகள் : இது, வருடாந்திர நிதி ஆண்டிற்கென அனைத்து அமைச்சகங்களுக்கும் அல்லது திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவாகும்.

    09:20 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    மூலதன பட்ஜெட் : மூலதன வரவுகள் மற்றும் செலுத்தப்படும் கட்டணங்களை உள்ளடக்கியது மூலதன பட்ஜெட். இது பங்குகளில் செய்யப்பட்ட மூலதனம், மத்திய அரசானது மாநில அரசுகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும், கழகங்களுக்கும் மற்றும் பிற தரப்பினருக்கும் வழங்கிய கடன் மற்றும் முன்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது.

    வருவாய் பட்ஜெட் : அரசாங்கத்தின் வருவாய் வரவு மற்றும் அதன் செலவினங்களை உள்ளடக்கியது வருவாய் பட்ஜெட் ஆகும். வருவாய் வரவானது வரி மற்றும் வரி அல்லாத வருவாய் என பிரிக்கப்படுகிறது. வரி வருவாய்கள் என்பது வருமான வரி, பெருநிறுவன வரி, வரி விதிப்பு, சுங்க சேவை, கலால் சேவை மற்றும் அரசு விதிக்கும் பிற வரிகளை உள்ளடக்கியது. வரி அல்லாத வருவாய் என்பது கடன்கள் மூலம் பெறப்படும் வட்டி, முதலீடுகள் மீது கிடைக்கும் ஈவுத்தொகை போன்றவை ஆகும்.

    நிதி மசோதா  : மத்திய பட்ஜெட் வெளியிடப்பட்ட பிறகு, அதில் முன்மொழியப்பட்ட வரி அகற்றம், ஒழிப்பு, மாறுதல் அல்லது பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்ட வரிகள் முறைப்படுத்துதல் ஆகியவற்றை குறிப்பது நிதிமசோதா. இந்த மசோதா உடனடியாக தாக்கல் செய்யப்படும்.

    09:19 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    நிதிக் கொள்கை : இது வருவாய் மற்றும் செலவினங்களின் மொத்த அளவை பொறுத்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஆகும். நிதி கொள்கையானது பட்ஜெட் மூலமாக செயல்படுத்தும். இது பொருளாதாரத்தில் அரசாங்கம் மாற்றத்தை மேற்கொள்வதற்கான முதன்மையான வழியாகும்.

    பணவியல் கொள்கை : இது, பொருளாதாரத்தில் பணம் அல்லது பணப்புழக்க நிலைகளை கட்டுப்படுத்தவோ அல்லது வட்டி வீதங்களை மாற்றவோ மத்திய வங்கியால் (அதாவது ரிசர்வ் வங்கி) எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும்.

    பணவீக்கம் : பொது விலை அளவில் ஒரு தொடர்ச்சியான அதிகரிப்பு இருப்பது பணவீக்கமாகும். பணவீக்க வீதம் விலை மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களின் வீதம் ஆகும்.

    09:19 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    சுங்க வரி : சரக்குகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் போதும் அல்லது உள்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் போதும் சுங்க வரி விதிக்கப்படும். இவற்றை ஏற்றுமதியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் செலுத்துவார்கள். பொதுவாக, அவர்கள் இந்த வரிக் கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து வசூலித்துக் கொள்வார்கள்.

    வருவாய் பற்றாக்குறை : வருவாய் செலவினத்திற்கும் வருவாய் வரவுக்கும் இடையில் உள்ள வேறுபாடே வருவாய் பற்றாக்குறை என அறியப்படுகிறது. இது தற்போதைய அதிகப்படியான செலவினத்தின் மீதான அரசாங்கத்தின் வரவு பற்றாக்குறையைக் காட்டும்.

    முதன்மைப் பற்றாக்குறை : நிதி பற்றாக்குறையில், கடன் வட்டி தொகையை கழித்து கூறப்படுவது முதன்மை பற்றாக்குறையாகும். இது அரசாங்கமானது தனது செலவினம் தவிர வட்டி கட்டுவதற்காக எவ்வளவு கடன் வாங்குகிறது என்பதைத் தெரியப்படுத்தும்.

    09:18 (IST)01 Feb 2020

    உங்கள் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    மத்திய பட்ஜெட் என்பது அனைத்து ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து தயாரிக்கப்படும் அரசாங்க நிதி நிலையின் மிக விரிவான அறிக்கையாகும். அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகளின் மதிப்பீட்டையும் பட்ஜெட் கொண்டிருக்கும். இது பட்ஜெட் மதிப்பீடு என்று அழைக்கப்படும்.

    நேரடி மற்றும் மறைமுக வரிகள் : நேரடி வரிகள் என்பது நேரடியாக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். உதாரணமாக, வருமான வரி, பெருநிறுவன வரி ஆகியவற்றை கூறலாம். மறைமுக வரி என்பது சரக்கு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படுவது. இது சரக்குகளை வாங்கும் போதும், சேவைகளைப் பெறும் போதும் நுகர்வோரால் செலுத்தப்படும். இவற்றில் கலால் வரி, சுங்க வரி உள்ளிட்டவையும் அடங்கும்.

    ஜிஎஸ்டி : அரசியலமைப்பு வரையறுக்கும், "சரக்குகள் மற்றும் சேவைகள் வரி" என்பது மனித நுகர்வுக்கான மதுபான விநியோகத்திற்கான வரியை தவிர்த்து மற்ற அனைத்து விநியோக சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்குமான வரியாகும்.

    09:12 (IST)01 Feb 2020

    நிதி அமைச்சகத்திற்கு விரைந்தார் நிர்மலா சீதாராமன்
    இன்று இந்திய பாராளுமனறத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .

    நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகம் அலுவகலம் செல்லும் காட்சி 
    நிதி அமைச்சகத்தில் நடக்கும்  துப்புரவு பணிகள்

    09:05 (IST)01 Feb 2020

    தனிநபர் வருமான வரம்பில் சலுகைகள் கொண்டுவரப்படலாம்:

    இன்றைய மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படாலம்  என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று, கார்ப்பரேட் வருமான வரி விகிதங்கள் கடந்த ஆண்டு மத்திய அரசு கடுமையாக குறைத்தது .  எனவே, அதுபோன்ற சலுகையை சாமானிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் பரவலாக நிலவிவருகிறது.    இரண்டு, மக்கள் நீண்ட காலமாக வருமான வரி குறைப்பை எதிர் பார்த்து வருகிறார்கள். 

    குறிப்பு : கடந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரம்பில் பெரிய அளவில் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. ஐந்து கோடிக்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களுக்கு 7% கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

    08:40 (IST)01 Feb 2020

    மின்னணு பொருட்களுக்கு வரி அதிகரிப்பு?

    இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் மின்னணு பொருட்கள், ரசாயனங்கள், கைவினைப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    08:33 (IST)01 Feb 2020

    அடுத்த இலக்கு

    அடுத்த 4 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    07:55 (IST)01 Feb 2020

    இன்று 11 மணிக்கு தாக்கலாகிறது பட்ஜெட்

    2020 -ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை சூழல் நிலவுவதால், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    Nirmala Sitharaman
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment