Advertisment

'பழைய அரசியல்...' நிர்மலா சீதாராமன் உரையால் அவையில் ஏற்பட்ட சிரிப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11-மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.

author-image
WebDesk
New Update
'பழைய அரசியல்...' நிர்மலா சீதாராமன் உரையால் அவையில் ஏற்பட்ட சிரிப்பு

2070-ம் ஆண்டுக்குள் இந்தியா வாகன புகை இல்லாத நாடாக மாறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

Advertisment

2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. குடியரசு தலைவராக பொறுப்பேற்று முதல்முறையாக திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இன்று 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Union Budget 2023-24 Live Updates

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11-மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பழைய வாகனங்களை மாற்றுவது குறித்து பேசினார். பழைய வாகனங்கள் புகை மாசு, உள்ளிட்ட பல பிரச்னைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பழைய வாகனங்களை மாற்றுவது என்பது நாட்டின் முக்கிய கொள்ளை பழைய அரசியலை மாற்றுவது போல் என்று அவர் சொல்ல, அவவையில் சிரிப்பலை எழுந்தது. உடனே சிரித்துக்கொண்ட நிர்மலா சீதாராமனும் எனக்கு தெரியும் நன்றி என்று சொல்லிவிட்டு உரையை தொடர்ந்தார்.

அதிக மாசை ஏற்படுத்தும் வானங்களை மாற்றுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசின் பழைய வாகனங்களை அழிப்பதற்கு கடந்த 2021-22 பட்ஜெட்டில், தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலனக்ஸ்களை மாற்றுவதில் மாநில அரசுகளும் முக்கிய பங்காற்றின. இதன் மூலம் 2070-ம் ஆண்டு இந்தியா புகை இல்லாத நாடாக மாறும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment