scorecardresearch

டெல்லி ரகசியம்: ஸ்பெஷல் பூஜை… படையெடுத்த மத்திய அமைச்சர்கள்

இது குடும்ப விழா என்று அமைச்சரின் அலுவலகம் கூறினாலும், உயர்மட்ட அமைச்சர்கள் பிரதானின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.

டெல்லி ரகசியம்: ஸ்பெஷல் பூஜை… படையெடுத்த மத்திய அமைச்சர்கள்

மத்திய கல்வி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது இல்லத்தில் ஒரு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூஜையில், நவராத்திரியின் முதல் நாளில் – ராமாயணத்திலிருந்து சுந்தரகாண்டத்தின் சிறப்பு பாராயணம் இருந்தது.

இது குடும்ப விழா என்று அமைச்சரின் அலுவலகம் கூறினாலும், உயர்மட்ட அமைச்சர்கள் பிரதானின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் ஜே & கே துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

ஒட்டக சவாரி

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுக் கொள்கைகளை விநியோகிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, அந்தநாள் மறக்கமுடியாத நாளாக மாறியுள்ளது. உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு மத்தியில், தோமர் சிறிது நேரம் ஒதுக்கி பார்மர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மல்லிநாத் விலங்குகள் கண்காட்சியைப் பார்வையிட்டார். அங்கு அமைச்சர் ஒட்டக சவாரி செய்தார். அவருக்குப் பின்னால் விவசாயத் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி அமர்ந்திருந்தார்.

தேர்லுக்கு முன்கூட்டியே தயாராகும் ராகுல் காந்தி</strong>

சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகவில்லை என்ற விமர்சனம், ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகும் அக்கட்சியில் அடிக்கடி ஒலிப்பதை கேட்க முடிகிறது. தலைமை இறுதியாக சில திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2024 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களுடன் கடந்த மாதம் ராகுல் காந்தி ஒரு சந்திப்பை நடத்தினார்.

மேலும், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆரம்ப பணிக்காக சென்றிந்தார்.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தெலங்கானா தலைவர்களுடன் இந்த வாரம் கலந்தாலோசிக்கவுள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் தனது வியூகம் மற்றும் பிரச்சாரத்தை வடிவமைக்க தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகோலுவை அணுகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Union education minister dharmendra pradhan residence

Best of Express