Advertisment

மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி சிங் ராஜினாமா

முக்தார் அப்பாஸ் நக்வி, மற்றும் ஆர்.சி.பி. சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இருவரும் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Mukhtar Abbas Naqvi, முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா, ஆர் சி பி சிங் ராஜினாமா, RCP Singh, Union Minister resignation

முக்தார் அப்பாஸ் நக்வி, மற்றும் ஆர்.சி.பி. சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இருவரும் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளதால் நரேந்திர மோடி அரசில் பாஜகவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்காது.

Advertisment

மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஜூலை 7-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து புதன்கிழமை ராஜினாமா செய்தார். “நான் அரசியலமைப்புத் தேவைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது” என்று மோடி அரசாங்கத்தில் முஸ்லிம் முகமாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

மாநிலங்களவைக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யாத அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும் தனது ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். மேலவையில் அவரது பதவிக்காலமும் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான ஆர்.சி.பி. சிங், அவருடைய கட்சியில் அவருக்கு மற்றொரு முறை ராஜ்யசபா சீட் தர மறுக்கப்பட்டது.

“ஒரு அவையின் உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடையும் போது, ​​அவருடைய அமைச்சராக இருக்கும் பதவிக்காலமும் முடிவடைகிறது. அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்கிறபோது, அவர்கள் மீண்டும் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க 6 மாத கால அவகாசம் அளிக்கப்படும்” என்று மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

இன்று காலை முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி. சிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிக் காலத்தில் நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக, அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி பாராட்டினார். இது அவர்களின் இறுதியான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் என்ற தெரியவந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக இரண்டாவது முறையாக மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற நக்வியை மீண்டும் பரிந்துரைக்கவில்லை, அதே போல, ஐக்கிய ஜனதா தளமும் ஆர்.சி.பி. சிங்குக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கவில்லை. முக்தார் அப்பாஸ் நக்வி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை புதன்கிழமை சந்தித்தார்.

ராஜ்யசபாவில் நக்வியின் பதவிக்காலம் முடிவடைவதால், நரேந்திர மோடி அரசில் பாஜகவுக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்காது.

முக்தார் அப்பாஸ் நக்வியின் எதிர்காலம் குறித்து கட்சி இறுக்கமாக பேசப்பட்டாலும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. அந்த பதவிக்கு கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் பெயரும் அடிபட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment