அமைப்புசாரா தொழிலாளர்கள் 38.37 கோடி பேர் என்ற இலக்கில், ஐந்தில் ஒரு பங்கு இப்போது டேட்டா தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசா அதனுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள் இலக்கில் 87% பதிவு செய்யப்பட்டு முன்னணியில் உள்ளது. ஒடிஷாவைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (65%), சத்தீஸ்கர் (33%), ஜார்கண்ட் (31%) மற்றும் பீகார் (25%) பதிவு செய்துள்ளன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் இதுவரை 7.7 கோடிக்கு மேல் பதிவு செய்துள்ளனர்- ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் நாட்டின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட டேட்டா தளத்தில் - ஒடிஷா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான இலக்கை எட்டுவதில் முன்னணியில் உள்ளன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் 38.37 கோடி பேர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், அமைப்புசாரா தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் இப்போது டேட்டா தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், ஒடிஷா அதனுடைய இலக்கில் 87 சதவீதம் பதிவு செய்து முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் (65%), சத்தீஸ்கர் (33%), ஜார்கண்ட் (31%), பீகார் (25%) என்ற அளவில் பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, தேசிய பொது முடக்கத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களிலிருந்து உருவான அமைப்புசாரா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே காணப்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்த நடைமுறை செயல்படுவதாகத் தெரிகிறது.
சரியான அர்த்தத்தில் சொல்வதென்றால், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஒடிஷாவைவிட அதிக பதிவு இலக்கைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த மாநிலங்களில் பதிவுகள் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன. நவம்பர் 11-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பீடு செய்த அரசின் தரவுகளின்படி, இந்த மாநிலங்களில் இலக்கை அடைந்த விகிதம் 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக உள்ளது.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் பதிவுகளுக்கான புதுப்பிப்புகளுக்காக மாநிலங்களுடன் வழக்கமான சந்திப்புகளை நடத்தி வருகிறது. சமீபத்திய கூட்டம் நவம்பர் 12ம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இசைத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா துறைத் தொழிலாளர்களுக்கான ஆதார்- இணைக்கப்பட்ட டேட்டா தளத்தை முதன்முறையாக இ-ஷ்ரம் போர்ட்டல் வழங்குகிறது. இன்றுவரை, அத்தகைய டேட்டா தளத்தில், முக்கியமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே பதிவு கிடைக்கிறது.
இ-ஷ்ரம் தளத்தில் பதிவுசெய்த பிறகு, அமைப்புசாரா தொழிலாளர்கள், நாடு முழுவதும் செல்லுபடியாகும் இ-ஷ்ரம் கார்டில் ஒரு பொது கணக்கு எண் வைத்திருப்பார்கள். பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுடன் இணைக்க இது பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, இ-ஷ்ரம் தளத்தில் உள்ள பதிவுடன் விபத்துக் காப்பீட்டை இணைப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த தளத்தில், பதிவுசெய்த தொழிலாளி விபத்துக்குள்ளானால், அவர்/அவள் இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், அரை ஊனமுற்றால் ரூ.1 லட்சமும் பெறத் தகுதியுடையவர். இந்த டேட்டா தளத்தை உன்னதி தளத்துடன் இணைக்கும் பணியை தொழிலாளர் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. உன்னதி தளம், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தேடுவதற்கு பொருத்தமான தளமாக முன்மொழியப்பட்டுள்ளது.
“பதிவுகளைப் பற்றிய வழக்கமான அப்டேட்களை அளிக்குமாறு மாநில அரசுகளிடம் கேட்கப்படுகிறது. ஒடிஷா போன்ற மாநிலங்கள், பிற கிழக்கு மாநிலங்கள் மற்ற பெரிய மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக முன்னேறி வருகின்றன. கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காலத்தில், குறிப்பாக கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, இந்த பிராந்தியங்களில் இருந்து புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை இது சில வழிகளில் குறிக்கிறது. அதனால்தான், இந்த பிராந்தியங்களில் பதிவு செய்வதற்கு அதிக அளவில் வரவேற்பு காணப்படுகிறது” என்று தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பதிவு செய்யும் அரசாங்கத்தின் இலக்கு, முறைசாராத் துறை தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 38.37 கோடியின் அடிப்படையில் உள்ளது. இது அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டிய இலக்காக உள்ளது. நவம்பர் 15ம் தேதி நிலவரப்படி, இந்த தளத்தில் மொத்தம் 7.73 கோடி பேர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த வாரத்தில் தினமும் சராசரியாக 12 லட்சம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள எண்களை பதிவு செய்ய அல்லது அடையாள எண்களை அளிக்க பல ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகு இ-ஷ்ரம் தளத்தில் பதிவுகள் வந்துள்ளன. அமைப்புசாரா தொழிலாளர் அடையாள எண் (UWIN) வழங்குதல் மற்றும் ஸ்மார்ட் கார்டு எதுவும் வழங்காமல் ஆதாருடன் இணைக்கப்பட்ட அடையாள எண்ணை வழங்குவதற்கான முன்மொழிவு 2017-ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.402.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. ஜூன் 2018ல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ‘அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தளத்தை உருவாக்குவதற்கும், ஆதார் விதை அடையாள எண்ணை ஒதுக்குவதற்கும் ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பரில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள மற்றவர்களுக்கான புதிய டேட்டா தளத்தை உருவாக்க மற்ற அமைச்சகங்களின் உதவியை நாடியது. இது இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்படும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு, இந்த தளத்தின் வடிவமைப்பை உருவாக்குவதற்கு தேசிய தகவல் மையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், ஜூன் 29ம் தேதி இந்த தளத்தை முடிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. “தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அக்கறையின்மை மற்றும் அக்கறையற்ற அணுகுமுறை, மன்னிக்க முடியாதது” என்று கூறியது. புலம்பெயர்ந்த/முறைசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தளத்தை தொடங்குவதற்கு ஜூலை 31 காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. இ-ஷ்ரம் தளத்தில் முறைப்படி ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டது.
மாநில வாரியாக பதிவுகள் (இலக்குகளைப் பொருட்படுத்தாமல்) மேற்கு வங்கம் (1.88 கோடி), உத்தரப் பிரதேசம் (1.42 கோடி), ஒடிசா (1.15 கோடி), பீகார் (89.17 லட்சம்) மற்றும் ஜார்கண்ட் (36.34 லட்சம்) ஆகிய மாநிலங்களில் அதிகப் பதிவுகள் நடந்துள்ளன.) தொழில் வாரியாக, விவசாயம் (53.8 சதவீதம்) மற்றும் கட்டுமானத் துறைகள் (12.2 சதவீதம்) அதிகப் பதிவு செய்துள்ளன அதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வீட்டுப் பணியாளர்கள் (8.7 சதவீதம்) மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் (6.2 சதவீதம்) உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.