Advertisment

அலெக்ஸாண்டரை தோற்கடித்தார் சந்திரகுப்தர்; ஆனால் அவரை தி கிரேட் என அழைப்பதில்லை - யோகி

சந்திரகுப்தர் எப்போது ஆட்சிக்கு வந்தார் என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சில முரண்கள் இருந்தாலும் அலெக்ஸாண்டரின் மரணத்திற்கு பிறகு தான் மௌரியர்கள் ஆட்சி வந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அலெக்ஸாண்டரை தோற்கடித்தார் சந்திரகுப்தர்; ஆனால் அவரை தி கிரேட் என அழைப்பதில்லை - யோகி

;

Advertisment

மௌரியர்கள் ஆட்சியை நிறுவிய சந்திரகுப்த மௌரியர் மெசெடோனியாவின் அலெக்ஸாண்டரை வீழ்த்தினார். ஆனால் எந்த வரலாற்று ஆசிரியர்களும் சந்திரகுப்த மௌரியரை தி கிரேட் என்று அழைக்கவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இந்தியாவின் மீதான அலெக்ஸாண்டரின் படையெடுப்பு முடிந்து சில காலங்கள் கழித்து கி.மு. 323ம் ஆண்டு அலெக்ஸாண்டர் உயிரிழந்தார். சந்திரகுப்தர் எப்போது ஆட்சிக்கு வந்தார் என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சில முரண்கள் இருந்தாலும் அலெக்ஸாண்டரின் மரணத்திற்கு பிறகு தான் மௌரியர்கள் ஆட்சி வந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

”வரலாறு அசோகரையோ, சந்திரகுப்த மௌரியரையோ தி கிரேட் என்று கூறுவதில்லை. ஆனால் சந்திரகுப்தரால் வீழ்த்தப்பட்ட அலெக்ஸாண்டரை மட்டும் தி கிரேட் என்று குறிப்பிடுகிறார்கள். இது போன்ற விசயங்களில் வரலாற்று ஆசிரியர்கள் அமைதியாகவே இருக்கின்றனர். ஆனாலும் இதனை மக்கள் புரிந்து கொள்ள துவங்கினால் நாடு மாற்றம் அடையும் என்று பாஜகவின் ஒ.பி.சி அமைப்பு நடத்திய சமஜிக் ப்ரதிநிதி சம்மேளனத்தில் ஞாயிறு அன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

தாலிபன்களுக்கு ஆதரவு அளிப்பது போன்று நாட்டின் பிரிவினைக்கும் ஆதரவாக சமாஜ்வாடி கட்சி பேசுகிறது என்று அந்த கட்சியையும் தாக்கி பேசினார் யோகி ஆதித்யநாத்.

சமாஜ்வாடி கட்சியின் கூட்டணிக் கட்சியான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் வியாழக்கிழமை அன்று ஆர்.எஸ்.எஸ். கட்சி தான் பிரிவினைக்கு காரணம் என்று கூறினார். அதற்கு முன்பு இந்தியா ஒற்றுமையாக இருந்திருக்கும். முகமது அலி ஜின்னா இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருப்பார் என்று அவர் கூறிய நிலையில் இந்த கருத்தையும் வெளிப்படுத்தினார்.

கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாகிஸ்தான் நிறுவனரை மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஒப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தலித்களுடன் உணவு உண்ணுங்கள்; நமக்கு வாக்களிக்க சொல்லுங்கள்” – தொண்டர்களிடம் உ.பி. பாஜக தலைவர்

பிரிவினை குறித்து பேசும் நபர்கள் அப்படியே தாலிபானுக்கும் ஆதரவாக பேசுகின்றனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். முறையான நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராக மேற்கொண்ட பிறகே அவர்களின் குரல்கள் அடங்கியது. தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பது மனிதாபிமானத்திற்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதைப் போன்றது. தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பது புத்தரின் மைத்ரி கொள்கைகளுக்கு எதிரானது. சிலர் அந்த திசையை நோக்கி செல்கின்றனர். ஆனால் அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாடினார் யோகி.

ஜின்னாவை ஆதரிப்பதன் மூலம் சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்களை எதிர்க்கட்சியினர் அவமதிக்கின்றனர். சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் கதாநாயகனாக இருந்தார். ஆனால் ஜின்னாவோ கல்நாயக் (வில்லனாக) இருந்தார் என்று கூறிய முதல்வர், அவர்கள் ஜின்னாவை ஆதரிக்கின்றனர். நாம் சர்தாரை ஆதரிக்கின்றோம். நீங்கள் ஜின்னாவை புகழும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவீர்களா? என்று கேள்வியை எழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttarpradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment