Advertisment

தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் மீது என்.எஸ்.ஏ: செவிலியர்கள் புகார் எதிரொலி

யோகி ஆதித்யனாத்: இவர்கள் சட்டத்தைப் பின்பற்ற மாட்டார்கள், நிர்வாகத்தின் பேச்சையும் கேட்க மாட்டார்கள். இவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் மீது என்.எஸ்.ஏ: செவிலியர்கள் புகார் எதிரொலி

தனிமைப்படுத்தலில் இருக்கும் ஆறு தப்லிகி ஜமாத்  உறுப்பினர்கள் மீது உத்தர பிரேதேச அரசாங்கம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisment

இவர்கள் அனைவரும் காஜியாபாத் மருத்துவனமையில் சமூக விலகலை பின்பற்ற மறுத்ததோடு, செவியலர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அநாகரிக முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. காஜியாபாத் மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் இது தொடர்பான புகாரை காவல் துறையிடம் பதிவு செய்தார்.

அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்  கூறுகையில் “இந்த மக்கள் சட்டத்தைப் பின்பற்ற மாட்டார்கள், நிர்வாகத்தின் பேச்சையும் கேட்க மாட்டார்கள். இவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள். மருத்துவமனையில் பெண் மருத்துவ ஊழியர்களுடன் அவர்கள் செய்த செயல் ஒரு கிரிமினல் குற்றம். தேசிய பாதுகாப்பு சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை யாரும் காப்பாற்ற முடியாது,"  என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் இந்தூரின் தட்பட்டி பக்கால் பகுதியில், ஒரு மருத்துவக் குழுவைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுக்காப்புச் சட்டம்   என்பது ஒரு கடுமையான சட்டமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுபவர்களை  12 மாதங்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் சிறையில் வைக்கலாம். தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவர்கள் என்று அரசால் கருதப்படுபவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர் உயர்நீதிமன்ற ஆலோசனைக் குழுவின் முன் மேல்முறையீடு செய்யலாம்.

இந்த 6 பேரும் கடந்த மாதம் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் . உத்தரபிரதேச அரசு நிர்வாகம் இவர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தியது. இந்த ஆறு பேரில் ஒருவருக்கு வோரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், மீதமுள்ள, ஐந்து பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும்  சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

காஜியாபாத் எஸ்.எஸ்.பி கலனிதி நைதானிகூறுகையில், “  குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மையான ஆதரங்கள் அடிப்படியில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 (ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம், ஊறு விளைவித்தால்), 504 (சமாதானத்தை சீர் குலைத்தல்), 270 (நோய் பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

லக்னோவில், கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறினார்: “கடந்த மூன்று நாட்களாக, தப்லீக் ஜமாஅத் தொடர்பாக மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 1203 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், 897 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 47 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment