உத்திர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து : 7 பேர் பலி... பலர் படுகாயம்!

UP train accident : உத்திர பிரேதசம் ராபரேலி பகுதியில் `நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ்’ தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரெலி மாவட்டத்தில் ஹார்ச்சன்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நியூ பராக்கா விரைவு ரயில் அதிகாலை புறப்பட்டது. 50 மீட்டர் தொலைவே சென்ற நிலையில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டது.

UP train accident : உத்திர பிரதேசம் ரயில் விபத்து :

இந்த விபத்தில் 7 பயணிகள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினருக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தோருக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதி தொகை அறிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close