Advertisment

UPSC Civil Services Prelims Result 2018: யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் upsc.gov.in -ல்!

UPSC Civil Services Prelims Result 2018: யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை: upsc.gov.in, upsconline.nic.in-ல் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
List of entrance exams after completing 10+2 or Class 12 : இந்தியாவில் நடத்தப்படும் பல தரப்பட்ட நுழைவுத் தேர்வு

List of entrance exams after completing 10+2 or Class 12 : இந்தியாவில் நடத்தப்படும் பல தரப்பட்ட நுழைவுத் தேர்வு

UPSC Civil Services Prelims Result 2018: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி மெயின் தேர்வு எழுத வேண்டும்.

Advertisment

UPSC Civil Services Prelims Result 2018: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 14) வெளியிட்டது. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை upsc.gov.in , upsconline.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதளங்களில் காணலாம். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மெயின் தேர்வுக்கு செல்ல முடியும். மெயின் தேர்வு வருகிற அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும்.

upsc, upsc.gov.in, upsc 2018 results, civil services 2018, ias results UPSC Civil Services Prelims Result 2018: யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் upsc.gov.in -ல்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்திய வனப் பணி (மெயின்) தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. அந்த முடிவுகளையும் மேற்படி இணையதளங்களில் காணலாம்.

UPSC Civil Services Prelims Result 2018: யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை: upsc.gov.in, upsconline.nic.in-ல் காணலாம்.

1. மேலே தரப்பட்ட அதிகாரபூர்வ இணையதளங்களான upsc.gov.in, upsconline.nic.in ஆகியவற்றில் ஒன்றை ‘க்ளிக்’ செய்யவும்.

2. அதில் ‘ரிசல்ட்’ லிங்க்-கை ‘க்ளிக்’ செய்யவும்.

3. தேர்வர்களின் வரிசை எண்களுடன் கூடிய பி.டி.எஃப் ஃபைல் காணப்படும்.

4.அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான இந்தத் தேர்வை இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் தேர்வர்கள் எழுதினர். முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ் (வெளியுறவுப் பணி), ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

UPSC Civil Services Prelims Result 2018: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி மெயின் தேர்வு எழுத வேண்டும்.

Upsc Civil Service Exam Upsc Results
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment