Advertisment

இந்தியாவுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம்; அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

US has provided over $500 million in Covid relief to India, says White House: அமெரிக்கா இந்தியாவுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது, இதில் அமெரிக்காவின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புகளும் அடங்கும்

author-image
WebDesk
New Update
இந்தியாவுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம்; அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்கா இதுவரை 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான கொரோனா நிவாரண உதவிகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாகவும், 80 மில்லியன் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பது குறித்து விரைவில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

Advertisment

"இன்றுவரை, அமெரிக்கா இந்தியாவுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது, இதில் அமெரிக்காவின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புகளும் அடங்கும்" என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி, வெள்ளை மாளிகையின் வெளிநாட்டு பத்திரிக்கையாளர் குழுவிடம், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூறினார்.

பைடன் நிர்வாகம், இப்போது கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற தெற்காசிய நாடுகளுக்கும் இதுபோன்ற உதவியை வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. “நாங்கள் சுகாதாரப் பொருட்கள், ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் 95 முகக்கவசங்கள், விரைவான நோயறிதல் சோதனை கருவிகள் மற்றும் மருந்து போன்றவற்றை ஏழு விமானங்களில் அனுப்பியுள்ளோம்” என்று சாகி கூறினார்.

“கோவிட் -19 தடுப்பூசிகளின் 80 மில்லியன் டோஸைப் பொறுத்தவரை , 60 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளிலும், அங்கீகரிக்கப்பட்ட மற்ற மூன்று தடுப்பூசிகளில் 20 மில்லியனிலும் அதிக ஆர்வம் இருப்பதாக எங்களுக்குத் தெரியும். இப்போது, ​​இது ஒரு ஒருங்கிணைப்பு செயல்முறையின் மூலம் செயல்படுகிறது, ”என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த சாகி கூறினார்.

இந்த தடுப்பூசி அளவை அமெரிக்கா எவ்வாறு விநியோகிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளப் போகிறது என்பதைத் தீர்மானிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் வெளியுறவுத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்புக் குழு விவாதித்து வருகிறது.

"நிச்சயமாக, இந்திய மக்கள் அனுபவித்த எல்லாவற்றின் அவலமும் வெளிப்படையாக நம் மனதில் உள்ளது, ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளும் பிராந்தியங்களும் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளன, அந்த நாடுகளுக்கு உதவிகளும் தேவைப்படுகிறது. எனவே, இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாட்களில் இவற்றில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம் என்று நம்புகிறோம், ”என்று சாகி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Corona America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment