விஜய் மல்லைய்யாவின் சொகுசு விமானம் 35 கோடிக்கு ஏலம் போனது

மத்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி விஜய் மல்லைய்யாவின் சொத்துகள் ஏலம் போகின்றது

நான்கு தொடர் தோல்விகளுக்குப் பின்னால், சேவை வரித்துறை, மல்லைய்யாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விமானத்தை ஏலத்தில் விற்றுவிட்டார்கள். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஏவியேசன் நிறுவனம் ஒன்று இந்த விமானத்தை 34.8 கோடிக்கு விலைக்கு வாங்கியிருக்கின்றது.

இந்த A319 ரக விமானத்தின் மூலம் தான் மல்லைய்யா உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக பயணித்தார். கிங்ஃபிஷ்ஷர் நிறுவனத்தின் நிலுவையில் இருக்கும் சேவை வரி பணத்தினை மீட்கும் முயற்சியாக இந்த விமானத்தினை ஏலத்தில் விற்றிருக்கின்றார்கள். 800 கோடி ரூபாயினை சேவை வரி இலாக்காவிற்கு அளிக்க கிங்ஃபிஷ்ஷர் நிறுவனம் அளிக்க வேண்டும்.

2013ல் விஜய் மல்லைய்யாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதில் இருந்து அவ்விமானம் மும்பை விமான நிலையத்தில் தான் இருக்கின்றது. மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இவ்விமானம் பல ஆண்டுகளாக எந்த ஒரு உபயோகமும் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் நஷ்டத்தை புகாராக உயர்நீதி மன்றத்தில் அளிக்க, விரைவில் அந்த சொகுசு விமானத்தினை விற்றுத் தரவேண்டும் என்று உத்தரவிட்டது மும்பை உயர் நீதிமன்றம்

அதனை இணையத்தின் மூலம் ஏலத்திற்கு விற்க ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளியன்று, இதனை ஏலத்தில் 34.8 கோடிக்கு வாங்கியிருக்கின்றார்கள். 2016ஆம் ஆண்டில் இவ்விமானத்தின் மதிப்பினை 152 கோடியாக அறிவித்திருந்தது. ஆனால் அதன் ஏல மதிப்பு மிகவும் குறைந்ததை கணக்கில் கொண்டு 10% அதன் விலையை குறைத்து அறிவித்திருந்தது சேவை வரி இலாக்கா. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஏலத்தில் இந்த விமானம் 12.5 மில்லியன் மற்றும் 22.5 மில்லியன் டாலருக்கு மட்டுமே ஏலம் போனதால் விற்க மறுத்துவிட்டது சேவை வரி இலாக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close