Advertisment

வாக்காளர் அட்டை - ஆதாரை இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

author-image
WebDesk
New Update
Voter ID Aadhaar card link bill passed in Lok Sabha, opposition protest, Election laws amendment 2021, வாக்காளர் அட்டை - ஆதாரை இணைக்கும் மசோதா, தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, Lok Sabha, BJP, Congress, TMC, india

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கடுமையாக எதிர்த்தனர்.

Advertisment

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்கும் மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதா குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் என்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அறிக்கையை நிராகரித்த அதே நேரத்தில், இந்த திருத்தம் போலியான மற்றும் மோசடியாக வாக்களிப்பதை தடுத்து நிறுத்துவதற்காக மட்டுமே கொண்டுவரப்படுகிறது என்று தெளிவுபடுத்தினார்.

இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் அட்டையையும் இணைக்க தேர்தல் சட்டங்கள் (திருத்த மசோதா) 2021-ஐ மத்திய அரசு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதா குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் என்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அறிக்கையை நிராகரித்த அதே நேரத்தில், இந்த திருத்தம் போலியான மற்றும் மோசடியாக வாக்களிப்பதை நிறுத்துவதற்காக மட்டுமே கொண்டுவரப்படுகிறது என்று தெளிவுபடுத்தினார்.

காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மத்தியில் நின்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபோதும் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்தார். இலங்கை கடற்படையினரால் 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், லக்கிம்பூர் கெரி வன்முறையில் அவரது மகன் ஈடுபட்டதாக கூறி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிற காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் மத்தியில் நின்று கோஷம் எழுப்பிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் காலை தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ​​எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகப் பேசினர்.

இத மசோதா அறிமுகம் செய்வதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021-இன் கீழ் இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். அதே நேரத்தில், சட்டமன்ற ஆவணத்தை மேலும் சம்பந்தப்பட்ட நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோருகிறேன். இது உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தனியுரிமையின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்ற உண்மையை ஆய்வு செய்ய வேண்டும். இது பெருமளவிலான வாக்குரிமை நீக்கத்திற்கு வழிவகுக்கும். அதனால்தான், இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோருகிறோம்” என்று கூறினார்.

மேலும், “இந்த மசோதா சட்டமன்றத்தின் திறனுக்கு அப்பாற்பட்டது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் (புட்டசாமி vs யூனியன் ஆஃப் இந்தியா) வகுக்கப்பட்டுள்ள சட்ட வரம்புகளை மீறுகிறது” என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி மணீஷ் திவாரி கூறுகையில், “வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது.” என்று கூறினார்.

தரவு பாதுகாப்புச் சட்டம் இன்னும் நடைமுறையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய சவுத்ரி, மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

இந்த மசோதாவின் நோக்கத்தை விளக்க முயன்ற சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகக் கூறினார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி எம்.பி அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதா சட்டமாக மாறினால், “சிலரின் உரிமையை மறுப்பதற்கும் குடிமக்களின் விவரக்குறிப்புக்கும்” அரசாங்கம் விவரங்களைப் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.

“ஆதார் குடியிருப்பவர்களுக்கானது, வாக்களிக்கும் உரிமை குடிமக்களுக்கானது” என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சவுகடோ ரே கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் ரித்தேஷ் பாண்டேவும் மசோதாவை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

தனியுரிமைக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்றும், அதனைக் குறைக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியாது என்றும் என்.கே. பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார். ஆதார் என்பது வசிப்பிடத்திற்கான ஆதாரமாக இருப்பதால், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு இந்த நடவடிக்கை வாக்களிக்கும் உரிமையை வழங்குமா என்றும் சசி தரூர் கேள்வி எழுப்பினார்.

அவையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அவைத் தலைவர் திடீரென கேள்வி நேரத்தை மதியம் 11.45 மணிக்கு 12 மணி வரை ஒத்திவைத்தார்.

இந்த மசோதாவின் பொருள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, “இந்த மசோதா ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுகிற அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் அல்லது திருத்தம் செய்வதற்கான தகுதித் தேதிகள், இந்த மசோதா சட்டமாக மாறியதும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் நாட்களாக இருக்கும். “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் பிரிவு 20 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 60 இன் திருத்தம், “மனைவி” என்ற வார்த்தைக்கு பதிலாக “துணை” என்ற வார்த்தை கொண்டுவருவதன் மூலம் பாலின பேதம் இல்லாமல் ஆக்குகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவை மீண்டும் தொடங்கிய பின்னர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கடுமையாக எதிர்த்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Parliament Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment