Advertisment

பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆறு மாணவர்கள் நீக்கம் வாபஸ் - பல்கலைக்கழகம் முடிவு

தேர்தல் நடத்தை விதி முறைகளை வைத்து தண்டிக்கும் உரிமையை கல்லூரிக்கு யார் கொடுத்தது ? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
wardaw university revokes six student Expulosion order ; வர்தா பல்கலைக்கழகம்

wardaw university revokes six student Expulosion order ; வர்தா பல்கலைக்கழகம்

விவேக் தேஷ்பாண்டே

Advertisment

கடந்த அக்டோபர் 9ம் தேதி மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் இயங்கம்  மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய இந்தி விஸ்வத்யாலயா  பல்கலைக்கழகம் தனது ஆறு மாணவர்களை நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

அக்டோபர் 9 ம் தேதி இப்பல்கலைக்கழகத்திலுள்ள ஆறு மாணவர்கள், 49 பிரபலங்களின் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டதை எதிர்த்து, பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். மேலும், கல்லூரி வளாகத்திற்குள் அமைதி போராட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த அமைதி போராட்டதிற்க்கு கல்லூரி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்லூரி வளாகத்திற்குள் பயங்கர பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளையும்  செய்திருந்தது. இதையும் மீறி, நூற்றுகணக்கான மாணவர்கள், இந்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் விளைவாக,  குறிப்பிட்ட ஆறு மாணவர்களை மட்டும் நிர்வாகம் கல்லூரியை விட்டு நீக்கியது.  வெளியேற்றப் பட்ட மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:  சந்தன் சரோஜ் (எம் பில், சமூக பணி) ; நீரஜ் குமார் (பிஎச்டி, காந்தி மற்றும் அமைதி ஆய்வுகள்); ராஜேஷ் சர்தி; ரஜ்னீஷ் அம்பேத்கர் (மகளிர் ஆய்வுத் துறை); பங்கஜ் வேலா (எம் பில், காந்தி மற்றும் அமைதி ஆய்வுகள்); மற்றும் வைபவ் பிம்பல்கர் (டிப்ளோமா, மகளிர் ஆய்வுத் துறை)

இந்த, ஆறு மாணவர்களில், மூன்று பேர் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் இதர  பின்வகுப்பு பிரிவினர்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பிரதமருக்கு கடிதம் : எஃப்.ஐ.ஆர் எவ்வாறு தகும் ? ராகுல் காந்தி

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தேர்தல் நடத்தை விதி முறையை மீறியாதால், மாணவர்களை நீக்கியுள்ளோம் என்ற கல்லூரி நிர்வாகத்தின் பதில் அனைவர் மனதையும் கசங்க வைத்தது. வரும் அக்டோபர் 21 ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி, மகாராஷ்டிராவில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்து வருகிறது.

ஆனால், தேர்தல் நடத்தை விதி முறைகளை வைத்து தண்டிக்கும் உரிமையை கல்லூரிக்கு யார் கொடுத்தது ? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு,  வர்தா மாவாட்டத்தின் ஆட்சியாளரும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க , தேர்தல் நடத்தை விதிமுறை - வர்தா ஆட்சியர் கருத்து

இந்நிலையில், ஆறு மானவர்களை நீக்கும் உத்தரவை திரும்பப் பெறுவதாக பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அறிவிப்பில் உள்ள முக்கிய விவரங்கள் பின் வருமாறு, " அக்டோபர் 9ம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் சில முரண்பாடுகள் உள்ளதாலும், அந்த ஆறு மாணவர்களுக்கும் இயற்கை நீதி கிடைக்க வாய்ப்பு வழங்குவது அவசியமாவதால், நீக்க நடவடிக்கை முயற்சியை கைவிடுகிறோம் , "என்று இருந்தது.

'தங்கள் கருத்துரிமைக்குக் கிடைத்த வெற்றி'  என்று ஆறு மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் தற்போதைய நடவடிக்கைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment