Advertisment

ஜம்மு-காஷ்மீர் கான்ஸ்டபிலின் வைரல் வீடியோ : ரியல் 'கல்லி பாய்' என மக்கள் கருத்து

கான்ஸ்டபிள் ஒருவர் 'ராப் பாடல்கள்' மூலம்  தனது மனச் சோர்வையும், உள்ளச் சோர்வையும் போக்குவது மிகவும் பாராட்டுக்குரியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jammu kashmir constable and a passionate rapper

jammu kashmir constable and a passionate rapper

ஜம்மு-காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக ஒரே இரவில் பெயர் வாங்கியுள்ளார். அவரின் ராப் பாடல்கள் ஆன்லைனில் அதிகமாக பகிரப்பட்டதால்  வைரலாகியது.

Advertisment

இவரின் ராப் பாடலை ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் சிங் ட்வுட்டரில் முதல் முறையாக பகிர்ந்தார்.

 

 

வீடியோ வைரலாகிய பின்னர்,கான்ஸ்டபிள் ஜீவன் குமார் ஒரு நேர்காணலில்,கடினமான நிதி நிலைமை காரணத்தாலும்,குடும்பத்தின் ஆதரவு இல்லாததாலும் தனது ராப் பாடலைக் கனவை பின்தொடர முடியவில்லை என்று தெரிவித்தார்.

இவரின் ராப் பாடல்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

2018 ஆம் ஆண்டில் ஜம்மு- காஷ்மீர் காவல்துறை கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்தார் இந்த ஜீவன் குமார்.

 

 

 

பொதுவாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, பல அழுத்தங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தில், கான்ஸ்டபிள் ஒருவர் 'ராப் பாடல்கள்' மூலம்  தனது மனச் சோர்வையும், உள்ளச் சோர்வையும் போக்குவது மிகவும் பாராட்டுக்குரியது.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment