Advertisment

Vayu Cyclone: வாயு புயலால் 77 ரயில்கள் ரத்து!

Cyclone Vayu Live Updates: நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Vayu at Gujarat

Cyclone Vayu Gujarat Live Updates: மிகக் கடினமான தாக்கத்துடன் இன்று குஜராத்தில் கரையைக் கடக்கிறது ‘வாயு’ புயல்.

Advertisment

Cyclone Vayu Land Fall Live Updates

இதனால் கடலோரத்தில் வாழும் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று மதியம் துவாரகா மற்றும் வேரவலுக்கு இடையே இப்புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தின் 10 மாவட்டங்களில் நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், NDRF personnel, IAF ஹெலிகப்டர்கள், 300 கடற்படை வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

Live Blog

Cyclone Vayu Live Updates

வாயு புயல் லைவ் அப்டேட்ஸ்!



























Highlights

    14:02 (IST)13 Jun 2019

    மிக கனமழை

    வாயு புயல் கரையைக் கடப்பதையடுத்து, குஜராத்தில் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால், அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை எண் 9-ம் எண் கொடியை உயர்த்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமானது முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது. 

    12:45 (IST)13 Jun 2019

    IMD - வாயு புயலைப் பற்றி தேசிய பேரிடர் மேலாண்மை குழு

    வாயு புயல் இன்று குஜராத்தில் கரையைக் கடக்கிறது. இதற்காக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் தற்போதைய நிலையை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 

    11:55 (IST)13 Jun 2019

    ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!

    வேரவல் - அம்ரேலி, அம்ரேலி - ஜுனாகத், தேல்வதா - வேரவல் ஆகிய இடங்களுக்கு இடையே இயங்கும் ரயில்கள் நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ராஜ்கோட் மண்டலத்திற்கும், பாவ்நகர் மண்டலத்திற்கும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, கடலோர மாவட்ட மக்களை அப்புறப் படுத்துகிறார்கள். 

    11:28 (IST)13 Jun 2019

    77 ரயில்கள் ரத்து

    வாயு புயலால் 77 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்ட வேரவல், ஓகா, போர்பந்தர், பாவ்நகர், புஜ் மற்றும் காந்திதம் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

    10:39 (IST)13 Jun 2019

    கடற்கரைக்கு அனுமதி இல்லை

    வாயு புயல் இன்று குஜராத்தில் கரையைக் கடப்பதால், அரபிக் கடலோரம் வெறிச்சோடி காணப்படுகிறது. கீழே இருக்கும் படங்கள் மும்பையிலுள்ள மஹிம் பீச்சினுடையது. குஜராத்தை வாயு புயல் தாக்காது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வானிலை மையம், இப்புயல் கரையைக் கடக்கும் போது கடலோரப் பகுதிகளில் அதிக காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறது.  

    09:56 (IST)13 Jun 2019

    Gir Somnath - சோம்நாத் கோயில்

    வாயு புயல் காரணமாக இன்று காலை சீக்கிரமே சோம்நாத் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். 

    09:41 (IST)13 Jun 2019

    Cyclone Vayu - குஜராத்தை தாக்காது.

    அரபிக் கடலில் தீவிரமடைந்துள்ள வாயு புயல் குஜராத்தை தாக்காது

    09:20 (IST)13 Jun 2019

    சூறாவளி புயலால் கடல் கடினாமாகக் காட்சியளிக்கிறது - இந்திய வானிலை மையம்

    மகாராஷ்டிரா கடற்கரையிலும், அரபிக் கடலில் வடக்குப் பகுதிகளிலும் ஜூன் 13 வரை கடினமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    08:57 (IST)13 Jun 2019

    போர்பந்தரிலுள்ள செளபதி கடற்கரை

    08:52 (IST)13 Jun 2019

    Cyclone Vayu: குஜராத்தில் கரையைக் கடக்கும் வாயு புயல்

    கடுமையான தாக்கத்துடன் வாயு புயல் இன்று மதியம், குஜராத்தில் கரையைக் கடக்கிறது. துவாரக மற்றும் வேரவலுக்கு இடையே இது நடக்கிறது. இதனால் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. 

    கட்ச், மார்பி, ஜாம்நகர், ஜுனாகத், தேவ் பூமி - துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் இருந்து புயல் பாதிப்பு ஏற்படாத பகுதிகளுக்கு மக்கள் மாற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு நேற்று, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

    பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மேற்கூறிய 10 மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

    Gujarat
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment