இட ஒதுக்கீடு தருகிறோம் ஆனால் வேலை எங்கு இருக்கிறது?

மக்களிடம் கேள்வி கேட்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்:  மராத்தா இன மக்களுக்கு, அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் அந்த மக்கள்.

இவ்வேளையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டு அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் பற்றி நிதின் கட்கரியின் கேள்வி

இது குறித்து மகாராஷ்ட்ரா மாநிலம் ஔரங்கபாத் பகுதியில் பத்திரிக்கையாளர்களைச்  சந்தித்த கட்கரி “ஒரு வேளை இந்த இடஒதுக்கீடு விவகாரம் வெற்றி பெற்று, மராத்தா இனத்தினருக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர்களுக்கு வேலை எங்கு இருக்கிறது?” என்று கேட்டுள்ளார்.

ஏற்கனவே ஐடி தொழில்களின் சரிவால் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் அரசு வேலைகள் என்பது கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் வேலைக்கு எங்கு போவது என்று கேட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது தற்போது பெரிய அரசியலாக உருவெடுத்து வருகிறது. அனைவரும் நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தான் கூறிக் கொள்கிறார்கள்.

உத்திரப் பிரதேசம், பிஹாரில் இருக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்கச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆனால் ஒரு விசயம் மட்டுமே உண்மை. ஏழை அவன் என்றுமே ஏழை தான். அவனுக்கென்று ஒரு மதம், இனம் என எதுவும் கிடையாது. அனைத்து விதமான சாதி மற்றும் மதக் கட்டமைப்புகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். இது சமூகப் பொருளாதார நிலை. இதை அரசியலாக்கக் கூடாது என்று குறிப்பிட்டார் நிதின் கட்கரி.

மேலும், பொருளாதார ரீதியாக எந்த ஒரு சாதியினருக்கும் இடஒதுக்கீடு அளிக்க இயலாது என்ற அரசின் நிலைப்பாட்டினை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிதின் கட்கரி “தேவிந்திர பட்னாவிஸ் இது குறித்து மிக விரைவில் முடிவெடுப்பார்” என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டங்களில் 7 பேர் மகாராஷ்ட்ராவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close