Advertisment

பூஸ்டர் டோஸூக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி; அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரை

2-வது டோஸுக்குப் பிறகான 6 மாதங்களுக்குப் பிறகு கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசியின் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக குறிப்பிடும் WHO இன் நோய்த்தடுப்புக்கான உத்திசார் ஆலோசனை குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, பூஸ்டர் டோஸ் பற்றிய WHO இன் அறிக்கை வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
பூஸ்டர் டோஸூக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி; அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரை

Kaunain Sheriff M 

Advertisment

WHO sets stage for Covid-19 booster: Prioritise high-risk groups: உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பில், பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்துவது "உறுதியான சான்றுகளால் இயக்கப்பட வேண்டும்" மற்றும் தீவிர நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள மக்கள் குழுக்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியது.

இரண்டாவது டோஸுக்குப் பிறகான ஆறு மாதங்களுக்குப் பிறகு கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசியின் பாதுகாப்பு "குறைவான அல்லது சற்று குறைவான அளவில்" இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் WHO இன் நோய்த்தடுப்புக்கான உத்திசார் ஆலோசனை குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, பூஸ்டர் டோஸ் பற்றிய WHO இன் அறிக்கை வந்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி, பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்துவது மிகவும் தேவைப்படும் மக்கள் குழுக்களை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று SAGE கூறியது, ஆனால் SAGE பூஸ்டர் டோஸிற்கான ஆதாரங்களை ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறியது.

WHO பரிந்துரைகள் இரண்டு முன்னுரிமை குழுக்களுக்கு பூஸ்டர் டோஸ் அளிக்க இந்தியாவுக்கு பரிந்துரைக்கலாம். பூஸ்டர் டோஸ் குறித்த இடைக்கால அறிக்கை குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை இந்தியா நெருக்கமாகப் பின்பற்றுவது; இரண்டாவதாக, இந்தியா இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது.

SAGE தனது இடைக்கால அறிக்கையில், அதிக ஆபத்துள்ள மக்களில் கடுமையான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பின் சரிவு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் தேவைக்கு அழைப்பு விடுத்துள்ளது. "தடுப்பூசி செயல்திறன் குறைந்து வருவதற்கான சான்றுகள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களில் கடுமையான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பின் சரிவு, பூஸ்டர் தடுப்பூசியின் இலக்கு பயன்பாடு உட்பட கடுமையான நோயைத் தடுப்பதற்கு உகந்த தடுப்பூசி உத்திகளை உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது," என்று SAGE கூறியது.

சமீபத்திய முறையான மறுஆய்வு மற்றும் மெட்டா-ரிக்ரஷன் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்தியாவில் நிர்வகிக்கப்படும் கோவிஷீல்ட் உள்பட, நான்கு WHO EUL கோவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறன், கடுமையான கொரோனா தொற்றுக்கு எதிராக அனைத்து வயதினருக்கும் 6 மாத காலப்பகுதியில் சுமார் 8% குறைந்துள்ளது என்று SAGE கூறியது.

"50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில், கடுமையான நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செயல்திறன் சுமார் 10% குறைந்துள்ளது. அறிகுறி உடைய நோய்க்கு எதிரான தடுப்பூசி செயல்திறன் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 32% குறைந்துள்ளது,” என்று SAGE கூறியது.

ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு காலம் "மாற்றப்படலாம் மற்றும் இது ஆய்வில் உள்ளது" என்று SAGE கூறியது. "லேசான நோய், தொற்று மற்றும் பரவுதல் ஆகியவற்றிற்கு எதிராக, குறிப்பாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் மாறுபாடுகளின் பின்னணியில், கடுமையான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பின் காலப்பகுதியில் பூஸ்டர் தடுப்பூசியின் சாத்தியமான தாக்கத்தை புரிந்து கொள்ள கூடுதல் தரவு தேவைப்படும்," என்று WHO கூறியது.

"தடுப்பூசி தயாரிப்புகளுக்கும் இலக்கு மக்கள்தொகைக்கும் இடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான அளவு வேறுபடுகிறது" என்பதை WHO எடுத்துக்காட்டுகிறது. "பரவி வரும் வைரஸ்கள், குறிப்பாக ஒமிக்ரான் போன்ற கவலை தரும் மாறுபாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, முதன்மை தடுப்பூசியின் போது ஒரு சமூகத்திற்குள் முந்தைய நோய்த்தொற்றின் அளவு; பயன்படுத்தப்படும் முதன்மை தடுப்பூசி அட்டவணை (அதாவது டோஸ் இடைவெளி) மற்றும் வெளிப்பாட்டின் தீவிரம் ஆகியவை பாதுகாப்பு குறைவதற்கான கண்டுபிடிப்புகளில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும், ஆனால் தற்போதைய ஆய்வுகளிலிருந்து முறையாக மதிப்பிட முடியாது," என்று SAGE கூறியது.

கோவிட்-19 நோய்த்தடுப்பு முயற்சிகளின் கவனத்தை WHO மீண்டும் வலியுறுத்தியது, "இறப்பு மற்றும் கடுமையான நோய்களைக் குறைப்பதில் தொடர்ந்து செயல்பட வேண்டும், மற்றும் சுகாதார அமைப்பின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்". பூஸ்டர் டோஸ்களின் "பரந்த-அடிப்படையிலான நிர்வாகம்" தடுப்பூசி அணுகலை மோசமாக்கும் அபாயம் உள்ளது. கணிசமான தடுப்பூசி கவரேஜ் உள்ள நாடுகளில் பூஸ்டர் டோஸ்களின் தேவையை அதிகரிப்பதன் மூலமும் விநியோகத்தைத் திசைதிருப்புவதன் மூலமும் சில நாடுகளில் முன்னுரிமை மக்கள் அல்லது துணை தேசிய அமைப்புகளில் இன்னும் முதன்மை தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Corona Virus Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment