Advertisment

ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை? மோடிக்கு சிவசேனா கேள்வி

Why do you hate Nehru so much? Sanjay Raut asks Centre: சுதந்திர தின சுவரொட்டிகளில் நேரு புகைப்படம் தவிர்ப்பு; ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை? மத்திய அரசுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி

author-image
WebDesk
New Update
ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை? மோடிக்கு சிவசேனா கேள்வி

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் அமைப்பால் வெளியிடப்பட்ட சுவரொட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை தவிர்ப்பது மத்திய அரசின் "குறுகிய மனநிலையை" காட்டுகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசு ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

சிவசேனாவின் பத்திரிக்கையான சாமனாவில், தனது வாராந்திர பத்தியில் 'ரோக்தோக்' என்ற கட்டுரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR), நேரு மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் படங்களை அதன் சுவரொட்டியில் இருந்து விலக்கியுள்ளது. இது "அரசியல் பழிவாங்கும் செயல்" என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

"சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மற்றும் வரலாற்றை உருவாக்குபவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் மாவீரர்களில் ஒருவரைத் தவிர்த்து வருகின்றனர். அரசியல் பழிவாங்கலுக்காக செய்யப்பட்ட இந்த செயல் நல்லதல்ல மற்றும் அவர்களின் குறுகிய மனநிலையைக் காட்டுகிறது. இது ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரையும் அவமதிப்பதாகும் ”என்று சஞ்சய் ராவத் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நேருவின் கொள்கைகளில் ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது என்று சாமனாவின் நிர்வாக ஆசிரியரும் ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறினார்.

நேருவை இந்த அளவுக்கு வெறுக்க அவர் என்ன செய்தார்? உண்மையில், அவர் உருவாக்கிய நிறுவனங்கள் இப்போது இந்திய பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக விற்கப்படுகின்றன,”. தேசிய பணமாக்குதல் கொள்கையை (சமீபத்தில் மத்திய அறிவித்தது) பற்றி குறிப்பிடுகையில், அந்த நிறுவனங்கள், நேருவின்“ நீண்டகால பார்வை” காரணமாக இருந்தது, பொருளாதார அழிவிலிருந்து நாடு காப்பாற்றப்பட்டது என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மகாராஷ்டிராவில் என்சிபி மற்றும் காங்கிரசுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில், மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் பள்ளி பைகளில் இருந்து முன்னாள் மாநில முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களை அகற்ற வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் (ஸ்டாலின்) அரசியல் முதிர்ச்சியைக் காட்ட முடியும்போது, நீங்கள் ஏன் நேருவை வெறுக்கிறீர்கள்? நீங்கள் தேசத்திற்கு ஒரு பதிலளிக்க கடன்பட்டிருக்கிறீர்கள்,” என்று பாஜக பெயரை குறிப்பிடாமல் சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதோரா ஆகியோர் மோடி அரசை விமர்சிப்பது புரிந்துகொள்ளத்தக்கது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயரை மாற்றுவதன் மூலம் மத்திய அரசு தனது வெறுப்பை பகிரங்கப்படுத்தியுள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மேலும், தேசத்தை கட்டமைப்பதில் நேரு மற்றும் (முன்னாள் பிரதமர்) இந்திரா காந்தியின் அழியாத பங்களிப்பை உங்களால் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் வரலாற்றின் வில்லன்கள் என்று அழைக்கப்படுவார்கள்,” என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Maharashtra Sivasena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment