Advertisment

எச்.ஐ.வி பாசிட்டிவ் ரிப்போர்ட் கேட்டு பெண் அதிர்ச்சியில் மரணம்; அது தவறான அறிக்கை என்பதால் விசாரணைக்கு உத்தரவு

Woman dies of shock after heard she is HIV+: எச்.ஐ.வி பாசிட்டிவ் என கண்டறியப்பட்டதை அறிந்த 20 வயது பெண் அதிர்ச்சியால் Woman dies of shock after heard she is HIV+: இறந்ததை அடுத்து இமாச்சல முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு முன்னர் கண்டறியப்பட்டபடி எச்.ஐ.வி இல்லை என்று பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகள் காட்டியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Woman dies, shock after heard HIV+, Himachal CM Jai Ram Thakur, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்,எச்.ஐ.வி, எச்.ஐ.வி பாசிட்டிவ், சிம்லா, HIV+, Kamla Nehru Hospital, Shimla, National Aids Control Organisation,NACO, ICTC centre, HIV Test

Woman dies, shock after heard HIV+, Himachal CM Jai Ram Thakur, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்,எச்.ஐ.வி, எச்.ஐ.வி பாசிட்டிவ், சிம்லா, HIV+, Kamla Nehru Hospital, Shimla, National Aids Control Organisation,NACO, ICTC centre, HIV Test

அஷ்வனி சர்மா,

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் முன்னாள் நிருபர், சிம்லா

Woman dies of shock after heard she is HIV+: எச்.ஐ.வி பாசிட்டிவ் என கண்டறியப்பட்டதை அறிந்த 20 வயது பெண் அதிர்ச்சியால் இறந்ததை அடுத்து இமாச்சல முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு முன்னர் கண்டறியப்பட்டபடி எச்.ஐ.வி இல்லை என்று பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகள் காட்டியுள்ளன.

எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண், தனது நிலை குறித்த உரையாடலைக் கேட்டு கோமா நிலைக்குச் சென்றார்.

அவரது கருப்பைக்கு வெளியே வளரும் கர்ப்பத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரோஹ்ருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவர் அறுவை சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சிம்லா மருத்துவமனையில், எச்.ஐ.வி பாசிட்டிவ் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் அவரது கணவரிடமும் பரிசோதனை செய்ய கேட்டிருக்கிறார்கள். இந்த உரையாடலைக் கேட்டு அந்த பெண் கோமா நிலைக்குச் சென்றார்.

சிம்லாவின் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தில் (ஐ.சி.டி.சி) நடத்தப்பட்ட புதிய பரிசோதனைகளில் எச்.ஐ.வி இல்லை என்று தெரியவந்தது. அனால், அதற்குள்அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர் செவ்வாய்க்கிழமை அன்று அங்குள்ள ஐ.ஜி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார். “இது மிகவும் தாமதமானது. எச்.ஐ.விஅதிர்ச்சியையும் களங்கத்தையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று சிம்லாவில் உள்ள ஐ.ஜி.எம்.சி மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண்ணின் சகோதரர் டெஸ் ராஜ் கூறினார்.

எச்.ஐ.வி சோதனைகளின் ரகசியத்தன்மை குறித்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு கூறுவது “எச்.ஐ.வி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய எஸ்.ஐ.வி பரிசோதனை முடிவுகளின் ரகசியத் தன்மை பராமரிக்கப்பட வேண்டும். ஒரு நபரின் தனியுரிமை மற்றும் உரிமைகளுக்கு மரியாதை அளிப்பதற்கும், பழிவாங்கல், பாகுபாடு மற்றும் களங்கப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் இது அவசியம். முடிவுகளை நேரடியாக சம்பந்தப்பட்ட நபரிடம், நோயாளியால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் அல்லது சோதனைக்கு கோரும் மருத்துவரிடம் சீல் வைக்கப்பட்ட உறை ஒன்றில் ஒப்படைக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் போன்றவற்றின் மூலம் எந்த முடிவுகளும் தெரிவிக்கப்படக்கூடாது. பதிவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது.

மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று முதலமைச்சர் தெளிவுபடுத்திய நிலையில், “தவறான எச்.ஐ.வி பாசிட்டிவ் அறிக்கையைத் தயாரித்ததற்காக” தனியார் மருத்துவமனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். விதிகளின் படி பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும், சட்டசபையில் இந்த விஷயத்தை எழுப்பிய ரோஹ்ருவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோகன் லால் பிரக்தாவிடம் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பதிலளித்தார்.

அந்த பெண்ணின் சகோதரர் டெஸ் ராஜ் கூறுகையில், தனது சகோதரிக்கு சில சிக்கல்கள் உருவானதைத் தொடர்ந்து ரோஹ்ருவில் உள்ள சஞ்சீவானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறினார். இருப்பினும், அவருக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவை என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். இது ரோஹ்ருவில் செய்ய முடியாது. சிம்லாவில் உள்ள கமலா நேரு மருத்துவமனையைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், அவர்கள் அவளுடைய பரிசோதனைகள் பற்றிய அறிக்கைகளை ஒப்படைத்தனர். அதில் ஒன்று எச்.ஐ.வி பாசிட்டிவ் என்று காட்டப்பட்டது என்று அந்த பெண்ணின் சகோதரர் கூறினார்.

சிம்லா மருத்துவமனையில் அந்த பெண்ணின் பரிசோதனை அறிக்கைகள் எச்.ஐ.வி பாசிட்டிவ் என்று கூறியதால் அவரது கணவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியது. இந்த உரையாடலைக் கேட்ட தனது சகோதரி கோமாவுக்குள் சென்றதாக டெஸ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர், கமலா நேரு மருத்துவமனை மருத்துவர்கள் அவளை ஐ.ஜி.எம்.சி மருத்துவமனையின் மருத்துவத்துறைக்கு அனுப்பினர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் நடத்திய பரிசோதனைகளில், அவருக்கு முதலில் கண்டறியப்பட்டபடி, அவருக்கு எச்.ஐ.வி இல்லை என்று கண்டறியப்பட்டது.

சிம்லாவின் கமலா நேரு மருத்துவமனைக்கு அனுப்பிய அறிக்கையில் எச்.ஐ.வி நிலையை அவர் குறிப்பிட்டுள்ளதை சஞ்சீவானி மருத்துவமனையின் டாக்டர் சின்மாய் டெப் பார்மா ஒப்புக்கொண்டுள்ளார். “நான் அதை நோயாளி அல்லது அவளுடைய உதவியாளர்களிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. இது கமலா நேரு மருத்துவமனையில் கசிந்துள்ளது. இரண்டாவதாக, எச்.ஐ.வி நிலை தொடர்பான எனது ஆரம்ப பரிசோதனைகளில் நான் கவனித்தவை அனைத்தும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மைய ஆய்வகத்தின் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டவை. நான் எந்த தவறும் செய்யவில்லை, எந்த விசாரணைக்கும் தயார்.” என்று டாக்டர் சின்மாய் டெப் பார்மா தெரிவித்துள்ளார்.

Himachal Pradesh Shimla
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment