Advertisment

சபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Woman enters Agasthyakoodam summit, அகத்தியர் மலை, அகஸ்திய கூடம்

Woman enters Agasthyakoodam summit

Woman enters Agasthyakoodam summit : மேற்கு தொடர்ச்சி மலையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறாது அகத்தியர் மலை. அந்த மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது அகத்திய முனிவருக்கான சிறு கோவில் ஒன்று. கனி என்ற பழங்குடி இனத்தவர்களும் ஆண்களும் மட்டும் வழிபடும் தலமாக இன்று வரை இருக்கிறது இந்த அகத்தியர் கோவில்.  தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் 41 நாட்கள் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

Advertisment

மேலும் படிக்க : எங்கே இருக்கிறது அகஸ்திய கூடம்? எத்தனை வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அங்கு செல்லலாம் ?

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1868 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த அகத்தியர் கூடம். இந்நிலையில் கடந்த வருடம் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வந்த இரண்டு பெண்கள் அமைப்பு, இந்த அகஸ்திய கூடத்திற்கு பெண்களின் வழிபாட்டிற்கு அனுமதி வேண்டி கோரிக்கை மனுக்கள் வைக்கப்பட்டன. மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, அனு சிவராமன் பெண்களின் வழிபாட்டிற்கு உத்தரவிட்டு தீர்ப்பினை வழங்கினார்.

Woman enters Agasthyakoodam summit : 22 கி.மீ நடை பயணம்

நாள் ஒன்றிற்கு 100 பக்தர்கள் வீதம் 47 நாட்களுக்கு 4700 பேர் இந்த கோவிலில் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் செல்லும் 100 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனி பழங்குடியினர் பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், வனத்துறையினர் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தாரலமாக மலையேற்றத்திற்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர். வனப்பகுதியில் சுமார் 22 கி.மீ பயணித்து, மலை அடிவாரம் திரும்ப 3 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் மாவட்டம், போனக்காடு பகுதியில் அமைந்திருக்கும் நெய்யாறு வனக்காப்பகத்தில் இருந்து இந்த மலையேற்றம் துவங்குகிறது. போனக்காடு பகுதியில் நேற்று (திங்கள்) காலை 09:15 மணிக்கு மலையேற்ற நிகழ்வு தொடங்கியது. நேற்றிரவு அதிருமலா பகுதியில் பக்தர்கள் தங்கி மீண்டும் இன்று காலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கனி பழங்குடியினர் போராட்டம்

இந்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வேலை செய்து வரும் மலப்புரம் பகுதியை சேர்ந்த சனல் என்ற பெண் இந்த நூறு பேர் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு பெண் ஆவார்.

பெண்ணின் வருகையைத் தொடர்ந்து அங்குள்ள கனி பழங்குடியினர் போராட்டங்களில் ஈடுபட்டன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாகவும், கனி பழங்குடிப் பெண்களே இங்கு செல்வதில்லை என்றும் கேஷாத்ர கனிக்கர் அமைப்பின் நிர்வாகி மோகனன் திரிவேதி கூறியுள்ளார்.

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment