Advertisment

மாஸ்க் அணிய கற்றுக் கொடுக்கும் பெண் போலீஸ் - வைரல் வீடியோ

Tamil News: வேறு சில சிக்கல் என்னவெனில், மாஸ்க் கிடைக்காமல் போவது ஒன்று; அதிக விலைக்கு விற்கப்படுவது ஒன்ற. அரசு தான் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
women police teach how to wear mask covid 19

women police teach how to wear mask covid 19

Corona Latest Updates: இரண்டு மாதங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல இந்தியாவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சூழலில் மக்கள் இருந்த மனநிலைக்கும், இன்றைய மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை யோசித்துப் பாருங்களே... ச்சே.. அப்பவே கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம் என்றும் நம்மில் பலரும் நினைத்திருப்போம்.

Advertisment

கொரோனா வைரஸ் ஒருவருக்கு வந்தாலே, அந்த ஏரியாவே சீல் வைக்கப்படுகிறது. எவரோ தொற்று வாங்கி வருவதற்கு, ஏதோ ஒரு குடும்பம் அல்லோலப்பட வேண்டியிருக்கிறது.

இந்த முகக்கவச மேட்டரும் அப்படித்தான். கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனாலும், இப்போது வரைக்கும், மாஸ்க் அணியாத சிலரை நம்மால் காண முடிகிறது.

பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா... பீதியில் தெற்கு டெல்லி!

இதில், வேறு சில சிக்கல் என்னவெனில், மாஸ்க் கிடைக்காமல் போவது ஒன்று; அதிக விலைக்கு விற்கப்படுவது ஒன்ற. அரசு தான் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்நிலையில், முதியவருக்கு முகக் கவசம் கொடுத்து அணியும் முறை குறித்து காவல் துறை பெண் அதிகாரி விளக்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள புதுச்சேரியில் காவல் துறையினர் பல்வேறு விதங்களில் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.அந்த வகையில் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ரட்சனா சிங் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையோரத்தில் நடந்து சென்ற ஒரு முதியவர் முக கவசம் அணியாமல் சென்றார்.

ஆந்திராவில் 40 சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா: சுகாதாரத்துறை ஷாக்

அவரை அழைத்து முகக் கவசம் கொடுத்து கண்காணிப்பாளர் அதனை எப்படி அணிவது என பயிற்சியும் அளித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உட்பட பலரும் இந்தபெண் காவல் அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment