Advertisment

6 மாதத்தில் ரூ.18,000 கோடி ”வித்ட்ரா”... யெஸ் வங்கி விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

இந்த வங்கியில் இருந்து நிதி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் இடையூறுகளை சந்திக்க நேர்ந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yes Bank Crisis

Yes Bank Crisis, RANA kapoor

George Mathew

Advertisment

Yes Bank Crisis :  யெஸ் வங்கியின் அடுத்த நிலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலம் வரையில் ரூ. 18 ஆயிரம் கோடி வரை டெபாசிட்டர்கள் இந்த வங்கியில் இருந்து எடுத்துள்ளனர் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அக்டோபர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையில் மேலும் 20% வரை வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தினை திரும்பப் பெற்றிருப்பார்கள் என்று எக்ஸ்பெர்ட்கள் தெரிவித்துள்ளனர்.

பண மோசடி வழக்கில் மும்பையில் அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். மார்ச் 11ம் தேதி வரை விசாரணைக் காவலில் அவர் வைக்கப்பட உள்ளார்.

அந்த வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி, மார்ச் 31ம் தேதி 2019ம் ஆண்டு அவ்வங்கியின் வைப்பு நிதி ரூ. 2,27,610 கோடி ஆகும். ஆனால் செப்டம்பர் மாதம் 30ம் தேதி அந்த வங்கித் தொகை 2,09,497 கோடியாக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வங்கிகளிலோ, ரெப்போ விகிதம் 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட பின்னர், 2019-20 ஆம் ஆண்டில், வைப்புத்தொகைகளில் 9.2 உயர்வு கண்டுள்ளது.

publive-image அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ராணா கபூர் 

Express photo by Nirmal Harindran, 8th March 2020, Mumbai.

யெஸ் வங்கியில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வங்கியில் இருந்து எடுக்கப்படும் பணத்தின் அளவு மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கியது. வங்கியில் பிரச்சனை இருப்பதால் டிசம்பர் மாதத்துடன் முடிவுற்ற மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வைப்புத் தொகையின் அளவு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மேலும் 10 முதல் 20 சதவீதம் குறைந்திருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

To read this article in English

குஜராத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் தொழில் நிறுவனம் ஒன்று தங்களின் வைப்பு நிதியை மொத்தமாக திரும்ப எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அவர்களைப் போலவே திருப்பதி தேவஸ்தானம் ரூ. 1300 கோடியை திரும்ப எடுத்துள்ளது. வதோதரா முனிசிபல் கார்ப்பரேசனால் நிர்வகிக்கப்படும் வதோதரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கம்பெனி தங்களின் ரூ. 265 கோடியை ஆர்.பி,ஐ அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்பு வித்ட்ரா செய்தது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

ஃபிட்ச் ரேங்கிங்ஸ் ( Fitch Ratings ) தங்களின் அறிக்கை ஒன்றில் ”பணம் செலுத்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திருக்கிறது யெஸ் பேங்கினை கையகப்படுத்தும் முறை. ஆனால் ஆர்.பி.ஐயின் இந்த முடிவு எதிர்பார்க்காத விளைவுகளையும் ஏற்படுத்தலாம். தங்களின் வைப்பு நிதியை பாதுகாப்பான இடங்களில் சேமிக்க வேண்டும் என்று மற்ற வங்கிகள் தூண்டினால் விளைவுகள் வேறுவிதமாகவே அமையும். இது பண புழக்க குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக பலவீனமான ஃப்ரான்ச்சைஸ்களின் வைப்பு நிதியுடன் இயங்கும் சிறிய தனியார் வங்கிகளுக்கு இது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளது.

publive-image Express photo by Nirmal Harindran, 8th March 2020, Mumbai.

ஆர்.பி.ஐ விதித்த தடையால் பல நிறுவனங்களின் முதலீடுகள் வங்கியில் சிக்கியுள்ளது. மார்ச் 31, 2019 அன்றைய கணக்கின் படி 20 வாடிக்கையாளர்களின் மொத்த மதிப்பானது ரூ. 24,673 கோடியாகும். இது யெஸ் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் மொத்த பணத்தின் 10.84%-த்தை கொண்டது. செப்டம்பர் 2017ம் ஆண்டு முதல் மார்ச் 2019ம் ஆண்டு வரை இந்த வங்கியில் வைக்கப்பட்ட வைப்புத்தொகையின் அளவு 1,57, 989 கோடியாக உயரத் துவங்கியது. இந்த காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட இந்த வங்கிக்கு ஆர்.பி.ஐ அப்போது குவாலிட்டி ரிவ்யூ நடத்தியது.

ஆர்.பி.ஐ யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பிற்கான திட்டங்களை வெளியிட்டதுடன் எஸ்.பி.ஐ வங்கி, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்கியது தொடர்பாகவும் அறிவித்தது. சனிக்கிழமை எஸ்.பி.ஐ வங்கியின் சேர்மென் ரஜ்னிஷ் குமார் ”யெஸ் வங்கியில் செலுத்தப்பட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும், சில நாட்களுக்கு மட்டுமே வித்ட்ரா கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார்.  அதிக அளவில் பணத்தினை பெற முடியாத நிலையில், இந்த வங்கியில் இருந்து நிதி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்று கிரிசில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சில நிறுவனங்கள் தங்களின் கூடுதல் லிக்விடிட்டியை யெஸ் பேங்கில் முதலீடு செய்துள்ளனர். மேலும் யெஸ் வங்கியில் சிலர் ஃபிக்சட் டெபாசிட் செலுத்தியுள்ளனர். யெஸ் வங்கி சில நேரங்களில் கமர்சியல் பேப்பர் வழங்குநராகும், பேயிங் ஏஜெண்ட்டாகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் துவக்கத்தில்  பஞ்சாப் மற்றும் மகாராஷ்ட்ரா கோ-ஆப்ரேட்டிவ் வங்கிக்கு ஆர்.பி.ஐ விதிகளை அதிகரிக்க துவங்கியதில் இருந்து யெஸ் வங்கி தங்களின் பிரச்சனைகளை சந்திக்க துவங்கியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment