Advertisment

3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு

11ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2019 Nobel Prize winners for medicine announced

2019 Nobel Prize winners for medicine announced

2019 Nobel Prize winners for medicine announced : இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிரெக் செமன்சா, சர் பீட்டர் ராட்க்ளிஃப் மற்றும் வில்லியம் ஜி. கெலின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.மனித உடலில் இருக்கும் செல்கள் எவ்வாறு ஆக்சிஜனை உணர்ந்து கொள்கிறது என்றும், இருக்கின்ற ஆக்சிஜனை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்றும் இவர்கள் மூவரும் நடத்திய ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு செவ்வாய் கிழமை (08/10/2019) அன்றும், புதன் கிழமை (09/10/2019) அன்று வேதியியலுக்கான நோபல் பரிசும், வியாழக்கிழமை (10/10/2019) அன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட உள்ளது. 11ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட உள்ளது.

ஆராய்ச்சி

மனித உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது உடலில் ஈ.பி.ஒ எனப்படும் எரித்ரோபோய்ட்டினின் அளவு அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிக்கும் போது சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது உடல் முழுவதும் மனிதனுக்கு தேவையான ஆக்ஸிஜனை அளிக்கும் திறன் கொண்டவை. ஆனால் இதற்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கும் என்ன தொடர்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் இந்த வருடம் கண்டு பிடித்துள்ளனர்.

ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது எச்.ஐ.எஃப் எனப்படும் புரத மூலக்கூறு இரடிப்பாகிறது. சாதாரண நாட்களில் இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் போது இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இ.பி.ஒ மூலக்க்கூறுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகிறது. இ.பி.ஒவின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அனீமியா போன்ற நோய்கள் உருவாவதும் இவர்களின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள்

சர் பீட்டர் ராட்க்ளிஃப் லண்டனில் இருக்கும் ஃப்ரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்தவர். கெலின் மற்றும் செமென்சா முறையே ஹார்வேர்ட் மற்றும் ஜான்ஸ் ஹோகின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment