3 வாரம் வீட்டை விட்டு வெளியேறவில்லை! ஆனாலும் கொரோனா… அதிர்ச்சியில் அமெரிக்கப் பெண்!

தன்னுடைய வீட்டுக்கு காய்கறி சப்ளை செய்யும் பெண்மணி, தன்னுடைய கணவர், அந்த மருந்தாளுநர் தவிர வேறு யாரையும் அவர் பார்க்கவில்லை

By: April 13, 2020, 12:47:17 PM

American Woman who didnt leave her house for three weeks infected with corona : கொரோனா வைரஸின் தாக்கதால் உலகமே உறைந்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்லவும், நமக்கு நெருங்கிய நண்பர்களுக்கு கை கொடுக்கவும் கூட பயமாய் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை. ஆனாலும் கொரோனா நோய் தொற்று எங்கிருந்தாலும் நம்மை அச்சுறுத்துகிறது. காரணம் அது யாரிடம் இருந்து நமக்கு வரும் என்பதே தெரியாமல் இருப்பது தான்.

மேலும் படிக்க : 22-நாள் கைக் குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரி

நோய் பரவலின் தீவிரம் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற காரணங்களால் மூன்று வாரம் வீட்டை விட்டு வெளியேறாமலேயே ஒரு பெண் அமெரிக்காவில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு மருந்தகம் ஒன்றுக்கு சென்று திரும்பியவர் பிறகு எங்குமே செல்லவில்லை. ஆனாலும் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் பெரிதும் அச்சம் அடைந்துள்ளார்.

மேலும் படிக்க : கொரோனாவே வந்தாலும் சாதி தான் முக்கியம்! எஸ்.சி பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த நோயாளிகள்…

தன்னுடைய வீட்டுக்கு காய்கறி சப்ளை செய்யும் பெண்மணி, தன்னுடைய கணவர், அந்த மருந்தாளுநர் தவிர வேறு யாரையும் அவர் பார்க்கவில்லை. ஆனால் அவருடைய வீட்டுக்கு காய்கறி வழங்கும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர் அளிக்கும் காய்கறிகளை வாங்கும் போது க்ளவ்ஸ் ஏதும் போடாமல் வங்கியதால் அந்த பெண்ணிடம் இருந்து இவருக்கு நோய் தொற்று பரவியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:American woman who didnt leave her house for three weeks infected with corona

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X