Advertisment

ஆட்டம் கண்ட ராஜபக்சே சகோதரர்களின் கோட்டை

மக்களுக்கு இந்தத் தருணத்தில் எங்களால் எந்தவொரு உதவியையும் செய்ய முடியவில்லை. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் ஆதரவாளர்களிடம் எங்களின் முகத்தை காண்பிக்க முடியவில்லை.

author-image
WebDesk
New Update
ஆட்டம் கண்ட ராஜபக்சே சகோதரர்களின் கோட்டை

இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது டாங்கல்லே. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பூர்விகம் அதுதான்.

Advertisment

எப்போதெல்லாம் பூர்வீக இல்லத்துக்கு அவர் வருகிறாரோ அப்போது மக்கள் அங்கே கூட்டம் கூட்டமாக திரண்டு வரவேற்பார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது.

"2009இல் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை அவர் வெற்றிகரமாக முடித்த பிறகு, நாங்கள் பெருமை அடைந்தோம். ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. இப்போது அவரை நான் பார்த்தேன் என்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஆனால், இப்போது நீங்கள் வேறு ஒருவரிடம் உங்கள் வேலையை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறுவேன்" என்று வாகன ஓட்டுநரான ரோஷன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்து போனதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதள பாதாளத்துக்குச் சென்றது என்கிறார்.

ரோஷனை போன்று கடந்த வாரம் 200 மாணவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி கோஷம் எழுப்பினர்.

publive-image

ராஜபக்சேவின் இல்லம்.

அதிபரின் இல்லத்தை நோக்கி அவர் முன்னேற முயன்றபோது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை விரட்டி அடித்தனர். தற்போது அவரது வீட்டுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹம்பன்தோட்டா மாவட்டத்தில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் மகந் நமல், சமல் மற்றும் உறவினர் அஜித் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். 2019 அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு 66 சதவீத வாக்குகளை அளித்த மாவட்டம் ஹம்பன்தோட்டா.

ஆனால், இன்று மக்கள் எழுச்சியுடன் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாய விலைக் கடை முன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் கூறுகையில், நானும் ராஜபக்சேவுக்கு தான் வாக்களித்தேன். ஆனால், எங்களிடம் இருப்பதை கொண்டு வாழ வேண்டியதாக இருக்கிறது.

வரும் 14ஆம் தேதி எங்களுக்கு புத்தாண்டு வருகிறது. ஆனால், அதற்கான எந்தவொரு கொண்டாட்ட மனோபாவமும் எங்களிடம் இல்லை என்கிறார் வேதனையுடன். ஹம்பன்தோட்டா நகராட்சிக் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட மாலினி ஹரீம் கூறுகையில், ராஜபக்சேவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

ஒரே குரலில் ஒன்றுபடும் இலங்கை; மங்கும் இனப் பிரச்னை

இது அவர்களுடைய கோட்டையாக கருதப்பட்டது. இங்கு எப்போதுமே ராஜபக்சேவுக்கு ஆதரவாக தான் மக்கள் வாக்களித்து வந்தனர். ஆனால், இப்போது அவர்களது மனநிலை முற்றிலும் மாறிவிட்டது.

மதம், இனம், மொழி ஆகியவற்றை வைத்து ஒரு நாட்டை துண்டாடக் கூடாது என்று மக்கள் புரிந்துகொண்டனர் என்கிறார் மாலினி.

publive-image

ஹம்பன்தோட்டாவை கொழும்புக்கு நிகரான நகரமாக மாற்றுவேன் என்று கூறிய ராஜபக்சே, ஹம்பன்தோட்டாவில் சீனாவுக்கு துறைமுகம் கட்டிக்கொள்ள குத்தகைக்கு கொடுத்து, மட்டலா விமான நிலையம் மற்றும் ஒரு மாநாட்டு மையம் அமைத்தது என பணத்தை வீணடித்து விட்டனர் என்கிறார் மாலினி.

ராஜபக்சே கட்சியுடன் கூட்டணி அமைத்து 2019 அதிபர் தேர்தலையும், 2020 நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்த இலங்கை சுதந்திர கட்சியின் சிதி சபீனா ரெஜிக் கூறுகையில், நாங்கள் இனி ராஜபக்சேவுடன் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றார்.

மக்களுக்கு இந்தத் தருணத்தில் எங்களால் எந்தவொரு உதவியையும் செய்ய முடியவில்லை. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் ஆதரவாளர்களிடம் எங்களின் முகத்தை காண்பிக்க முடியவில்லை. என்கிறார் சிதி சபீனா ரெஜிக்.

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சேவுக்கு இருக்கும் செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதே கள நிலவரமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment