மகனாக நடித்த நடிகருடன் உறவுக் கொண்ட நடிகை.. இழப்பீடு கேட்ட நடிகர்!

படத்தில் நடிக்கும் போது  ஜிம்மி பென்னட்க்கு 17 வயது ஆசியாவுக்கு 37.

மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆசியா அர்ஜெண்டோ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகை ஆசியா அர்ஜெண்டோ:

The Heart is Deceitful Above All Things என்ற ஹாலிவுட் படத்தில்  தாய் மற்றும் மகனாக நடித்தவர்கள் ஆசியா அர்ஜெண்டோ மற்றும் ஜிம்மிம் பென்னட்.  இந்த படத்தில் நடிக்கும் போது  ஜிம்மி பென்னட்க்கு 17 வயது ஆசியாவுக்கு 37.

இந்த படத்திற்கான படம்பிடிப்பில்  ஜிம்மிம் மீது ஆசியா அளவுக்கு அதிகமாக பாசம் காட்டியுள்ளார்.  இந்த பாசம் நாளடைவில்  காதலாக மாறியுள்ளது. இந்நிலையில்,  தான் பிரபல ஹோட்டல் ஒன்றில்  ஆசியா,  ஜிம்மிம்மை பாலியல்  துஷ்பிரயோகம் செய்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியா அர்ஜெண்டோ

நடிகை ஆசியா அர்ஜெண்டோ

17 வயதான ஜிம்மிற்கு  அதிகளவு ஆல்கஹாலை கொடுத்தும் , அவரிடம் தான் எழுதிய காதல் கடிதங்களை ஆசியா  காட்டியுள்ளார்.   இந்த சம்பவத்தினால்  மனதளவில் பாதிகப்பட்ட  ஜிம்மிம் பென்னட் தனக்கு  3.5 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொர்ந்துள்ளார்,

தற்போது 22 வயதாகும் ஜிம்,  நீதிமன்றத்தில் இப்படியொரு வழக்கை  தொடர்ந்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 வருடங்களுக்கு முன்பு  ஆசியா, ஜிம்மிம்வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்

My son my love until I will live @jimmymbennett marina del rey 05.2013

A post shared by asiaargento (@asiaargento) on

இந்நிலையில், நீதிமன்றம் வரை சென்றால் இதுக் குறித்த பல தகவல்கள் மீடியாவில் வெளியாகும் என்ற எண்ணிய நடிகை   ஆசியா அர்ஜெண்டோ நீதிமன்ற வாசலில் வைத்தப்படி ஜிம்மிம் பென்னட்டிற்கு   380,000 டாலர்கள் கொடுத்து  பிரச்சனையை சுமூகமாக முடித்துள்ளார்.

இந்த விவகாரம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகன் வயது நடிகை,  ஆசியா  பாலியல் துஷ்பிரயோகம்  செய்த செயல் கண்டிக்கதக்கது என்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close