பில்கேட்ஸ் நிதியளித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி – 12 மாதத்தில் ரெடியாக வாய்ப்பு

உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், ஒரு தடுப்பூசிக்கான ஏழு நம்பிக்கைக்குரிய யோசனைகளைத் உருவாக்க நிதியளித்துள்ளார். “எல்லாம் சரியாக நடந்தால், நாங்கள் பெரிய அளவிலான தடுப்பு மருந்து உற்பத்தியில் இருப்போம்” என்று சி.என்.என் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பில்கேட்ஸ் கூறினார். மேலும், “இது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்” என்றும் கூறியுள்ளார். மோசமான சூழல் நிலவும் போது இத்திட்டம் பலனளிக்குமா? இத்தாலியில் கொரோனா நிலை என்ன? சிலர் கூறியது போல, தடுப்பூசி உற்பத்தி செப்டம்பரில் தொடங்கப்படாது. […]

Bill Gates’s covid 19 vaccine could be ready in 12 months
Bill Gates’s covid 19 vaccine could be ready in 12 months

உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், ஒரு தடுப்பூசிக்கான ஏழு நம்பிக்கைக்குரிய யோசனைகளைத் உருவாக்க நிதியளித்துள்ளார்.


“எல்லாம் சரியாக நடந்தால், நாங்கள் பெரிய அளவிலான தடுப்பு மருந்து உற்பத்தியில் இருப்போம்” என்று சி.என்.என் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பில்கேட்ஸ் கூறினார். மேலும், “இது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்” என்றும் கூறியுள்ளார்.

மோசமான சூழல் நிலவும் போது இத்திட்டம் பலனளிக்குமா? இத்தாலியில் கொரோனா நிலை என்ன?

சிலர் கூறியது போல, தடுப்பூசி உற்பத்தி செப்டம்பரில் தொடங்கப்படாது. டாக்டர். ஃபாசியும் நானும் 18 மாதங்கள் மிக அதிகமாக இல்லாத எதிர்பார்ப்புகளை உருவாக்க மிகவும் உறுதியுடன் இருக்கிறோம்” என்கிறார் பில்கேட்ஸ்.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநரும், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினருமான அந்தோனி ஃபாசியைப் பற்றி கேட்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “5 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் இதுவரை அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளன. இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம்” என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கா தற்போது இருக்கும் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், மீண்டும் அதிவேக வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். அனைத்து மாகாணங்களும் நியூயார்க்குடன் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்படும். இதிலிருந்து மீண்டு வருவதும் பெரும் சிரமமாக இருக்கும். உலக சுகாதார அமைப்பு உட்பட, பல சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் பரிந்துரைப்படி செயல்படுவது நல்லது’ எனத் தெரிவித்துள்ளார்.

சாதித்து காட்டிய வுஹான்! முற்றிலுமாக கொரோனா இல்லா நிலையை எட்டியது!

சீனா, கொரோனா வைரஸ் தொடர்பாக சில விஷயங்களை மறைக்க முயன்றதாகவும், தவறான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த பில்கேட்ஸ், “வைரஸ் முதலில் தோன்றியதும், பிற நாடுகளைப் போல சீனாவும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்தது. தங்கள் நாடு கடுமையான பொருளாதார சரிவை சந்திக்காமல் பார்த்துக்கொண்டது. அவர்களே தங்களை மீண்டும் சோதித்துக்கொண்டால், வைரஸ் பரவலில் எங்கு தவறு நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பல நாடுகளும் வைரஸ் பரவலுக்கு எதிராக மிக வேகமாகச் செயல்பட்டன. மேலும், அந்த நாடுகள் நம்பமுடியாத பொருளாதார வலியைத் தவிர்த்துள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் அமெரிக்கா மோசமாகச் செயல்பட்டதுதான் வருத்தமளிக்கிறது. ஆனால், அதைப் பற்றி பேசும் நேரம் இது இல்லை. நம்மிடம் உள்ள சிறந்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது. சோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆகியவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bill gatess covid 19 vaccine could be ready in 12 months

Next Story
மோசமான சூழல் நிலவும் போது இத்திட்டம் பலனளிக்குமா? இத்தாலியில் கொரோனா நிலை என்ன?coronavirus lockdown relaxation measures announced by Italy prime minister Giuseppe Conte
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com