கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சம் மக்கள் நகரை விட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதோடு நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளது. ஹாலிவுட் ஹில்ஸ் ஸ்க்ரப்லேண்டிலும் ஒரு புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் தலைவர் கிறிஸ்டின் குரோலி அறிவித்தார்.
மேலும் ஐந்து தீ ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த சாண்டா அனா காற்று, பொதுவாக அதிக காட்டுத்தீ அபாயங்களுடன் தொடர்புடையது. இதனால் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் சவாலாக உள்ளது என்றார்.
இந்நிலைலயில், இந்த காட்டுத் தீயில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள், நடிககைகளின் பல கோடி மதிப்புள்ள வீடுகள் எரிந்து சேதமாகி உள்ளது. சிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதிகள் வசதியான மக்கள் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளில் காட்டுத்தீ அழித்துள்ளது.
ஜேமி லீ கர்டிஸ், மார்க் ஹாமில் மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் வூட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும், இவர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். மூர், கேரி எல்வெஸ் மற்றும் பாரிஸ் ஹில்டன் ஆகியோர் புதன்கிழமை காட்டுத் தீயில் வீடுகளை இழந்ததாகக் கூறினர்.
இதுகுறித்து துணைத் அதிபர் கமலா ஹாரிஸ் X பதிவில், “நாள் முழுவதும், நான் கலிபோர்னியாவில் உள்ள மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளேன். அதிபர் ஜோக பிடனும் நானும் தற்போதைய காட்டுத் தீயை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.