Advertisment

பூடானுடனான கிழக்கு எல்லையில் உரிமை கோரும் சீனா - புது பூகம்பம்

இது "பூட்டானுக்கு எதிரான அழுத்தம் கொடுக்கும் சீனாவின் தந்திரங்களின் ஒரு பகுதி"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india china, bhutan china border, இந்தியா, சீனா, பூடான், எல்லை பிரச்சனை, தேசிய செய்திகள், sakteng wildlife sanctuary, china claims bhutan border, bhutan china relations,

india china, bhutan china border, இந்தியா, சீனா, பூடான், எல்லை பிரச்சனை, தேசிய செய்திகள், sakteng wildlife sanctuary, china claims bhutan border, bhutan china relations,

லடாக் எல்லையில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள், இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக,சீனா முதல்முறையாக தெரிவித்துள்ளது.

Advertisment

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா - பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. அதனால். பூடானுடன் எல்லை பிரச்னை நீண்டகாலமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 1984 முதல் 2016ம் ஆண்டு வரை, 24 முறை சீனாவும், பூடானும் பேச்சு நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை சீனா வைத்துள்ளது. இந்த பிரச்னையில், மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை, சீனாவை குற்றம்சாட்டவும் உரிமையில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கிழக்கு பூட்டானின் டிராஷிகாங் மாவட்டத்தில் உள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியின் (ஜிஇஎஃப்) ஆன்லைன் கூட்டத்தில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக் செல்வதற்கான கோரிக்கையை ஆட்சேபிக்கும் போது பெய்ஜிங் இந்த கோரிக்கையை முன்வைத்தது. 1992 இல் அமைக்கப்பட்ட, GEF என்பது சுற்றுச்சூழல் துறையின் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய அமைப்பாகும்.

பூட்டான் சீனக் கோரிக்கையை எதிர்த்தது. GEF கவுன்சில் இந்த திட்டத்திற்கு அனுமதியளித்து நிதியளித்தது. GEF தரப்பிலான தகவலின் படி, சீனக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது - ஆனால் இரு கட்சிகளின் கருத்துக்களும் சில நிமிடங்களில் பிரதிபலித்தன என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவுல செத்து செத்து வெளையாட புதுசா கேம் கண்டுபிடிச்சுருக்காங்க மக்கா...

பூட்டானை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் அபர்ணா சுப்பிரமணி ஐ.ஏ.எஸ். பிரதிநிதித்துவப்படுத்தினார்.  அவர் செப்டம்பர் 1, 2017 முதல் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவல் குறித்து சீன பிரதிநிதி கூறுகையில், “திட்ட ஐடி 10561 இல் உள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் சீனா-பூட்டான் சர்ச்சைக்குரிய பகுதிகளில் அமைந்துள்ளது. இதனால், கவுன்சில் முடிவை சீனா எதிர்த்தது மட்டுமின்றி, அதில் சேரவும் இல்லை.

இந்திய, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்கான கவுன்சில் உறுப்பினர் பூட்டானின் கருத்துக்களை பின்வருமாறு பிரதிபலிக்குமாறு கேட்டுக்கொண்டார்: “பூட்டான் சீன கவுன்சில் உறுப்பினர் கூறிய கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மை கொண்ட பிரதேசமாகும், பூட்டானுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை விவாதங்களின் போது எந்த நேரத்திலும் இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக இடம்பெறவில்லை" என்று தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதுடெல்லியில் உள்ள தூதரகம் மூலம் பூட்டான் தனது நிலையை சீனாவிற்கு தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது - இரு நாடுகளுக்கும் அந்தந்த நாடுகளில் தூதரகங்கள் இல்லை என்பதால், டெல்லி மூலம் அவர்களின் தகவல்தொடர்புகளைமேற்கொள்கின்றன.

பூட்டான் மற்றும் சீனா ஆகியவை 24 சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், அடுத்த சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் பெய்ஜிங் இந்த பிரச்சினையை எழுப்பினால், திம்பு அதை எதிர்கொள்ளும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

பூட்டானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 650 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது, கடந்த காலங்களில் சீனாவால் இது குறித்து விவாதிக்கப்படவில்லை.

இப்போது இந்த விஷயத்தை சிக்கலாக்கியது என்னவென்றால், சீன வெளியுறவு அமைச்சகம், சனிக்கிழமை பெய்ஜிங்கில் இந்துஸ்தான் டைம்ஸுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. கிழக்கு, மத்திய மற்றும் மேற்குத் துறைகளில் நீண்ட காலமாக சர்ச்சைகள் நிலவுகின்றன, மேலும் புதிய சர்ச்சைக்குரிய பகுதிகள் எதுவும் இல்லை. சீனா-பூட்டான் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா எப்போதும் விரும்புகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

சீனா-பூட்டான் எல்லைப் பிரச்சனையில் "மூன்றாம் தரப்பு தலையிடக் கூடாது" என்று மாண்டரின் அறிக்கை மேலும் கூறியுள்ளது. இது வெளிப்படையாக இந்தியாவை பற்றி குறிப்பதே ஆகும்.

இதுகுறித்து தொடர்பு கொண்டபோது, புது டெல்லியில் உள்ள சீன தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. பூட்டான் தூதரகமும் சீனாவின் புதிய கிளைம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், பூட்டான் மற்றும் சீனா ஆகியவை வடக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு புள்ளிகளில் மட்டுமே சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கொண்டிருந்ததால், வெளியுறவு அமைச்சகம் இந்த புதிய கூற்றுக்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. 1984 மற்றும் 2016 க்கு இடையிலான 24 சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளின் படி இது பரவலாக அறியப்பட்டுள்ளது.

2020 பேரழிவின் காலம் தான் ; நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் மரணம்!

டோக்லாம் எல்லையைத் தடுத்து நிறுத்திய 2017 முதல் இரு நாடுகளுக்கும் இடையில் எந்த சந்திப்பும் இல்லை. "திட்டமிடல் சிக்கல்கள்" காரணமாகவும் பின்னர் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாகவும் சந்திப்பு நடைபெறவில்லை. கலபானி பகுதியில் இந்தியாவுக்கு ஏற்கனவே நேபாளத்துடன் எல்லை தகராறு இருப்பதால், டெல்லியில் பலர் சீனா ஒரு புதிய விவகாரத்தை முன்னெடுப்பதாகவே பார்க்கிறார்கள்.

சீனாவின் முன்னாள் இந்திய தூதர் அசோக் கே காந்தாவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக தொடர்பு கொண்டபோது,  “சீனா, பூட்டானுக்கு எதிரான தனது பிராந்திய உரிமைகோரல்களை விரிவுபடுத்துகிறது. மேற்கு மற்றும் மத்திய துறைகளில் பூட்டான் மற்றும் சீனாவால் அடையாளம் காணப்பட்டு கூட்டாக கணக்கெடுக்கப்பட்ட Sakteng சர்ச்சைக்குரிய பகுதிகளில் இல்லை” என்றார். அசோக் கே காந்தா தற்போது சீன ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிகிறார்.

இது "பூட்டானுக்கு எதிரான அழுத்தம் கொடுக்கும் சீனாவின் தந்திரங்களின் ஒரு பகுதி" என்றும், "சீனாவின் அண்டை நாடுகளுக்கும், நிலம் மற்றும் கடல்சார் நாடுகளுக்கும் எதிராக, பழைய மற்றும் புதிய, போட்டியிடும் பிராந்திய உரிமைகோரல்களைப் பின்பற்றுவதற்கான ஒரு பகுதியாகும்" என்றும் காந்தா கூறினார்.

பூட்டானின் முன்னாள் இந்திய தூதர் வி பி ஹரன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “இது ஒரு ஆச்சரியமான புதிய வளர்ச்சி. சாக்டெங் அல்லது கிழக்கு பூட்டானின் வேறு எந்த பகுதியும் சர்ச்சைக்குரியதாக இல்லை. சாக்டெங் சீனாவின் எல்லையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. எல்லையின் இரண்டு பிரிவுகளில் மட்டுமே ஒரு சர்ச்சை உள்ளது: அவை வடக்கில் - பாசம்லுங் மற்றும் ஜகார்லுங், மற்றும் மேற்கில் - டோக்லாம் மற்றும் கிழக்கில் சில அருகிலுள்ள பகுதிகள் ஆகும். கூட்டு கள ஆய்வு முறையே 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment