Advertisment

கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை : உண்மையை மறைத்த சீனா!

சீனாவின் ஹூபேவில் இருக்கும் வுஹானில் இதற்கு முன்பு, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,869 என்று அறிவித்திருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates Live, Coronavirus latest news

Corona Updates Live, Coronavirus latest news

China's Wuhan revises coronavirus death toll up by 50 percent : கொரோனா வைரஸின் தீவிரம் குறித்து முறையாக உலகுக்கு சீனா அறிவிக்கவில்லை என்றும், சீனாவில் இருக்கும் ஆராய்ச்சி கூடத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்றும், கொரோனா வைரஸின் பரவலை அந்நாடு  தடுக்க தவறிவிட்டது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்நாட்டின் மீது எழுந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் வுஹானில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை இன்று தான் அறிவித்துள்ளது சீன அரசு. இதற்கு முன்பு அறிவித்திருந்த பலி எண்ணிக்கையில் 50% அதிகமாக, கூடுதல் உயிரிழப்பு எண்ணிக்கைகளை இணைத்துள்ளது சீன அரசு.

சீனாவின் ஹூபேவில் இருக்கும் வுஹானில் இதற்கு முன்பு, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,869 என்று அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக 1,290 உயிரிழப்புகளை இணைத்துள்ளது. வுஹானில் கொரோனா வைரஸூக்கு மொத்தமாக உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 4,632 ஆகும். அதே போன்று இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,692-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 20 நொடிகள் சோப்பினால் கைகளை கழுவ வேண்டும்… பாடத்தினை முறையாக கற்ற குரங்கு!

உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில் கொரோனா வைரஸை, பெருங்கொள்ளை நோயாக அறிவிக்கவில்லை என்றும்,  சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது என்றும், உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்க வழங்கும் நிதியை அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment