Advertisment

மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!

65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய  சீன செய்தியாளர்!

நரேந்திர மோடி, சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா விரைந்துள்ளர். இவரின் வருகையை சீனா செய்தி தொடர்பாளர் தமிழில் பேசி அறிவித்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Advertisment

இந்திய நாட்டின் பிரதமர் மோடி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். சீனாவின் குயிங்டோ நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று(9.6.18) மற்றும் நாளை பங்கேற்கிறார். இதில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால்,இந்த மாநாட்டில் முதல்முறையாக இந்தியா கலந்துகொள்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த மாநாட்டில் தற்போது சீனா, பாகிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர்களாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சீனாவின் குயிங்டோ நகரில் உள்ள தேசிய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கினார், அவருக்கு சீன அரசு சார்பாக முப்படை மரியாதை அளிக்கப்பட்டது. மோடியின் சீன வருகையை சீனா செய்தி தொடர்பாளர் ஒருவர் தமிழிலியே அனைவருக்கும் வழங்கினார். இந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சீனாவைப் பொருத்தவரையில் அங்குய் எப்போதுமே தமிழ் மொழிக்கு பெரிதளவில் மதிப்பும், மரியாதையும் செலுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் செயல்பட்டு வரும் அரசு வானொலி சேவையிலும் தமிழ் மொழி

இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். பெரும்பாலானோர், சீனாவைச் சேர்ந்தவர்கள் என 20 பேர்கள் இந்த சேவையை வழங்குகின்றன. தமிழ் மொழியில் இவர்கள் தொகுத்தி வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இந்த ரேடியோ சேவையில் வழங்கப்படும் 65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment